
மாணவர் கவிதைப் பயிலரங்கு & போட்டி
கவிமாலை 2012 முதல் ஆண்டுதோறும் மாணவர்களுக்கான சிறப்புக் கவிதைப் பயிலரங்கு மற்றும் கவிதைப் போட்டியை நடத்தி வருகிறது.
2017 ஆம் ஆண்டுக்கான கவிமாலையின், மாணவர் கவிதைப் பயிலரங்கு பட்டறிவு மிக்கவர்களைப் பயிற்றுவிப்பாளர்களாகக் கொண்டு நடத்தப்படும்.
- அதில் கவிதை எழுதுவதற்குக் கற்றுத் தரப்படும்.
- அப்பயிலரங்கின் இறுதியில் அரங்கிலேயே கொடுக்கப்டும் தலைப்பில், போட்டிக்கான கவிதையை எழுதித் தரவேண்டும்.
கவிதை எழுதும் போட்டியில் வென்றவர்களுக்கு 8 பரிசுகள் அளிக்கப்படும்:
- முதற்பரிசு : இருவருக்குத் தலா 400 வெள்ளி.
- இரண்டாம் பரிசு : இருவருக்குத் தலா 300 வெள்ளி.
- மூன்றாம் பரிசு : இருவருக்குத் தலா 200 வெள்ளி
- ஊக்கப் பரிசு : இருவருக்குத் தலா 100 வெள்ளி
கவிதை மனனப் போட்டியில் வென்றவர்களுக்கு 6 பரிசுகள் அளிக்கப்படும்:
- முதற்பரிசு : இருவருக்குத் தலா 250 வெள்ளி.
- இரண்டாம் பரிசு : இருவருக்குத் தலா 150 வெள்ளி.
- மூன்றாம் பரிசு : இருவருக்குத் தலா 100 வெள்ளி
இடம் | விக்டோரியா சாலையில் உள்ள தேசிய நூலக நிலையத்தின் 5-ஆம் தளம் | ||||
நாள் | 04.02.2015 சனிக்கிழமை | ||||
நேரம் | 9:00 am to 1:00 pm | ||||
மதிய உணவு | 01:00 pm to 02:00 pm | ||||
தகுதி | சிங்கப்பூரில் உள்ள மேல்நிலைப் பள்ளி, தொடக்கக் கல்லூரி, பல்கலைக் கழகம் போன்ற கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்கள். | ||||
குறிப்பு | 1. மாணவர்கள் தங்கள் வருகையை முன்கூட்டிப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
2. வருகையின் போது மாணவர் என்பதற்கான சான்றைக் காட்ட வேண்டும். (சீருடையுடன் வரவேண்டும்). 3. பரிசுகளுக்கான கவிதைகளைத் தேர்ந்தெடுக்கும்போது, கவிதையின் கருப்பொருள், கவித்துவம், சிந்தனை, கற்பனை போன்றவற்றைக் கருத்திற்க்கொள்ளப்படும். ஏப்ரல் மாதத்தில் கவிமாலை நடத்தும் தமிழ்மொழி மாத நிறைவு விழாவில் போட்டியில் வென்றவர்களுக்குப் பரிசுகள், சான்றிதழ்களுடன் அளிக்கப்படும்.
|
||||
பதிவு செய்யத் தொடர்பு | workshop@kavimaalai.com
|
** முன்பதிவு செய்த மாணவர்கள் மட்டுமே பயிலரங்கில் பங்குபெற அனுமதிக்கப்படுவர்**
பயிலரங்கில் பயிற்றுவிப்பாளர்கள்
- முனைவர் ராஜகோபாலன்
தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கல்வியியலில் முதுகலைப் பட்டமும் தத்துவத் துறையில் முதுகலைப் பட்டமும் பெற்று இருபத்தொரு ஆண்டுகள் ஆசிரியர் தொழிலில் அனுபவம் வாய்ந்தவர். சிறந்த பட்டிமன்ற நகைச்சுவை பேச்சாளர், “இனிக்கும் இலக்கியம்” என்ற இணையக் காணொளித் தொடரின் மூலம் இலக்கியம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். சிண்டாவோடு இணைந்து மாணவர்களுக்கான தன்முனைப்புப் பயிலரங்குகளையும் நடத்தி வருகிறார்.
- எழுத்தாளர் யூமா.வாசுகி,
தமிழக எழுத்தாளர். நுண்கலையில் பட்டயக் கல்வி பெற்றவர். ”உனக்கும் உலகுக்கும்”, “தோழமை இருள்”, “அமுத பருவம்” எனும் கவிதை நூல்களையும், “உயிர்த்திருத்தல்” எனும் சிறுகதைப் படைப்பையும், “மோர்னிங் திக்கெட்ஸ்” எனும் ஓவியப் படைப்பையும் வழங்கியிருக்கிறார். இவர் எழுதிய “ரத்த உறவு” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2000 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதினம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
மனனம் செய்து கவிதை சொல்லும் போட்டி – விதிமுறைகள்
- உயர் நிலைப் பள்ளி / தொடக்கக்கல்லூரி மாணவர்கள் கலந்துக் கொள்ளலாம்
- கவிதைகளை மனப்பாடம் செய்து பாவனையோடு சொல்லுதல் வேண்டும்
- கவிதை 16 முதல் 24 வரிகளுக்குள் இருக்கவேண்டும்
- மரபுக்கவிதை அல்லது புதுக்கவிதையாக இருக்கலாம்
- மின் மரபுடைமைத் திட்டத்திலூள்ள கவிதைகளைத் தேர்ந்தெடுத்தெடுப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்
- போட்டியில் பங்குபெறும் மாணவர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்தக் கவிதைகளை 02.02.2016 தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும்.
கவிதை எழுதும் போட்டி – விதிமுறைகள்
- உயர் நிலைப் பள்ளி / தொடக்கக்கல்லூரி மாணவர்கள் கலந்துக் கொள்ளலாம்
- போட்டிக் கவிதைக்கான தலைப்பு பயிலரங்கில் கொடுக்கப்படும
- கவிதைகள் உடனடியாக எழுதி சமர்ப்பிக்க வேண்டும்
- மரபுக்கவிதை அல்லது புதுக்கவிதையாகவோ இருக்கலாம்
- கொடுக்கப்பட்ட தலைப்பையொட்டி கவிதைகள் 16 முதல் 24 வரிகளுக்குள் இருக்க வேண்டும்
கலந்துரையாடல்
- பயிலரங்கில் 20 நிமிடக் கலந்துரையாடல் அங்கம் இடம் பெறும்
- கலந்துரையாடலில் கவிஞர் யுமா. வாசுகி, முனைவர் இராஜகோபாலன், மற்றும் கவிஞர்கள் மாணவர்கள் கேள்விக்கு பதிலளித்து மாணவர்களுடன் உரையாடுவார்கள்
- கீழ்க்கண்ட இணைத்தளங்களை அல்லது படைப்புகள் பற்றி உங்கள் கேள்விகள் இருக்கலாம்.
- http://www.kavimaalai.com
- யுமா வாசுகி அவர்களின் கவிதைப் படைப்புகள் : http://eluthu.com/kavignar/Youma.-Vasugi.php
- முனைவர் மன்னார்குடி இராஜகோபலன் அவரகள் “இனிக்கும் இலக்கியம்” என்ற YouTube காணொளிகள்.
30-ஏப்ரல்-2017 அன்று தமிழ்மொழி கவிமாலை நிகழ்வில் பரிசுகள் வழங்கப்படும்.