அறிவிப்புகள்

தமிழை நேசிப்போம், கவிதை வாசிப்போம்

கவிமாலை 200 – மாதம் முழுதும் வானொலியில் கவிதை வாசிப்பு

 கவிமாலை 200-ஆவது மாதச் சிறப்பு நிகழ்வாக ‘தமிழை நேசிப்போம், கவிதை வாசிப்போம்’ என்ற மாணவர்கள் கவிதை வாசிக்கும் நிகழ்வு அக்டோபர் மாதம் முழுவது *அன்றாடம் காலை மணி 6:55-க்கும் மாலை மணி 6:55-க்கும் ஒலி 96.8 வானொலியில் ஒலியேற இருக்கிறது*

 காலையில் உள்ளூர்த் தமிழ்க் கவிஞர்களின் கவிதைகளையும், மாலையில் உலகளாவிய பிறமொழிக் கவிதைகளைத் தமிழிலும், பள்ளி மாணவர்கள் வாசிக்க இருக்கிறார்கள்.

பள்ளி மாணர்வர்களை உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையம் ஒருங்கிணைத்து உதவியிருக்கிறது.

 திரு ஜோதி மாணிக்கவாசகம் அவர்களின் ஸ்ரீ விநாயகா எக்ஸ்போர்ட் நிறுவனமும் திரு அருமைச் சந்திரன் அவர்களின் 8-பாயிண்ட் எண்டர்டைன்மெண்ட் நிறுவனமும் நிதி ஆதரவு வழங்கி இந்த நிகழ்வுக்கு அடித்தளம் அமைத்திருக்கிறர்கள்.

 

மாணவர்களின் கவிதை வாசிப்பை வானொலி கேளுங்கள்….!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/kavimaalai/public_html/wp-includes/functions.php on line 4552