எங்களைப்பற்றி

மாதாந்திர நிகழ்வுகள்

வளரும் கவிஞர்களையும் அவர்தம் படைப்புகளையும் ஊக்கப்படுத்தும் விதமாக மாதம்தோறும் நடைபெறும் கவிமாலையில் சிறந்த கவிதைகள் தேர்வு செய்யப்பட்டு கீழ்க்கண்ட பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.   

 1. முனைவர் ரெத்தின வெங்கடேசன் அவர்களின் அம்பிகா அம்மாள் ரெத்தினவேலு அறக்கட்டளை வழங்கும் ரொக்கப்பரிசு 50 வெள்ளி
 2. அடுத்த  நிலையில்  தேர்வு பெறும் மூன்று  கவிதைகளுக்கு வணிக வள்ளல் திரு ஜோதி மாணிக்கவாசகம் அவர்கள் வழங்கும் தலா  30 வெள்ளி ரொக்கப் பரிசுகள்
 3. அடுத்து தேர்வு பெரும் மூன்று கவிதைகளுக்கு தொழில் முனைவர் திருமதி விஜி ஜகதீஷ்  அவர்கள் வழங்கும் தலா 20 வெள்ளி ரொக்கப்பரிசுகள்
 4. சிறந்த மரபுக் கவிதைக்காக, மூத்த கவிஞர் பாத்தேறல் இளமாறன் அவர்கள்  வழங்கும் ரொக்கப்பரிசு 50 வெள்ளிப் பரிசு

ஒவ்வொரு கவிமாலை இறுதியிலும் இரவு உணவு வழங்கும் சேவையை, கவிமாலையில் பங்கு பெறும் ஒருவர் புரவலராகி இனிது உவந்து தொடர்ந்து எற்றுக் கொண்டு வருகிறார்கள்.

இலக்கண வகுப்பு

வளரும் கவிஞர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக  கவிஞர் .து.மு இக்பால்  அவர்களைத் தொடர்ந்து .வீ.விசயபாரதி அவர்கள் மாதந்திரக் கவிமாலை நிகழ்வில் நடத்தும், தமிழ் யாப்பு  இலக்கணம் பயிற்சியின் வழியாக, நல்ல மரபுக் கவிஞர்கள் உருவாகி   வருகிறார்கள்.

கவிமாலையில் பெற்ற இலக்கண பயிற்சிகளைக்   கொண்டு   மரபுக் கவிதை வடிக்கக் கற்றுக் கொண்ட கவிஞர்கள் சிங்கப்பூர் தேசிய  அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கு பெற்று பரிசுகளை பெற்று வருகிறார்கள்.

கவிதைப் பயிலரங்கு  

2012 ஆம் ஆண்டு முதல்  மாணவர்களிடம் கவிதை எழுதும் ஆற்றலை வளர்த்திட   அவர்களுக்கு பயிற்சிப்பட்டறைகள் நடத்தி,  அன்றே கவிதைப் போட்டியும் நடத்தி,   ஏப்ரல் மாதத் தமிழ் மொழி விழாவில் அவர்களுக்கு தங்க காசுகள் அல்லது ரொக்கப் பரிசுகள் கொடுத்தும்  அவர்களிடம் கவிதை எழுதும் ஆர்வத்தை வளர்த்து வருகிறது.  

2016-ஆண்டு தமிழ் மொழி விழாவில் புரவலர் ஹாஜி அப்துல் ஜலீல் வழங்கிய 3000 வெள்ளித் தொகை வெற்றி பெற்ற 16 மாணவர்களுக்குப் பரிசுகளாகப் பகிர்ந்தளிக்கப்பட்டது

 • முதல் பரிசு: தலா 500 வெள்ளி வீதம் 2 பரிசுகள்
 • இரண்டாம் பரிசு : தலா 300 வெள்ளி வீதம் 2 பரிசுகள்
 • மூன்றாம் பரிசு : தலா 200 வெள்ளி வீதம் 2 பரிசுகள்
 • ஆறுதல் பரிசு : தலா 100 வெள்ளி வீதம் 10 பரிசுகள்.

தமிழ் மொழி விழா -2016

வளர்தமிழ் இயக்கத்தின் ஆதரவில் நடைபெறும் தமிழ்  மாத விழாவில் கவிமாலை தன்னை இணைத்துக்கொண்டு 2009 ஆண்டு தொடங்கி, தமிழ் மொழி விழாவின் முத்தாய்ப்பான நிறைவு நாள்  விழாவை  நடத்தி  வருகிறது.  

கடந்த  ஏழு  ஆண்டுகளாக அந்த விழாவை மறைந்த தமிழ் அறிஞர்களின்   புகழ் போற்றும் விழாவாக கவிமாலை நடத்தி வருகிறது.  2016-ஆம் ஆண்டு சிங்கப்பூர் தமிழ்ச் சான்றோர் புகழ் போற்றும் விதமாக கீழ்க்கண்ட சான்றோர்களைப் பற்றி உள்ளூர் தமிழ் அறிஞர்கள் நினைவுச் சொற்பொழிவுகள் நிகழ்த்தினர்.

 1. கவிஞர் சிங்கை முகிலன்
 2. சொற்கொண்டல் முருகு சீனிவாசன்
 3. தமிழ் நெறிக் காவலர் அ. விக்டர்

மலேசிய இளையர் விளையாட்டுத் துறைத் துணை அமைச்சர் மாண்புமிகு டத்தோ சரவணன் அவர்கள் ‘தலைமுறை தாண்டும் தமிழ்’ என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

2016-ஆம் ஆண்டு தமிழ் மொழி விழாவுக்கான செலவுக்கு,  அப்பல்லோ செல்லப்பா உரிமையாளர் திரு சே. சங்கரநாதன்,  அபிராமி நகைக்கடை உரிமையாளர் திரு  எஸ். பழனியப்பன், முன்னாள் நாடாளுமன்ற நியமன உறுப்பினர் திரு இரா.தினகரன் ஆகியோர் நன் கொடை வழங்கினார்கள்.

விருதுகள்

வளரும் கவிஞர்களை ஊக்குவிப்பதையும், சிங்கப்பூரில் கவிதை இலக்கியத்தை ஆக்கப்பூர்வமாக வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டு, கவிமாலை தொடர்ந்து கீழ்கண்ட விருதுகளை வழங்கி வருகிறது.

 1. 2003 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் சிங்கப்பூர் தமிழ் இலக்கியத்திற்காகப் பணியாற்றிய சிறந்த படைப்பாளிக்கு கணையாழி விருது

கணையாழி விருதுக்கான செலவை ஏற்றுக் கொண்டவர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை நிறுவனர் புரவலர்  திரு எம்.ஏ.  முஸ்தபா.

 1. 2009 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் சிங்கப்பூரில் வெளியிடப்படும் சிறந்த கவிதை நூலுக்கான தங்கப்பதக்க விருது.

தங்கப்பதக்க விருதை, மறைந்த  வெண்பாச் சிற்பி வி. இக்குவனம் நினைவாக அவர்களின் புதல்வர்கள் . பாலசுப்பிரமணியன்  மற்றும் . சாமிநாதன் ஆகியோர் புரவலராக வழங்கினார்கள்.

 1. 2010 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் மாதந்திரக் கவிமாலையில் தேர்வு பெரும் கவிதைகளில் சிறந்த கவிதையை எழுதிய கவிஞருக்கு இளங்கவிஞர் தங்க முத்திரை விருது.

தங்க முத்திரை விருதுக்கான செலவை ஏற்றுக் கொண்ட புலவர் வைர வணிகர் திரு  மு . இராமமூர்த்தி

நூல் வெளியீடுகள்

நமது கவிமாலை கடந்த காலங்களில் பல்வேறு நூல் வெளியீடுகள், இசை வட்டு வெளியீடுகள் ஆகியவற்றை நடத்தி , அற்றை வெளியிடும்  கவிஞர்களையும் படைப்பாளிகளையும் ஊக்கப்படுத்தி வருகிறது.. இதுவரை 90 க்கும் மேற்ப்பட்ட இலக்கிய படைப்புகளை வெளியிட்டும், வெளியீடுகளுக்கு கவிமாலை தொடர்ந்து ஆதரவளித்து வந்துள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டுமுதல் கவிமாலையில் மாதம்தோறும் படைக்கப்படும்  கவிதைகளில்  சிறந்த கவிதைகள் தேர்வு செய்யப்பட்டு ,பங்குபெறும் அனைத்து கவிஞர்களின் கவிதைகளும் இடம்பெறும் வண்ணம்  நூலாகத் தொகுக்கப்பட்டு ஆண்டுதோறும் கவிமாலை கவிதை தொகுப்பு வெளியிடப்படுகிறது.

அந்நூல் அச்சிடவும் வெளியிடவும் ஆகும் செலவுகளை புரவலர்கள் ஏற்றுக் கொள்வதால் கவிமாலை விழாவில் அத்தொகுப்பு நூல் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது.  2016-ஆண்டு வெளியிட்ட ‘சொல் மழை’ என்ற கவிதைத் தொகுப்பிற்கான செலவுத் தொகையை கவிஞர் இறை.மதியழகன் நன்கொடையாக வழங்கினார்.

பொதுவானவை

ஆண்டுதோறும் பொது விடுமுறை நாளன்று கவிமாலை  உறுப்பினர்கள் குடும்பத்துடன் பேருந்தில் முழுநாள் கவிமாலை நிகழ்வை நடத்தி வருகிறார்கள். அந்த மரபைப் பின்பற்றி 2015 டிசம்பர் மாதக் கவிமாலை நிகழ்வை கவிஞர்கள்  சிங்கப்பூரில் புதிதாகத் துவங்கப்பட்ட டவுண்டன்-2 விரைவு இரயிலில் பயணம் செய்து இறுதியில் சிங்கப்பூர் புதிய மரபுடமைச் சின்னமாக யுனெஸ்கோவால் ஏற்றுக் கொள்ளப்பட்ட சிங்கப்பூர் தாவரவியல் பூங்காவில் சிறப்பாக நடைபெற்றது.

கவிமாலை நிகழ்வுகளில் கவிமாலைக் கவிஞர்களுக்கு பயிற்சிக் கவியரங்குகள் நடத்தியும் , தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளில் கவிஞர்கள் பங்குபெற ஆலோசனைகள் வழிகாட்டுதல்கள் நல்கியும் வருகிறது.

அனைத்து வழிகளிலும் படைப்பாளிகளுக்கு ஊக்கமூட்ட ஆண்டுதோறும் உதவிவரும் புரவலர்கள்,ஆதரவாளர்கள், கவிஞர்கள் , ஊடகங்கள் உள்ளிட்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் கவிமாலையின் நெஞ்சார்ந்த நன்றி.


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/kavimaalai/public_html/wp-includes/functions.php on line 4757