கவிதைத் திருவிழா

கவிஞர் அ.கி.வரதராஜன்

நூல் படிக்க

ஆவணப்படம்


குறிப்புகள்

   

இயற்பெயர் கவிஞர் அ.கி.வரதராஜன்
பிறந்த ஆண்டு 15-12-1944
   
தொழில் / அலுவல் ஆற்றிய விவரம் 1944: அத்தாழ நல்லூர் கிருஷணன் வரதராசன் நெல்லை மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் பிறந்தவர். காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். திருச்சி BHEL-இல் பணிபுரிந்த இவர் சிங்கப்பூரில் பணி மாற்றலாகி அங்கேயே 32 ஆண்டுகளாக வசித்து வருகிறார்.

.

ஆற்றிய தமிழ்ப்பணிகள் கம்பர் பற்றிய சொற்பொழிவுகள் நிகழ்த்தியுள்ள இவர், தமிழ் இந்து, திண்ணை போன்ற இணைய தளங்களிலும் கம்பன் பற்றிய இவருடைய கட்டுரைகள் வெளிவந்துள்ளன.

சிங்கப்பூரிலும் காரைக்குடியிலும், கொழும்புவிலும் கம்பன் விழாக்களில் கவியரங்கத்தில் கவிதை வாசித்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாகச் சிங்கை நூலகம் ஒன்றில், ஆர்வம் உள்ளவர்களுக்குக் கம்பராமாயண வகுப்புகள் நடத்தி வருகிறார்.

படைத்த நூல்கள்

2012: சாமிநாத வெண்பா
2012: ஒப்பிலா ஒருமூவர் : சிறுத்தொண்டர் , கண்ணப்பர், திருநீலகண்டர் ஆகிய மூன்று நாயன்மார் கதை
2014: அன்னையின் ஆணை
2015: கம்பன் காட்டும் கணைகள்
2015: சிங்கப்பூர் நான்மணி மாலை
2015: ஐம்பதுக்கு ஐம்பது
2016: லீ குவான் இயூ பிள்ளைத் தமிழ்
2017: கம்பன் காவியத்தில் ஆசை அண்ணன் அருமைத் தம்பி
2017: அரிய மா மனிதர் அழகப்பர் (காரைக்குடி கம்பன் கழகம் தங்கள் விழா நாளில் வெளியிட்டது)

பெற்ற விருதுகள்

2011: உ.வே.சா பற்றிய இவரது ”சாமிநாத வெண்பா” நூலைச் சிங்கப்பூரின் ”கவிமாலை” அமைப்பு 2011-இன் சிறந்த நூலாகத் தேர்ந்தெடுத்து, நூலாசிரியருக்குப் பரிசாகத் தங்கப் பதக்கம் வழங்கியது.
2012: சிங்கப்பூர் தமிழ் மொழி பண்பாட்டுக் கழகத்தினர் பாரதியார்-பாரதிதாசன் இலக்கிய விருதை இவருக்கு வழங்கி கௌரவித்தது.
2016: தமிழ் புதினம் அல்லாதவை பிரிவில், “கம்பன் காட்டும் கணைகள்” எனும் நூலின் ஆசிரியர் அ. கி. வரதராஜன் பாராட்டு விருதைப் பெற்றார்.
2016: ”சிங்கப்பூர் நான்மணி மாலை” என்ற கவிதை நூல் 2016 இல் சிங்கப்பூர் அரசின் இலக்கியப்பரிசைப் பெற்றது,
2017: ”லீ குவான் இயூ பிள்ளைத் தமிழ்” நூல் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் வழங்கும் மு.கு.இராமச்சந்திரா நினைவுப் பரிசைப் பெற்றது.
2018: காரைக்குடி கம்பன் கழகத்தின் 80 ஆவது ஆண்டு விழாவில், இவருக்குக் கம்பன் அடிப்பொடி விருதை வழங்கிச்சிறப்பித்துள்ளது.
2018: அகில இலங்கைக் கம்பன் கழகம் கொழும்பு நகரில் நடைபெற்ற கம்பன் விழாவில் மார்ச்2018, 29ஆம் தேதி கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவாக வழங்கும் ”மகரந்தச் சிறகுகள்” விருதை வழங்கிச் சிறப்பித்தார்கள்.
கம்பன் பற்றி இவர் எழுதிய நூல்கள் காரைக்குடி,(அன்னையின் ஆணை) சென்னை (கம்பன் காட்டும் கணைகள்), புதுச்சேரி (கம்பனின் காப்பியத்தில் ஆசை அண்ணன் அன்புத் தம்பி) ஆகிய மூன்று கம்பன் கழகங்கள் வழங்கும் பரிசுகளைப் பெற்றுள்ளன.

சமூகப் பணி

சிங்கப்பூரில் இயங்கி வரும் இலக்கிய வட்டம் என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்.

சிங்கப்பூர் எழுத்தாளர் கழகத்தின் உறுப்பினர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/kavimaalai/public_html/wp-includes/functions.php on line 4757