கவிதைத் திருவிழா

அமரர் கவிஞர் கா. பெருமாள்

நூல் படிக்க

ஆவணப்படம்

 

குறிப்புகள்

   

இயற்பெயர் கா.பெருமாள்
புனைப்பெயர்கள்
பிறந்த ஆண்டு 01/10/1921
றந்த ஆண்டு 1979
தொழில் / அலுவல் ஆற்றிய விவரம் 1921: 1921-ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் முதல் நாளில் தமிழகத்திலுள்ள நாமக்கல்லில் காளியண்ணன், பழனியம்மாள் ஆகியோரின் செல்வ மகனாய் பிறந்தார்.

1938: கவிஞர் கா.பெருமாள் மலாயா வந்தார். தந்தை பெயர் காளியண்ணன்.

கேமரன் மலையில் ‘போ’ என்னும் தோட்டத்தில் தொழிலாளியாக வாழ்க்கையைத் தொடங்கிய இவர் இளமையில் உல ஊழியனார் என்னும் அறிஞரிடத்து தமிழ்க்கல்வி கற்றதன் பயனாக இலக்கியப்பணியிலும் ஈடுபட முடிந்தது.

நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்தில் “காயக்” என்னும் பகுதித் தலைமை கவிஞரின் வீரத்தின் விளைநிலமாக விளங்கியது.

1964: சிங்கப்பூர் தமிழ சீர்திருத்த சங்கத்தில் எம்.எஸ்.பாக்கியம் அவர்களை மணந்தார். இவர்களுக்கு இரண்டு ஆண்மக்கள்.

1959: மலேசிய செய்தித் தொடர்புத் துறையில் பணியாற்றி பின்னர் மலாயா வானொலியில் பணியாளராக சேர்ந்தார்.

1963-மே: சிங்கப்பூர் வானொலியில் பணிபுரிந்தார்.

ஆற்றிய தமிழ்ப்பணிகள் 1979: சிங்கப்பூர் உணர்வை ஊட்டக்கூடிய தேச பக்திப்பாடல்களை நிரம்ப எழுதி வானொலியில் ஒலிபரப்பினார். இசையமைப்பு பண்டிட் ம.இராமலிங்கம். இப்பாடல்களில் பல சிங்கப்பூர்ப் பாடல்கள் என்னும் பெயரில் வாரந்தோறும் கலாச்சார அமைச்சின் கண்ணோட்டம் இதழில் வெளிவந்தன. பிறகு 1979இல் நூல் வடிவம் கண்டன.

இசையோடு தமிழைப் பரப்பிய கா. பெருமாள் கவிஞராகவும், உருவகக்கதைகள், சிறுகதைகள், நெடுங்கதைகள் போன்றவற்றைப் படைத்த புனைகதை ஆசிரியராகவும் விளங்கினார். 

மக்களின் அடிப்படைத் தேவைகளை உணர்ந்து எழுதும் வழிகாட்டிகளாகக் கவிஞர்கள் இருக்க வேண்டும் எனும் எண்ணம் கொண்டவர் கவிதைவேள் பெருமாள். இவரது கவிதைகள், பண்ணெழுப்பிப் பாடுபவரையுன், கேட்பவரையும், படிப்பவரையும் இன்பக் கடலில் திளைக்கச் செய்வன என்று புகழப்பட்டவர். மலைநாட்டு உழைப்போர் இலக்கியம் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்கையையொட்டிப் புனையப்பெற்ற பாடல்களாகும்.

இந்து சமயத்தைச் சார்ந்த இவர் இஸ்லாம் சமயக் கருத்துகளை உள்ளடக்கிய சீறா இசைச் சித்திரம், துங்கு அப்துர் ரஹ்மான் வில்லுப்பாட்டு, அன்பு என்னும் தத்துவம் (1978) போன்ற நூற்களை எழுதிச் சமய நல்லணக்கத்தைப் பேணியுள்ளார்.

இவர் இயற்றிய அன்பு எனும் தத்துவம் முதலானவை இஸ்லாமியரின் நெஞ்சங்களை நிறைவு செய்து கொண்டிருக்கின்றன.

சங்கமணி, ஜனோபகாரி, முத்தமிழ் முதலான ஏடுகளில் இவரின் உருவகக் கதைகள், சிறுகதைகள், நெடுங்கதைகள் முதலியன வெளிவந்தன.

1968, ஜனவரி 3 – ஜனவரி 10: சென்னையில் நடைபெற்ற இரண்டாம் உலக தமிழ் ஆராய்ச்சி கருத்தரங்கில் “மலைநாட்டு உழைப்போர் இலக்கியம்” எனும் தலைப்பிலே ஆய்வுரையை நிகழ்த்தினார்.

படைத்த நூல்கள் 1942க்கு முன்பிருந்த்தே புதிய கோணங்களில் உருவகப் பாடல்கள், உரைப்பாடல்கள், உரைப்பா நாடகங்கள், வில்லுப்பாட்டு, கூத்துக்கலை, தோட்டப்புறக்கும்மி, கோலாட்டங்கள் முதலியவைகளைப் படைத்துள்ளார்.

1978: துயரப் பாதை (1958-ல் மலேசிய வானொலியில் ஒலியேறிய நாடகத்தின் நூல் வடிவம்)

1978: அன்பு எனும் தத்துவம், இஸ்லாம்  – கவிதை நூல்

1979: கட்டை விரல் (1959-இல் மலேசிய வானொலியில் ஒலிபரப்பான நாடகம் 20 ஆண்டுகளுக்குப்ன் நூல் வடிவம் பெற்றது.)

1979: சிங்கப்பூர் பாடல்கள்  – கவிதை நூல்

இசைச் சித்திரங்கள்

வாழ்க்கை விநோதம்

சீறா இசைச்சித்திரம்

துங்கு அப்துர் ரஹ்மான் வில்லுப்பாட்டு

 

ஆய்வுக்கட்டுரைகள்:

1) தத்துவக்கலை

2) கூத்துக்கலை

3) நாடகம் பிறந்தது

4) மலைநாட்டு  உழைப்போர்  இலக்கியம்

பெற்ற விருதுகள் கவிதைவேள் பட்டம்
சமூகப் பணி 1958-59: தேசிய தோட்டத் தொழிலாளர் சங்க இதழான “சங்கமணி” கிழமை இதழின் உதவி ஆசிரியராக பணியாற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/kavimaalai/public_html/wp-includes/functions.php on line 4755