பரிசு/விருது
வளரும் கவிஞர்களை ஊக்குவிப்பதையும், சிங்கப்பூரில் கவிதை இலக்கியத்தை ஆக்கப்பூர்வமாக வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டு, கவிமாலை தொடர்ந்து கீழ்கண்ட விருதுகளை வழங்கி வருகிறது.
- 2003 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் சிங்கப்பூர் தமிழ் இலக்கியத்திற்காகப் பணியாற்றிய சிறந்த படைப்பாளிக்கு கணையாழி விருது. கணையாழி விருதுக்கான செலவை ஏற்றுக் கொண்டவர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை நிறுவனர் புரவலர் திரு எம்.ஏ. முஸ்தபா.
- 2009 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் சிங்கப்பூரில் வெளியிடப்படும் சிறந்த கவிதை நூலுக்கான தங்கப்பதக்க விருது. தங்கப்பதக்க விருதை, மறைந்த வெண்பாச் சிற்பி வி. இக்குவனம் நினைவாக அவர்களின் புதல்வர்கள் இ. பாலசுப்பிரமணியன் மற்றும் இ. சாமிநாதன் ஆகியோர் புரவலராக வழங்கினார்கள்.
- 2010 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் மாதந்திரக் கவிமாலையில் தேர்வு பெரும் கவிதைகளில் சிறந்த கவிதையை எழுதிய கவிஞருக்கு இளங்கவிஞர் தங்க முத்திரை விருது. தங்க முத்திரை விருதுக்கான செலவை ஏற்றுக் கொண்ட புரலவர் வைர வணிகர் திரு மு . இராமமூர்த்தி.