கவிதைத் திருவிழா

அமரர் கவிஞர் ஆ.பழனியாண்டி

நூல் படிக்க

கவிஞரின் நூல்களை இங்கே படிக்கலாம்

நூலின் தலைப்பு இணைப்பு
திருமுருகன் வெண்பா மாலை NLB Ref
முல்லைப் பூக்கள் (சிறுவர் பாடல்கள்) NLB Ref
கவிதைப் பூக்கள் NLB Ref
என் வாழ்க்கைப் பயணம் NLB Ref
சிலப்பதிகாரக் காப்பியக் கட்டமைப்பு NLB Ref

ஆவணப்படம்

 

குறிப்புகள்

   

இயற்பெயர் ஆ. பழனியாண்டி
புனைப்பெயர்கள் ஆ. பழநி
பிறந்த ஆண்டு பிப்ரவரி 15, 1928
   
தொழில் / அலுவல் ஆற்றிய விவரம் 1928: கவிஞர் ஆ.பழனியாண்டி தமிழ் நாட்டிலுள்ள எடக்கல் எனுமிடத்தில் பிறந்தார்.

 

ஆ. பழனி, கதிரவன் போன்ற புனைப்பெயர்களில் எழுதிவரும் இவர் தனது ஆரம்பக் கல்வியை ஜோகூர் பாருவிலுள்ள அரசாங்கப் பள்ளியில் கற்றுத் தமிழில் மேல்நிலைத் தேர்ச்சி பெற்றார்.

 

1950 – 1957  வரை  ஜொகூரிலும் 1958 – 1988  வரை சிங்கப்பூரிலும் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

ஆற்றிய தமிழ்ப்பணிகள் 1965ல் எழுதத் தொடங்கிய இவர் மரபுக் கவிதை, சிறுகதை, நாடகம், கட்டுரை ஆகியவற்றை எழுதிவந்தாலும் கூட மரபுக் கவிதையிலேயே இவருக்கு ஆர்வம் அதிகம்.

 

1965: இவரது கன்னிக் கவிதை ‘தேசிய நாளை வாழ்த்துவோம்’ எனும் தலைப்பில் தமிழ் முரசில் வெளிவந்தது.

படைத்த நூல்கள் 1992: திருமுருக வெண்பா மாலை

1993 : முல்லைப் பூக்கள் (சிறுவர் பாடல்கள்)

1996: கவிதைப் பூக்கள்

1999 : பாவலர் ஆ. பழனியின் கவிதைப் பூக்கள்

2004 : என் வாழ்க்கைப் பயணம்

2007: சிலப்பதிகாரக் காப்பியக் கட்டமைப்பு

பெற்ற விருதுகள் லிம் போ செங் பற்றி இவரால் எழுதப்பட்ட கட்டுரைக்கு தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸின் (என்.டீ.யு.சி.) பணப்பரிசு

1995: பொதுச் சேவைக்கான சிங்கப்பூர்  அரசாங்கத்தின் பிபிஎம் (PBM) விருது

சமூகப் பணி 1960-1964 வரை  ஹெண்டர்சன் தமிழ் இளைஞர் மன்ற செயலாளர்.

1958-1988: சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்க உறுப்பினராகவும், 

1993-1994: சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகப் பொருளாளராகவும்,

ஹெண்டர்சன் சமூக நிலைய இந்திய நற்பணிக் குழுவின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/kavimaalai/public_html/wp-includes/functions.php on line 4757