கவிதைத் திருவிழா

கவிவாணர் ஐ.உலகநாதன்

நூல் படிக்க

ஆவணப்படம்

குறிப்புகள்

     

இயற்பெயர் ஐ.உலகநாதன்
புனைப்பெயர்கள்
பிறந்த ஆண்டு 12/09/1936
   
தொழில் / அலுவல் ஆற்றிய விவரம் 1936: மலேசியாவில் ஈப்போ நகரில் பிறந்தார். தந்தையார் ஐயாசாமி. தாயார் சாலம்மாள்.  

மலேசியக் கவிஞர் இளவழகு இவரது தம்பியாவார்.

‘டெத்லம்’ எனும் நிறுவனத்தில் பொருட்கள் விநியோகம் செய்யும் அலுவலர் பணியிலிருந்த கவிஞர் ஐ.உலகநாதன் சிங்கையின் தெருக்களை நன்கு அறிந்தவர். தொழிலில் ஈடுபட்டுக்கொண்டே தமிழையும் பரப்பினார். தமிழர்களிடம் இலக்கிய பேசுவார். கவிதை கூறுவார். பாரதியின் கூற்றுக்கேற்ப ‘தெருவெல்லாம் தமிழ் முழக்கம்’ செய்தவர் கவிஞர் உலகநாதன்.

இச்சிங்கப்பூர் மலேசியக் கவிஞர் பற்றி 1992-இல் இர.ந.வீரப்பன் “மலேசியப் பாவரசு ஐ.உலகநாதன்” என்னும் நூல் எழுதியுள்ளார்.

ஐ.உலகநாதன் தற்போது பெங்களூரில் வசித்து வருகிறார்.

ஆற்றிய தமிழ்ப்பணிகள் 1953: ‘மாணவர் மணி மன்றம்’ ஐ. உலகநாதன் போன்ற பல மாணவர்களை எழுத்தாளர்களாக உருவாக்கியது.  

19-ஆம் அகவையில் எழுதத்தொடங்கியவர்.

முதன்முதலில் கட்டுரை எழுதுவதில் துவங்கிய இவரது எழுத்துப்பணி முழுக்க முழுக்க கவிதைத் துறையில் இவரைக் கால்கொள்ள வைத்தது.

பேச்சுத்துறையில் மிகுந்த ஈடுபாடு உடையவர். மலேசியாவில் குறிப்பிடத்தகுந்த மேடைப்பேச்சாளராக விளங்கியவர்.

மேடை நாடகங்கள், வானொலி நாடகங்கள், சிறு காப்பியங்கள், 100-க்கும் மேற்பட்ட கட்டுரைகள், 50-க்கும் மேற்பட்ட சிறு கதைகள், 500-க்கும் மேற்பட்ட கவிதைகள் என பன்முகத் திறன் காட்டியவர் கவிஞர் ஐ.உலகநாதன்.

தமிழ் மலர் இதழில் பணியாற்றிக்கொண்டு தமிழ்க்கவிதகள் வளர்த்தார்.

அமரர் மலர் மாணிக்கம் (ந.மாணிக்கம்) அவர்களின் கூற்றுப்படி மலேசியத் தமிழர்கள் இவரை ‘மலேசியக் கவிஞர்” என அன்புரிமையுடன் அழைக்கின்றனர். மலேசியா-சிங்கப்பூரில் நூற்றுக்கணக்கான இளங்கவிஞர்களுக்கு நல்ல வழிகாட்டியாக, முன்னோடியாகத் திகழ்கிறார் என்பது மிகையாகாது

சிங்கை அலெக்சாண்ரா வட்டார பகுத்தறிவு நூலகம் திரு.ஐ.உலகநாதனின் பாசறையாக இயங்கி வந்தது. ஒவ்வொரு வாரமும் சொற்பயிற்சி நடைபெறும். அதில் பல பேச்சாளர்கள் உருவானார்கள்.

அமரர் கவிஞர் பெ.திருவேங்கடம் போன்றோருக்கு இலக்கிய வழிகாட்டியாக இருந்து, மரபுக்கவிதை கற்றுத் தந்து புதிய கவிஞர்களை உருவாக்கியிருக்கிறார்.

படைத்த நூல்கள் 1966: சந்தனக் கிண்ணம்  

1975 : முத்துக்கோவை

1982 : திருப்புமுனைகள்

1982 : மகரயாழ்

1981 : தமயந்தி

1982 : கண்ணம்மா : கதைப்பாடல்

1989 : ஒரு பாலைவன ஒட்டகத்தின் சோலைவனப் பயணம் (பயணநூல்)

1996 : கேட்டால் கேளுங்கள்

1997 : பாவாணர் புகழ்ச்சிந்து

1996 : உடைந்த வீனண

2007 : சிவகாவியம்

2011: சிங்கப்பூர் சிறப்பதிகாரம்

புரட்சித்தலைவர் புகழ்அந்தாதி

செந்தமிழ்க்கவசம்

1990: முதல் உலகத் தமிழர் மாநாட்டு மலரில் கவிவாணர் ஐ. உலகநாதனின் ‘குமுறல்’ எனும் கவிதை இடம்பெற்றிருக்கிறது.

பெற்ற விருதுகள் 1989: தமிழவேள் விருது.  

வானொலியிலும், விழாக்களிலும், இதழ்களிலும் நடத்தப்பெற்ற எழுத்து-பேச்சுப் போட்டிகைல் பல பரிசுகள் பெற்றிருக்கிறார்.

‘மலேசியக் கவிவாணர்’ பட்டம்.

சமூகப் பணி 1959: “மாதவி” இலக்கியத் திங்களிதழ் தொடங்கி அதன் ஆசிரியராகப் பணியாற்றினார். இதில் “விருத்தப்போட்டி” வைத்து இளங்கவிஞர்கள் வளப்படுத்தினார். அதில் பல மலேசிய சிங்கப்பூர் இளங்கவிஞர்கள் ஈர்க்கப்பட்டு வளர்ந்தார்கள். சிங்கைக்கவி கவிஞரேறு அமலதாசனும் அப்படி தான் வள்ர்ந்ததாகக் கூறுவதே இதற்குச்சான்று.  

1961: “மாதவி இலக்கிய மன்றத்தை” நண்பர்களுடன் இணைந்து நிறுவி அதன் தலைவராகவும் செயல்பட்டார்.

தமிழர் இயக்கங்கள் பலவற்றில் உறுப்பினராகவும், பொறுப்பாளராகவும் தமிழ்ப் பணியாற்றியவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/kavimaalai/public_html/wp-includes/functions.php on line 4757