மாதாந்திர நிகழ்வுகள்

வளரும் கவிஞர்களையும் அவர்தம் படைப்புகளையும் ஊக்கப்படுத்தும் விதமாக மாதம் தோறும் நடைபெறும் கவிமாலையில் சிறந்த கவிதைகள் தேர்வு செய்யப்பட்டு கீழ்க்கண்ட பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.

முனைவர் ரெத்தின வெங்கடேசன் அவர்களின் அம்பிகா அம்மாள் ரெத்தினவேலு அறக்கட்டளை வழங்கும் ரொக்கப்பரிசு 50 வெள்ளி

அடுத்த நிலையில் தேர்வு பெறும் மூன்று கவிதைகளுக்கு வணிக வள்ளல் திருஜோதிமாணிக்கவாசகம் அவர்கள் வழங்கும் தலா 30 வெள்ளி ரொக்கப் பரிசுகள்

அடுத்து தேர்வு பெரும் மூன்று கவிதைகளுக்கு தொழில் முனைவர் திருமதி விஜிஜகதீஷ் அவர்கள் வழங்கும் தலா 20 வெள்ளி ரொக்கப் பரிசுகள்

சிறந்த மரபுக் கவிதைக்காக, மூத்த கவிஞர் பாத்தேறல் இளமாறன் அவர்கள் வழங்கும் ரொக்கப்பரிசு 50 வெள்ளிப்பரிசு

ஒவ்வொரு கவிமாலை இறுதியிலும் இரவு உணவு வழங்கும் சேவையை, கவிமாலையில் பங்குபெறும் ஒருவர் புரவலராகி இனிது உவந்து தொடர்ந்து எற்றுக்கொண்டு வருகிறார்கள்.