கவிதைத் திருவிழா

கவிஞரேறு அமலதாசன்

நூல் படிக்க

கவிஞரின் நூல்களை இங்கே படிக்கலாம்

நூலின் தலைப்பு இணைப்பு
தமிழர் தலைவர் தமிழவேள் : கவிதைகள் படிக்க
புல்லாங்குழல் : இசைப் பாடல்கள் படிக்க

ஆவணப்படம்

 

குறிப்புகள்

 

இயற்பெயர் கவிஞரேறு அமலதாசன்
பிறந்த தேதி செப்டம்பர் 1, 1939
   
தொழில் / அலுவல் ஆற்றிய விவரம் 1939: மலேசியா கோலசிலாங்கூரில் பிறந்த இவர் தோட்டப் பள்ளியிலும் ரவாங், கிளைவ் இன்ஸ்டிடியுசன் ஆங்கிலப் பள்ளியிலும் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்றார்.

பின்பு நெகிரி செம்பிலான் மாநிலத்தின் சிரம்பான் நகரில் இயங்கிவந்த ‘நெகிரி செம்பிலான் டீச்சர்ஸ் யூனியன் – ரீஜண்ட் இன்ஸ்டிடியூசன் பள்ளியில் உயர்நிலைக் கல்வியைத் தொடர்ந்தார்.

தமிழ்ப்பள்ளி ஆசிரியர். அன்புத் தந்தையின் பெயர் ஆபேல். அருமை அன்னை சின்னத்தாய். என்கிற குழந்தையம்மாள். வளர்ப்புத் தந்தை அப்பு. மனைவி திரேசாள். பிள்ளைகள் லில்லிமேரி அமல், அருள்நாதன் அமல், அறவேந்தன் அமல்.

ஆற்றிய தமிழ்ப்பணிகள் 1958-ல் எழுதத் தொடங்கிய இவருக்கு தமிழ் முரசு மாணவர் மணிமன்ற மலர் களமமமைத்துக் கொடுத்தது.

கவிதைத் துறையில் அதிக ஆர்வம் கொண்ட இவர் தேசியம், மொழி, சமுதாயம், இயற்கை, காதல், தத்துவம், இசைப்பாடல்கள், சிறுவர் பாடல்கள் என பல்துறைகளிலும் சுமார் 1500க்கும் மேற்பட்ட கவிதைகளை எழுதியுள்ளார்.

இவரின் இத்தகைய படைப்புகள் சிங்கப்பூர், மலேசியா, தமிழ்நாடு போன்ற நாடுகளிலிருந்து வெளிவரும் பத்திகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. மேலும் சிங்கப்பூர் வானொலி, தொலைக்காட்சியிலும் ஒலி, ஒளிபரப்பாகியுமுள்ளன.

படைத்த நூல்கள் நாடு, மொழி, சமுதாயம், காதல், தத்துவம், இயற்கை, சிறுவர் பாடல்கள்,
இசைப்பாடல்கள் என்று இதுநாள் வரையில் ஏராளமான எழுத்தோவியங்கள் உருவாக்கம்.2004: ஆங்கில மொழியாக்கம் பெற்ற, “தமிழர் தலைவர் ,தமிழவேள்” , “புல்லாங்குழல்” ஆகிய இரு கவிதை நூல்கள், தமிழகம் சென்னையில், `உலகத் தமிழர் மையம்` என்னும் அமைப்பின் எற்பாட்டில் வெளியீடு கண்டன.
பெற்ற விருதுகள் அலைபாடும் கடலும் எனும் இவரது பாடலுக்கு சிறப்புப் பரிசு.

1989: மலேசியப் பொன்பாவலர் மன்றத்தின்,
கவிஞரேறு ” பட்டமளிப்பு.
மலேசிய அறநிதிச் செல்வர் திரு.அஸ்மி கந்தசாமி,
“ கவிஞரேறு பட்டம் ” பொறித்த தங்கத்தாலான விருதை, அணிவித்தார்.

மலேசியாப் பாரதிதாசன் இயக்கத்தின் பொற்கிழியும் கேடயமும் பெற்றார்.

2001: சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் சங்கத்தின் “தமிழர் திருநாள்” விருது.
சங்கத்தின் சார்பில், சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக் கழகத்தின், தெற்காசிய வட்டாரத் தமிழ்த்துறைத் தலைவர், பேராசிரியர் சுப. திண்ணப்பன் வழங்கினார்.

2005: நான்கு மொழிகளுக்குமான தேசியப் பாடல் போட்டியில், “சிங்கப்பூர் என்று சொல்லும் போதிலே…!” என்ற பாடல் முதல்பரிசுப் பெற்றது.

2005: “இனமானப் பாவலர்” பட்டமளிப்பு.
உலகத் தமிழர் மையம், சென்னை அமைப்பின் சார்பில், தமிழ்நாடு கல்வி அமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன், “ இனமானப் பாவலர் ” என்னும், பட்டம் வழங்கிச் சிறப்பித்தார்

2006: சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் தமிழவேள் விருதினைப் பெற்றார்.

சமூகப் பணி 1987 – 2005: இவர் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராகவும்,

1961 – 1964: அவ்லட் வட்டார தமிழர் திருநாள் விழாக் குழு உறுப்பினராகவும், செயலாளராகவும்,

அவ்லக் தமிழ்பள்ளி வள்ளுவர் நூலகத்தின் செயலாளராகவும்,

1962 – 1982: மாதவி இலக்கிய மன்றத்தின் செயற்குழு உறுப்பினராகவும், பொருளாளராகவும், பொதுச்செயலாளராகவும், துணைத் தலைவராகவும்,

1981 – 1987: தமிழ் எழுத்தாளர் கழகத்தின் உறுப்பினராகவும், செயற்குழு உறுப்பினராகவும், துணைத்தலைவராகவும்,

1987- 2005: எழுத்தாளர் கழகத்தின் தலைவராகவும்,

சிங்கப்பூர்க் குடியரசின் வெள்ளிவிழா கொண்டாட்டத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்தியர் பண்பாட்டு மாதத்தின் ‘தமிழ் மொழி வார’ இணைத் தலைவராகவும்,

தேசிய புத்தக மேம்பாட்டு மன்றத்தின் பேராளராகவும், 1வது தமிழ்மொழி வாரத்தில் கழகத்தின் பேராளராகவும், 2வது தமிழ்மொழி வாரத்தின் ஆலோசகராகவும்,

2000 – 2001:  தமிழர் பேரவையின் உதவித் தலைவர் மற்றும் கலாசாரக் குழுத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/kavimaalai/public_html/wp-includes/functions.php on line 4757