கவிதைத் திருவிழா

கவிஞர் புதுமைத்தேனீ மா.அன்பழகன்

நூல் படிக்க

கவிஞரின் நூல்களை இங்கே படிக்கலாம்

கவிஞரின் நூலின் தலைப்பு இணைப்பு
ஜூனியர் பொன்னி படிக்க
மடி மீது விளையாடி : நாவல் படிக்க
இன்னும் கேட்கிற சத்தம் படிக்க
சமுதாயச் சந்தையிலே படிக்க
என் பா நூறு: வெண்பா நூறு படிக்க
ஆயபுலம் படிக்க
இதில் என்ன தப்பு படிக்க
அலை தரும் காற்று படிக்க
ஒன்றில் ஒன்று படிக்க
விடியல் விளக்குகள் படிக்க
கவித்தொகை படிக்க
அந்தப் பார்வையில் படிக்க
உடன்படுசொல் : பேச்சும் உரைவீச்சும் படிக்க
புதுமைத் தேனீ படிக்க
அளந்து போட்ட சிறுகதைகள் படிக்க
காதல் இசைபட வாழ்தல் NLB Ref
வாய்க்கால் வழியோடி NLB Ref
ஆயிழையில் தாலாட்டு NLB Ref
திரையலையில் ஓர் இலை NLB Ref
பாதிப்பில் பிறந்த பாடல்கள் NLB Ref
கூவி அழைக்குது காகம் – அரும்பு (மாணவர் கடிதம்) NLB Ref
கூவி அழைக்குது காகம் – மொட்டு (மாணவர் கடிதம்) NLB Ref
கூவி அழைக்குது காகம் – மலர் (மாணவர் கடிதம்) NLB Ref
இப்படிக்கு நான் : படச்சுவடி NLB Ref
இன்னும் கேட்கிற சத்தம் NLB Ref
எர்கு, சீன நாவல் NLB Ref
பழமும் பிஞ்சும் (சிறுவர் நூல்) NLB Ref
என் வானம் நான் மேகம் NLB Ref

ஆவணப்படம்

குறிப்புகள்

 

   

Puthumaitheni Ma. Anbalagan

இயற்பெயர் மா.அன்பழகன்
 புனைப்பெயர்
பிறந்த ஆண்டு ஜனவரி 21, 1943
   
தொழில் / அலுவல் ஆற்றிய விவரம் ஜனவரி 21, 1943: தமிழ்நாட்டில் நாகை மாவட்டத்தைதில் வேதாரண்யத்தை அடுத்த  ஆயக்காரன்புலம் எனும் ஊரில் பிறந்தவர்.

தந்தை திரு.ஏ.கே.மாசிலாமணி, தாயார் திருமதி.செல்லம்மாள். உடன்பிறந்தோர் பதின்மரில் ஏழாவது பிள்ளை.

சொந்த ஊரில் ஆரம்ப, உயர்நிலைப் படிப்பும், அதிராம்பட்டினம், குடந்தை, சென்னையில் கல்லூரிப்படிப்பும் இவரது கல்விப்புலம்.

2-9-1971: திருமதி.திலகவதியைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு இரு மகன்கள். மளிகை, உணவகத்தொழில் புரிந்தவர்.

1961-இல் கல்லூரியில் படிக்கும் போது ‘நிலை கெட நினைப்போ‘ எனும் முதல் கவிதையை எழுதியுள்ளார்.

திராவிட அரசியல் இயக்கங்களில் ஈடுபாடு கொண்டதோடு மாநில இலக்கிய அணியில் பொருளாளராகப் பணிபுரிந்தவர்.

பாதபூஜை (1974) மற்றும் ‘புதுச்செருப்பு கடிக்கும்’ (1978) ஆகிய படங்களைத் தயாரித்த அனுபவமும் உண்டு. ‘புதுச்செருப்பு கடிக்கும்’ படத்தில் இணை இயக்குநராகவும் பணியாற்றி, எழுத்தாளர் திரு.த.ஜெயகாந்தன் அவர்களிடமும் இணைந்து செயலாற்றிய அனுபவம் செறிந்தவர் புதுமைதேனீ மா.அன்பழகன். இயக்குநர் சிகரம் அமரர் கே.பாலச்சந்தரிடம் துணை இயக்குநராகப் பணியாற்றியர்.

1994: சிங்கப்பூருக்கு புலம் பெயர்ந்து கூலவணிகராக குடியமர்ந்தார்.

எதிலுமே புதுமை செய்யும் இயல்பினில் பழகிப்போனவர்.

ஆற்றிய தமிழ்ப்பணிகள் 1985,1987-ம் ஆண்டுகளிலேயே சென்னையில் ஏழு இலக்கிய படைப்புகளை வெளியீடு செய்த மூத்த இலக்கியவாதி.

உறவு மலர் – திங்களிதழின் ஆசிரியாராக பணியாற்றியுள்ளார்.

சென்னையில் வாழ்ந்ததனாலும்,  கலை, அரசியல் இலக்கியப் பின்னணி இருந்ததாலும் இவருக்கு அந்தத் துறை முன்னணித் தலைவர்களுடன் அணுக்கமாகப் பழகக் கூடிய வாய்ப்பை உடையவர்.

100 திருமணங்களை ஏற்பாடு செய்து நடத்தி வைத்தவர்.

இவருடைய நூல்கள் சென்னை, பாரதிதாசன் பல்கலைக்கழகங்களிலும் பூண்டி புஷ்பம் கல்லூரியிலும் பாடனூல்களாக வைக்கப்பட்டன.

மரபு, புதுக்கவிதைகளை படைக்கக்கூடிய ஆற்றல் படைத்தவர்.

கவிமாலைக் கவிஞர்களுக்கு நூல்களை வெளியிட பேருதிவியாய் இருப்பவர்.
        
தமிழக சட்டமன்றத்தில் – சென்னை  நகராட்சிகளில் இன்றும் அலுவல் நாட்களில் தினமும் திருக்குறள் சொல்லித் தொடங்கப்படுவதற்கு மூல காரணமாக விளங்கியவர்.

படைத்த நூல்கள் இதுரை 30 நூல்கள் வெளியிட்டுள்ளார்.

2017-ம் ஆண்டில் (17/01/2017) ஒரே விழாவில் 9 நூல்களை வெளியிட்டு புதிய சாதனையும் படைத்தார்.

1985:

சமுதாயச் சந்தையிலே (கட்டுரைத் தொகுப்பு)

அலைதரும் காற்று (கவிதைத் தொகுப்பு)

ஜுனியர் பொன்னி (புதினம்)

மடி மீது விளையாடி (புதினம்)

இதில் என்ன தப்பு? (திரைக்கதை)

1987:

அந்தப் பார்வையில் (புதினம்)

பழமும் பிஞ்சும் (சிறுவர் நூல்)

2003:

ஒன்றில் ஒன்று (கவிதைகள், ஆங்கில மொழிமாற்றத்துடன்)

இப்படிக்கு நான் (படச்சுவடி)

2005: விடியல் விளக்குகள் (சிறுகதைகள்)

2006: உடன்படு சொல் : பேச்சும் உரைவீச்சும்

2007: இன்னும் கேட்கிற சத்தம் (உரை வீச்சு)

2009:

ஆயபுலம் (புதினம்)

என் பா நூறு: வெண்பா நூறு (மரபு வெண்பாக்கள்)

Bubbles of Feelings (சிறுகதைகள் ஆங்கில மொழிபெயர்ப்புடன்)

2010: என் வானம் நான் மேகம் (பெருங்கதைகள்)

2011: Beyond The Realm (சிறுகதைகள்)

2012: கவித்தொகை

2012: பாதிப்பில் பிறந்த பாடல்கள்

2013: திரையலையில் ஓர் இலை (கட்டுரை)

2013: எர்கு (புதினம்)

2013: ERHU (ஆங்கில புதினம்)

2014:

கூவி அழைக்குது காகம் – அரும்பு (மாணவர் கடிதம்)

கூவி அழைக்குது காகம் – மொட்டு (மாணவர் கடிதம்)

கூவி அழைக்குது காகம் – மலர் (மாணவர் கடிதம்)

வாய்க்கால் வழியோடி (கட்டுரை)

ஆயிழையில் தாலாட்டு (கட்டுரை)

2015:  புதுமைத்தேனீ (சிறுகதைகள்)

2016: காதல் இசைப்பட வாழ்தல்

2018: அடுத்தவீட்டு ஆலங்கன்று

பெற்ற விருதுகள் தமிழகத்திலும் சிங்கப்பூரிலும் பல தமிழ் அமைப்புகளால் மரியாதை செய்யப்பட்டிருக்கிறார்

1990 : கவிமாமணி விருது : கலைஞர் தலைமையில் சுரதா அவர்களால் கொடுக்கப்பட்டது

சிங்கப்பூர் தமிழ்மொழிப் பண்பாட்டுக் கழகத்தின் பாரதியார் விருது

கவிமாலை நிறுவனர் பிச்சினிக்காடு இளங்கோவால்  ‘புதுமைத்தேனீ‘ என்று என்றழைக்கப்பட்டு இன்று அனைவராலும் அவ்வாறே அன்புடன் அழைக்கப்படுகிறவர்.

வாங்கிய விருதுகளைவிட வாங்காமல் தவிர்த்த விருதுகள் அதிகம்.

சமூகப்பணி 2009 கவிமாலை சிங்கப்பூர் அமைப்பின் பொறுப்பாளராகி தற்போது கவிமாலை அமைப்பின் பொதுக்குழு உறுப்பினராகவும் காப்பாளராகவும் தொடர்ந்து வழிகாட்டியாக விளங்கிக் கொண்டிருக்கிறார்.

தொடர்ந்து பல இளங்கவிஞர்களின், 100-க்கும் அதிகமான கவிதை நூல்கள் கவிமாலை சார்பில் நூல் வெளியீடு காணக் காரணமானவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/kavimaalai/public_html/wp-includes/functions.php on line 4755