கவிதைத் திருவிழா

கவிஞர் அருண் முல்லை

நூல் படிக்க

கவிஞரின் நூல்களை இங்கே படிக்கலாம்

நூலின் தலைப்பு இணைப்பு
நாத்திகன் வேள்வி : கவிதைத் தொகுப்பு படிக்க
பொய்யா நெறி குறுங்காப்பியம் படிக்க
மங்கலதேவிக் கோட்டம் : காப்பியம் படிக்க

ஆவணப்படம்

https://youtu.be/flLhWfQWo-M 

குறிப்புகள்

   

இயற்பெயர் கோவிந்தன் பக்கிரி
புனைப்பெயர்கள் அருண் முல்லை
பிறந்த ஆண்டு 15/7/1947
   
தொழில் / அலுவல் ஆற்றிய விவரம் 15 ஜூலை, 1947: கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், சாமியார்ப்பேட்டை என்னும் சிற்றூரில் க.கோவிந்தன் – தையல் நாயகி என்ற இணையருக்குத் தலைமகனாகப் பிறந்தார். உடன் பிறந்தோர் இரு தங்கைகள், சகுந்தலா, சத்தியவதி என்போர்.

1958: தந்தையார் அழைப்பில் சிங்கைக்கு வந்து துறைமுகத்தில் படகுத் தொழிலாளியாய் அமர்ந்து கவிஞர்களின் நட்பால் கவிஞர் என்று அழைக்கப்பட்டவர்.

1971: பெரிய நாயகி என்பவரை மணமுடித்து, செந்தாமரை, செந்தமிழ், செந்துறை என்ற மூன்று செல்வங்களுக்குத் தந்தையானவர்.

படகுத்துறையிலிருந்து பிறகு கெப்பல் நிறுவனத்தில் கவைகோல் பளுஏற்றி (Fork Lift) ஓட்டுநராகப் பணியாற்றினார்.

ஆற்றிய தமிழ்ப்பணிகள் தான் எட்டு வயதில் இலக்கணமோ, இலக்கியமோ அறிந்திருக்கவில்லை. ஆனால் பாட்டன் வழி, தந்தை வழி அவர்கள் இசை நாடகத்தில் நடித்த பட்டைக் கேட்டதாலும், அவர்தம் தந்தை இசை நாடகத்தில் பெண் வேடமிட்டுப் பாடி நடித்ததைப் பார்த்ததாலும் அவை உள்ளிருந்து தன் இலக்கிய ஆர்வத்துக்கு வழிகாட்டுவதாக தன் பொய்யா நெறி நூலில் கவிஞரே கூறுகிறார்.

மரபுக் கவிதைகள்தான் கவிதை என்பதில் அசையாத நம்பிக்கை உள்ளவர்.

மூன்று இலக்கிய நூல்கள் வெள்ளிட்டுள்ளார்

படைத்த நூல்கள் 2004: நாத்திகன் வேள்வி

குறிப்பு:- இந்நூலில் கவிஞர் 7 பிரிவுகளில் கவிதைகளைப் படைத்துள்ளார். மொழி, இனம், சமூகம், பகுத்தறிவுவாதம், காதல், நாடு, பொது என்னும் பிரிவுகளில் பல கவிதைகள் உள்ளன. மனிதன் அன்புடன் வாழ்ந்தால் நாடு, இனம், சமுகம் நல்வாழ்வு பெறும் என்பதைக் கவிஞர் குறிப்பிடுகிறார்.

2011: பொய்யாநெறி காப்பியம்

குறிப்பு:- இந்நூலில் ‘பொய்யா நெறி’ என்னும் குறுங்காப்பியம் சுமார் 1000 பாடல்களில் பாடப்பட்டுள்ளது. தமிழர் பண்பாடு, கலை, நெறி போன்றவற்றின் முக்கியத்துவத்தை மக்களிடம் கொண்டுசேர்க்கத் திருவள்ளுவரை மெய்யறிவாளராகவும் திருக்குறளை மறைநூலாகவும்கொண்டு ஒர் இயக்கம் ஆரம்பித்ததைப்பற்றியும் அதன் விளைவால் ஏற்பட்ட வளர்ச்சிகளைப்பற்றியும் இக்குறுங்காப்பியம் விளக்குகிறது.

2013: மங்கலத் தோட்டம் காப்பியம்

குறிப்பு:- இக்காப்பியம் கேத்தரின் என்னும் ஐரோப்பிய ஆய்வாளர் மதுரைக்குச் சென்று கடலில் மூழ்கிய பூம்புகாரைப்பற்றிச் செய்த ஆய்வு பற்றியது. மேற்கொண்ட ஆய்வைப் பற்றியும் அதன் விளைவாக நடந்த நிகழ்வுகள்பற்றியும் இக்காப்பியக் கதை அமைந்துள்ளது.

பெற்ற விருதுகள்
சமூகப் பணி பணிநிமித்தம் காரணமாக அதிக ஈடுபாடில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/kavimaalai/public_html/wp-includes/functions.php on line 4757