கவிதைத் திருவிழா

கவிஞர் கடையநல்லூர் ஜமீலா

நூல் படிக்க

ஆவணப்படம்

  

குறிப்புகள்

   

இயற்பெயர் என்.எம். ஷம்சுதின்
புனைப்பெயர்கள் கடையநல்லூர் ஜமீலா, பநாஸ், தீன் தாஸ், பட்டாணி

 

பிறந்த ஆண்டு 1940
   
தொழில் / அலுவல் ஆற்றிய விவரம் 1940: தமிழகத்திலுள்ள கடையநல்லூரில் நாகூர் மீரான் மற்றும் ஆமினாள் பீவி எனும் பெற்றோருக்குப் பிறந்தார். இயற்பெயர் என்.எம்.சம்சுத்தீன்.

இங்கிதப் பண்புமிகு இளைஞர், சமுதாய சேவையில் ஆர்வம் அடர்ந்த அலுவலர் என கவி.மதிதாசனின் புகழுரைக்குச் சொந்தக்காரர் கவிஞர் கடையநல்லூர் ஜமீலா.

ஆற்றிய தமிழ்ப்பணிகள் எழுதத் தொடங்கிய ஆண்டு 1953.

அச்சு வசதிகள் அதிகம் இல்லாத காலத்திலேயே கையெழுத்து இதழை உருவாக்கி வெளியிட்டவர்.

தன் பாசத்தங்கையின் நினைவாக கடையநல்லூர் ஜமீலா எனும் புனைப்பெயரிலும், மேலும் பநாஸ், தீன் தாஸ், பட்டாணி போன்ற பல புனைப்பெயர்களிலும் எழுதியுள்ளார்.

தமிழர் திருநாள் கவியரங்கம், வானொலியில் கவிஞர் அரங்கம், கவி இன்பம், இஸ்லாமிய இலக்கியம் (கட்டுரை) போன்றவற்றில் பங்கேற்று தமிழ் பணியாற்றிக் கொண்டிருப்பவர்.

1957-ல் உமறுப் புலவர் நினைவு மலர், 1958-ல் ‘தாமரை’ மாத இதழ், ‘நகைச்சுவை’ மாத இதழ், ‘தமாஷ்’ மாத இதழ், 1975-ல் (சென்னையிலிருந்து) ‘பெருநாள் மலர்’, ‘மீலாத் மலர்’, ‘ஹஜ் மலர்’, ‘சிறப்பு மலர்’, ‘திருவள்ளுவர் நினைவு மலர்’ என பல மலர்களிலும் இதழகளிலும் இவரது படைப்புகள் வெளியோடு கண்டுள்ளன.

படைத்த நூல்கள் 1963: மல்லிகை (முதல் கவிதை தொகுப்பு – சிறுவர் பாடல்கள்)

1975: ஜமீலாவின் கவிதைகள் 

1984: புரட்சிப்பெண்

1984: ஆசை 

1989: ஆசை நெஞ்சங்கள்

1990: காதல்  மலர்கள் 

1990 : கண்கள்

2009: ஊமைக்காயங்கள் 

2014: மெளனம் பேசுகிறது 

வரலாற்றுத் துளிகள் (கட்டுரைகள்)

பெற்ற விருதுகள் 2005: தேசிய கலைமன்றம், சிங்கப்பூர் பிரஸ் அறநிறுவனமும் இணைந்து நடத்திய கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றிருக்கிறார்.
சமூகப் பணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/kavimaalai/public_html/wp-includes/functions.php on line 4757