கவிதைத் திருவிழா

அமரர் கவிஞர் மலர் மாணிக்கம்

நூல் படிக்க

கவிஞரின் நூல்களை இங்கே படிக்கலாம்

நூல்கள் வெளியிடவில்லை

ஆவணப்படம்

குறிப்புகள்

 

   

இயற்பெயர் நடேச நாடார் மாணிக்கம் / ந.மாணிக்கம்
புனைப்பெயர்கள் மலர் மாணிக்கம், முருகிளவல், கலைத்தூதன், நமா, தஞ்சை வாணன், தஞ்சை தமிழரசன், தமிழரசன், மன்னை மணிமாறன்
பிறந்த ஆண்டு 09/01/38
றந்த ஆண்டு 25/12/2006
தொழில் / அலுவல் ஆற்றிய விவரம் 09/01/38: தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடியை அடுத்துள்ள சேனைக்கரை எனும் சிற்றூரில் பிறந்தார்.

1954: தன்னுடைய சித்தப்பாவுடன் (ந. பழனிவேலு) சிங்கப்பூர் வந்தார்.

இந்தியாவில் பி.யு சி படிப்பை முடித்தார். சிங்கப்பூரில் பணியாற்றிக்கொண்டே கான் எங் செங் பள்ளியில் செகண்டரி 4 படித்தார்.

1958: சிங்கப்பூர் துறைமுகத்தில் பணியில் சேர்ந்தார். தொழில் சங்கத்திலும் ஈடுபட்டார். 2000-ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

1968: அம்பிகா அம்மையாருடன் திருமணபந்தத்தில் இணைந்தார். அவர்களுக்கு மதிவாணன், தாமரை செல்வி என்ற இரு பிள்ளைகள் உண்டு.

1991-94: சிங்கப்பூர் துறைமுகத் தொழிலாளர் சங்கம் – முதலாம் துணை தலைவர்.

இவர்  தொழிற்சங்கத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டுடிருந்தார்.  அதற்காக பல சிறப்பு பயிற்சிகள் எடுத்துக்கொண்டார். சிங்கப்பூர் தொழிற்சங்கங்களை பிரதிநிதித்து கொரியா, ஜப்பான், சீனா, ஹாங்காங், புரூணை ஆகிய நாடுகளுக்குச் சென்று வந்தார்.

ஆற்றிய தமிழ்ப்பணிகள் ஆர்வமுள்ள மேடை பேச்சாளர், நடிகர், எழுத்தாளர் கவிஞர் எனப் பன்முக திறன் படைத்தவராய் விளங்கினார்.

ஐ.உலகநாதனால் நடத்தப்பட்ட “மாதவி” எனும் திங்களிதழின் துணையாசிரியராகப் பணிபுரிந்தார்.

படைத்த நூல்கள் 200கும் மேற்பட்ட கவிதைகளை எழுதியுள்ளார். அவை “தமிழ் மலர்” மற்றும் “தமிழ் முரசு” சிங்கப்பூர் பத்திரிகைளில் மற்றும் மலாயா தமிழ் பத்திரிகையிலும் வெளிவந்துள்ளன.

நூல்கள் எதுவும் வெளியிடவில்லை.

பெற்ற விருதுகள் 1972/73: “பாவாணர்” என்ற விருதளித்து தமிழ் அமைப்புக்கள் இவரைக் கவுரவித்தன.

தமிழ் மலர்” பத்திரிகையில் தன் எழுத்துக்களை பதித்ததால் இவர் “மலர் மாணிக்கம்” என அழைக்கப்பட்டார்.

மேடைகளில் வீரமுழக்கமிட்டதால் தமிழவேள் கோ.சாரங்கபாணி அவர்கள் “ந.முரசு” என கவிஞர் மலர் மாணிக்கத்தை அழைத்தார்.

கவிஞர் ஐ. உலகநாதன் இவரை “செந்தமிழ் செல்வன்” எனப் போற்றினார்.

சமூகப் பணி ஐ. உலகநாதன், உத்திராபதி, நாரணர், முல்லை வாணன், புதுமைப்பித்தன், பரசுராமன், நடராஜன், காவேரிநாதன்  அவர்களுடன் “மாதவி இலக்கிய மன்றம்” நிறுவி பிற்காலத்தில் அதன் தலைமை பொறுப்பையும் ஏற்று நடத்தினார்.

1973-2006: ஐ. உலகநாதன் அவர்கள் இந்தியா திரும்பியபோது 1973 முதல் தன்னுடைய இறுதிநாட்கள், 2006 வரை மன்றத்தின் செயலாளராக இருந்தார்.

மாதவி இலக்கிய மன்றத்தில் தமிழவேள் கோ.சாரங்கபாணி மணிமண்டபம் தந்த குழுவில் ஒருவராக விளங்கினார்.

அரசியலிலும் நாட்டம் இருந்ததால் திரு லீ குவான் யு அவர்களின் தொகுதியில் 1974, 1978, 1982 தேர்தல் பிரசார கூட்டங்களில் உரையாற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/kavimaalai/public_html/wp-includes/functions.php on line 4755