கவிதைத் திருவிழா

கவிஞர் மு. அ. மசூது

நூல் படிக்க

கவிஞரின் நூல்களை இங்கே படிக்கலாம்

நூலின் தலைப்பு இணைப்பு
உணர்வுகளின் ஊர்வலம் : கவிதைத் தொகுப்பு படிக்க
புதிய மின்னல்கள் : கவிதைத் தொகுப்பு படிக்க
பிறைத்தோணி : கவிதைத் தொகுப்பு படிக்க
சிங்கப்பூர் தமிழ் முஸ்லிம்கள் (மு.அ. மசூது, ஜே.எம். சாலி) NLB Ref
பூவானம் : சிங்கப்பூர் நியூடவுன் தொடக்கப் பள்ளி மணவர்கள் எழுதிய கவிதைகளின் தொகுப்பு ; தொகுப்பாசிரியர்: மு.அ. மசூது ; மொழியாக்கம், ஜி. பாலசுப்ரமணியன் NLB Ref

ஆவணப்படம்

குறிப்புகள்

   

இயற்பெயர் மு. அ. மசூது
புனைப்பெயர்கள்
பிறந்த ஆண்டு 15/03/1949
   
தொழில் / அலுவல் ஆற்றிய விவரம் மு. அ. மசூது (பிறப்பு: மார்ச்சு 15 1949) தமிழ்நாட்டின் கடைநல்லூரைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் சிங்கப்பூருக்கு புலம்பெயர்ந்து அங்கு விவேகானந்தர் தமிழ்ப் பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியையும், உமறுப் புலவர் தமிழ் உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலைக் கல்வியையும் கற்றார்.

1967: சிங்கப்பூர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் (தேசிய கல்விக் கழகம்) தமிழாசிரியராகப் பயிற்சி பெற்று 1970-ல் ஆசிரியர் கல்விச் சான்றிதழ் பெற்றார்.

1988: மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் தமிழில் இளங்கலை பட்டம் பெற்றார்.

தாயார் : ஹஸன் மீராள். மனைவி : அ.மரியம் பீவி. பிள்ளைகள் : ம.நஸிமா, ம.யாஸ்மின், ம,முனிரா, ம.ஹசினா.

டவுனர் தொடக்கப் பள்ளி, நியூடவுன் தொடக்கப் பள்ளி, கன்டொன்மெண்ட் தொடக்க பள்ளி என 50 ஆண்டுகளாகத் தமிழாசிரியப் பணியினைத் தொடர்ந்து தற்போது கல்வி மேலாண்மைப் பணியாற்றி வருகிறார் கவிஞர்.மசூது

பிற மொழியை இரண்டாம் மொழியாகப் பயில விழைந்த இந்தியர்கள், தமிழர்கள் சிலரை தமிழை இரண்டாம் மொழியாகப் பயிலச் செய்த பெருமைக்குரியவர் கவிஞர் மசூது.

தம் மனைவு, மூத்த மகள் ஆகியோரையும் தமிழாசிரியராக்கி தமிழ்பணியில் ஈடுபடுத்திய செயல்வீரர் மசூது அவர்கள்.

ஆற்றிய தமிழ்ப்பணிகள் 1980-ஆம் ஆண்டு எழுதத்தொடங்கிய இவர் மரபுக் கவிதைகள், புதுக்கவிதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளார். இவரின் கவிதைகள் தமிழ் முரசு, தமிழ் நேசன், பிறைக்கொடி ஆகிய இதழ்களில் வெளிவந்துள்ளன.

தொடக்கத்தில் சிறுவர் நாடகங்களையும், கதைகளையும் வானொலிக்கு எழுதி வந்திருக்கிறார். கவிஞர் க.து.மு.இக்பால் போன்றோர்ன் கவிதைகளைப் படித்து கவிதை எழுதும் ஆர்வம் பெற்றதாகக் குறிப்பிடுகிறார் கவிஞர் மசூது.

கட்டுரைகளுக்கு பரிசு பெற்றவர். இவரது மேடைப்பேச்சும் இயல்பிலேயே சிறந்து விளங்குகிறது.

கடையநல்லூர் முஸ்லிம் லீக் வெளியிடும் ‘நம் குரல்’ எனும் இதழுக்கு 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியராகச் செயலாற்றி வருகின்றார்.

1995, 1997-ஆம் ஆண்டுகளில் தமிழ் மொழி வாரத்தில் பொருளாளராகப் பொறுப்பு வகித்துள்ளார்.

20க்கும் மேலான சிறப்பு மலர்களுக்கு ஆசிரியராக இருந்துள்ளார்.

மலாய் மொழியிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே வெளி வந்த இஸ்லாமிய சமய மன்ற இதழைத் தமிழிலும் வெளிவர ஏற்பாடு செய்தபெருமைக்குரியவர்.

படைத்த நூல்கள் 1995: உணர்வுகளின் ஊர்வலம் : கவிதைத் தொகுப்பு

1999: பிறைத்தோணி : கவிதைத் தொகுப்பு

1999: புதிய மின்னல்கள் : கவிதைத் தொகுப்பு

மற்றவருடன் இணைந்து தொகுப்பாசிரியாக வழங்கிய நூல்கள்:

2008: பூவானம் (சிங்கப்பூர் நியூடவுன் தொடக்கப் பள்ளி மணவர்கள் எழுதிய கவிதைகளின் தொகுப்பு ; தொகுப்பாசிரியர்: மு.அ. மசூது ; மொழியாக்கம், ஜி. பாலசுப்ரமணியன்)

‘மூக்குக் கண்ணாடி’, ‘கிராமியக் கதைகள்’ ஆகியவையும் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து, படைப்பாளியாக்கி, அவர்தம் படைப்புகளை ஆசிரியாராக இருந்து வெளியிட்ட நூல்கள்.

2015: சிங்கப்பூர் தமிழ் முஸ்லிம்கள் : ஆய்வு நூல் (மு.அ. மசூது, ஜே.எம். சாலி)

‘உமறுப்புலவர்’ என்ற தொகுப்பு நூலையும் வெளியிட்டுள்ளார்.

பெற்ற விருதுகள் 1997: மலேசியா பாரதிதாசன் கழகம் இவரின் பொதுச் சேவைக்காகவும் கவிதைகளுக்காகவும் பாரதிதாசன் விருது வழங்கி விழா எடுத்துச் சிறப்பித்தது.
சமூகப் பணி 1968-ஆம் ஆண்டிலிருந்து சமூகப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

 

1978-லிருந்து கடையநல்லூர் முஸ்லீம் லீக் அமைப்பின் செயலாளராகவும் தற்போது அதன் துணைத் தலைவராகவும்,

1992-லிருந்து தமிழாசிரியர் சங்கத் துணைத் தலைவராகவும் தற்போது அதன் ஆலோசரகராகவும்,

2008-லிருந்து 10 ஆண்டுகளாக தமிழர் பேரவையின் துணைத் தலைவராகவும்

1999-லிருந்து புவனா விஸ்தா சமூக மன்றம் உள்ளிட்ட பல்வேறு சமூக மன்றங்களில் இந்தியர் நற்பணி மன்ற அடித்தளத் தலைவராகவும் பல்வேறு அமைப்புகளில் முக்கியமான பொறுப்புகளை ஏற்று சமூகத்திற்குத் தனது தன்னலமற்ற சேவைகளை ஆற்றி வருகிறார்.

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் உறுப்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/kavimaalai/public_html/wp-includes/functions.php on line 4755