அறிவிப்புகள்

கவிமாலை 210 – ஆகஸ்டு 2017

 

ஆகஸ்ட் மாதக் கவிமாலையில் மலேசியா பாண்டித்துரை

ஜாலான் புசார் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவுடன் இணைந்து மாதந்தோறும் கவிமாலை சிங்கப்பூர், கவிஞர்கள் சந்திப்பை நடத்தி வருகிறது

210-ஆவது மாதச் சந்திப்பான, ஆகஸ்ட் மாதக் கவிமாலைச் சந்திப்பு வரும் இன்று  26 .ஆகஸ்ட். 2017 சனிக்கிழமை மாலை சரியாக 7 மணிக்கு ஜாலான் புசார் சமூக மன்றத்தின் பின்புறமுள்ள தற்காலிக விலாசமான கிங்க் ஜார்ஜ் அவன்யூ புளோக் 804-இன் மூன்றாவது தளத்தில் உள்ள (சிங்கப்பூர்-200804) அரங்கத்தில் நடைபெறும்.

வழமை போல் “மனதில் நின்ற கவிதைகள்”, அதைத் தொடர்ந்து வடித்ததில், படித்ததில் பிடித்தது அங்கம் நடைபெறும். “ஒன்று சேர்வோம்” என்ற தலைப்பில் ஆகஸ்ட் மாதக் கவிதைப் போட்டியில் வெற்றிபெற்ற கவிதைகளுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

தொடர்ந்து கவிமாலை நடத்த இடம் அளித்து உதவி வரும் ஜலான் புசார் சமூக மன்ற முன்னாள் தலைவரும் புதிய நிலா ஆசிரியருமான திரு ஜஹாங்கீர் அவர்கள் முன்னிலையில் ஆகஸ்ட் கவிமாலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

அகில உலகச் சொற்பொழிவாளர் மலேசியாவைச் சேர்ந்த வழக்குரைஞர் பாண்டித்துரை அவர்கள் ‘கவிதையும் கானமும்” என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு ஆற்றுவார்.

கவிஞர்கள் செப்டம்பர் மாதத்திற்கான கவிதைப் போட்டிக்காக “வெளிச்சம்” என்ற தலைப்பில் கவிதைகளை இயற்றி வருமாறு கேட்டுக்கொள்கிறோம். கவிதைகளை poems@kavimaalai.com என்ற மின்னஞ்சலில் அனுப்பலாம்.

தமிழ்க் கவிஞர்கள், ஆதரவாளர்கள், இதனையே அழைப்பாகக் கருதி அனைவரும் வருகை தந்து பயனடைய அன்புடன் வேண்டுகிறோம்.

– தகவலுக்கு திரு ந.வீ சத்தியமூர்த்தி : 85960076

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *