கவிதைத் திருவிழா

அமரர் கவிஞர் பரணன்(சி.வேலு)

நூல் படிக்க

கவிஞரின் நூல்களை இங்கே படிக்கலாம்

கவிஞரின் நூலின் தலைப்பு  
எதிரொலி படிக்க
தோணி  படிக்க
தென்றல் படிக்க

ஆவணப்படம்

வரலாறு

மறைந்த சிங்கைக் கவிஞர் பரணன்

 

 
இயற்பெயர் சி.வேலு
புனைப்பெயர்கள் பரணன்
பிறந்த ஆண்டு 1944
இறந்த ஆண்டு  
தொழில் / அலுவல் ஆற்றிய விவரம் மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் பொந்தியான்

நகரில் பிறந்த இவர் தனது ஆரம்பக் கல்வியை

கோழிக்கோடு பள்ளியிலும், உயர்நிலைக் கல்வியை

செம்பவாங்கிலும் பெற்றார். தமிழ், மலாய், ஆங்கிலம் ஆகிய மொழிகளை நன்கறிந்த இவர் பாதுகாப்புத் துறையில் பணியாற்றினார். j

இவர் பேசும் மொழிகள் தமிழ், ஆங்கிலம், மலாய்.

 

ஆற்றிய தமிழ்ப்பணிகள் மரபுக் கவிதை, புதுக்கவிதை, நாவல், கட்டுரை என

பல்வேறு துறைகளில் எழுதினாலும் இவர் முத்திரை

பதித்தது மரபுக் கவிதையில்தான். “என்னை நான்

கண்டேன்” எனும் தலைப்பில் இவர் எழுதிய முதல்

கவிதை 1965ல் தமிழ் முரசில் வெளியானது. அதனைத்

தொடர்ந்து 3,000க்கு மேற்பட்ட மரபுக்

கவிதைகளையும் புதுக் கவிதைகளையும் சுமார் 600

கட்டுரைகளையும் இவர் எழுதியுள்ளார். ஒரு சிலருக்கு

இயற்பெயர் மறைந்து புனைப்பெயர் பிரபலமாகி

அதுவே நிரந்தரப் பெயராகிவிடும். அத்தகையோரில்

இவரும் ஒருவர்.  பல்வேறு கவியரங்கங்களில் பங்கேற்றும்

தலைமையேற்றும் கவிதை பாடியுள்ள கவிஞர் பரணன்

எழுதிய சிலப்பதிகார நாட்டிய நாடகம்

தொலைக்காட்சிக்காகத் தயாரிக்கப்பட்டு

ஒளியேற்றப்பட்டது.

படைத்த நூல்கள் தோணி (1985), மழை, தென்றல், எதிரொலி (1982) ஆகிய கவிதைத் தொகுப்புகளாய் இவர்வெளியிட்டுள்ளார். இவற்றில் எதிரொலி இரண்டு பதிப்புகளைக் கண்டது என்பது குறிப்பிடத்தக்கது. “சிங்கப்பூர்க் கவிதைகள்”, “மலேசியக் கவிதைக்களஞ்சியம்”; போன்ற தொகுப்புகளிலும் இவரின் கவிதைகள் இடம் பெற்றுள்ளன.

 

பெற்ற விருதுகள் சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் நடத்தப்பெற்ற பல

நூறு கவிதைப்போட்டிகளில் கலந்துகொண்டு பரிசு

பெற்ற (பெரும்பாலும் முதல் பரிசு) கவிஞர்

பரணனுக்கு 1986ஆம் ஆண்டில் ஆசியான் இலக்கிய

விருது வழங்கப்பட்டது. இவரது கவிதைக்குக்

கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் என்று கூறலாம்.

 

பணியாற்றிய அமைப்புகள் / பொறுப்பு மாதவி இலக்கிய மன்றம், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்

கழகம் ஆகியவற்றில் செயலாளராகப்

பணியாற்ட்டியுள்ள இவர் எழுத்தாளர் கழகத்தின்

வாழ்நாள் உறுப்பினராக நீடிக்கிறார்.

தமிழ் மலர் நாளிதழில் துணையாசிரியராகப்

பணியாற்றிய கவிஞர் பரணன் சொந்தமாகத் “தமிழ்

ஞாயிறு” எனும் இதழையும் நடத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/kavimaalai/public_html/wp-includes/functions.php on line 4757