கவிஞர் மு. தங்கராசன்
நூல் படிக்க
கவிஞரின் நூல்களை இங்கே படிக்கலாம்
நூலின் தலைப்பு | இணைப்பு |
கவிக்குலம் போற்றும் தமிழ்வேள் : கவிதைகள் | படிக்க |
பூச்செண்டு : சிறுகதைகள் | படிக்க |
அணிகலன் : கவிதைத் தொகுப்பு | படிக்க |
உதயம் : கவிதைத் தொகுப்பு | படிக்க |
மலர்கொத்து : சிறுகதைகள் | படிக்க |
சிந்தனைப் பூக்கள் : சிறுகதைத் தொகுப்பு | படிக்க |
மகரந்தம் : கவிதைத் தொகுப்பு | படிக்க |
மாதுளங்கனி : கவிதைத் தொகுப்பு | படிக்க |
பனித்துளிகள் : கவிதைகள் | படிக்க |
பொய்கைப் பூக்கள் : கவிதைகள் | படிக்க |
மலர்கூடை : கவிதைகள் | படிக்க |
கற்பனை மலர்கள் : சிறுகதைத் தொகுப்பு | படிக்க |
மணங்கமழும் பூக்கள் : நாடகம் | படிக்க |
நித்திலப் பூக்கள் : கவிதைத் தொகுப்பு | படிக்க |
மணக்கும் மல்லிகை : சிறுகதைத் தொகுப்பு | படிக்க |
வாகைப் பூக்கள் : கவிதைத் தொகுப்பு | படிக்க |
இன்பத் தமிழ் : மாணவர்களுக்கான கட்டுரைகள் | NLB Ref |
தமிழ் எங்கள் உயிர் | படிக்க |
மணமகன் யார் நகைச்சுவை நாடகம் | படிக்க |
எதிரொலி நகைச்சுவை நாடகம் | படிக்க |
தியாகச்சுடர் : நகைச்சுவை நாடகம் | படிக்க |
வானவில் : நாடகம் | படிக்க |
அமுதத் தமிழ் : மாணவர்களுக்கான கட்டுரைகள் | படிக்க |
அத்தைமகன் : நகைச்சுவை நாடகம் | படிக்க |
ஏ[ண/னி]ப்படி நகைச்சுவை நாடகம் | NLB Ref |
விண்வெளிப் பூக்கள் : நாடகத் தொகுப்பு | NLB Ref |
தாழம்பூ : நாடகத்தொகுப்பு | படிக்க |
இன்பத் திருநாடு : கவிதைகள் | படிக்க |
சூரியகாந்தி : கவிதை, கட்டுரை | படிக்க |
தேசிய மலர்கள் | NLB Ref |
சாமந்திப் பூக்கள் : நாடகத் தொகுப்பு | NLB Ref |
ஆவணப்படம்
குறிப்புகள்
![]() |
|
||||||||
தொழில் / அலுவல் ஆற்றிய விவரம் | 1934-ஆம் ஆண்டு நவம்பர் 6-ஆம் தேதி தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் முசிறி வட்டம், முருங்கப்பட்டி ஒன்றியத்தைச் சார்ந்த தளுகை பாதர்பேட்டை எனும் சிற்றூரில் திரு.ரெ.முத்துவீராசாமி நாயுடு மற்றும் திருமதி. பொன்னம்மாள் ஆகியோருக்கு ஏக புதல்வனாகப் பிறந்தார்.
இரண்டு வயதிலேயே அன்னையைக் காலராவுக்குப் பறிகொடுத்த பின்னர் தன் சிற்றன்னையான இராஜம்மாள் மற்றும் பாட்டி அம்மணியம்மாள் ஆகியோருடன் மலாயா சென்றிருந்த தம் தந்தையிடம் வந்தடைந்தார். அன்றைய முறையில் கோயிலில் ‘அ’ என்று மணலில் எழுத ஆரம்பித்து தமிழாசிரியர் பணிக்கு வரும்வரை, எல்லாம் தமிழிலேயே படித்தார். தமது பத்து வயதில் மலேசியா ஜொகூர் மாநிலத்தில் “நியூஸ்கூடாய்” தோட்டத் தமிழ்ப் பள்ளியில் படித்தார். பள்ளியின் ஆசிரியர் இவரது தந்தையாரே. அவ்வயதில் தோட்டத் தொழிலாளர்கள் நடத்திய “அல்லி அர்ச்சுனா” தெருக்கூத்து ஒன்றில் “பால அல்லியாக” நடித்துள்ளார். 1951: அன்றைய மலாயாக் கூட்டரசு – ஜொகூர் மாநிலத்தில் பணியிடைப் பயிற்சி ஆசிரியர். 1955: ஆசிரியாரகப் பட்டயம் பெற்றார். 1959: சிங்கப்பூரில் கலைமகள் தமிழ்ப்பள்ளியில் ஆசிரியராக பணிக்குச் சேர்ந்து, செம்பவாங் தமிழர் சங்கத் தமிழ்ப்பள்ளியில் (1961-1972) தலைமையாசிரியராகப் பணிபுரிந்தார். உமறுப் புலவர் தமிழ் உயர்நிலைப் பள்ளி உள்ளிட்ட பல தமிழ்ப் பள்ளிகளில் ஆசியர், தலைமையாசிரியர் என பணியாற்றியுள்ளார். 1985 ஆண் ஆண்டிற்குபின் ஆங்கில உயர் நிலைப்பள்ளிகளில் தமிழ் ஆசிரியாராகப் பணியாற்றினார். 1991-1997: சிங்கப்பூர் கல்வி அமைச்சில் தமிழ்ப்பாட நூலாக்கக் குழுவில் எழுத்தாளராகப் பணிபுரிந்தார். 1998-2001 வரை ஆசிரியராகப் பண்புரிந்து ஓய்வு பெற்றார். எழுத்துப்படைப்புகளையும், சமூகத் தொண்டையும் தொடர்கிறார். ஜப்பானியர், வெள்ளையர் காலனித்துவம், ஒன்றுபட்ட மலாயா என்று மூன்று ஆட்சிக் காலக்கட்டங்களைப் பார்த்தவர். சிங்கப்பூர் அடைந்து வந்துள்ள மாற்றங்களையும், தோற்றங்களையும், ஏற்றங்களையும் தமது இலக்கியப் படைப்புகளில் பதிவு செய்திருக்கிறார் கவிஞர் மு.தங்கராசன். கலைமகள் தமிழ்பள்ளி, செம்பவாங்க தமிழ்ப்பள்ளி, உமறுப்புலவர் தமிழ் உயர்நிலைப்பள்ளி, இரங்கூன் ரோடு உயர்நிலைப்பள்ளி, நேவல் பேஸ் உயர் நிலைபள்ளி முதலான பள்ளிகளில் தமிழாசிரியரகப் பணியாற்றியுள்ளார். ஆசிரியராக, பள்ளி முதல்வராக, பாடத்திட்ட அதிகாரி என பல்வேறு பொறுப்புகளில் இருந்து, ஓய்வு பெற்றவர். |
||||||||
ஆற்றிய தமிழ்ப்பணிகள் | 1955: தமிழ் முரசில் வெளிவந்த ‘வஞ்சகிதானா’ என்ற சிறுகதையே, ‘எழுத்தாளர்’ என அங்கீகாரம் தந்த எழுத்துத்துலக பிரவேசம்.
1963: சிங்கப்பூர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய முதல் தமிழ் நாடகம் 1982: இவரது சீரிய முயற்சியில் சிங்கைப்பாவலர்கள் முப்பது பேர் ஒருங்கிணைந்து பாடிய “கவிக்குலம் போற்றும் தமிழவேள் தமிழவேள் நாடக மன்றத்தின் தகைமையில் வெளியீடு கண்டது. சிங்கப்பூரில் “தமிழவேள் நாடக மன்றத்தில்” பல படைப்புகளை எழுதியும், இயக்கியும், நடித்தும் உள்ளார். மாணவர்களுக்காகக் கட்டுரை, கதை எனப் பல நூல்களை மாணவயிட்டுள்ளார். சிறந்த மேடைப்பேச்சாளர், சிறுகதை எழுத்தாளர், நாடகக் கதையாசிரியர், கவிஞர், நடிகர், சமூகத் தொண்டர் என பன்முகத் திறன் படைத்தவர். தளர்ந்த வயதிலும் தடையாறாது எழுதிய முதுபெருங்கவிஞர் சிங்கை முகிலன் அவர்கள் சொன்ன: “இருக்கும் வரை எழுதுவோம்; இயன்றவரை எம்மனோராம் எதிர்வரும் தலைமுறையினரிடம் சென்றடையச் செய்வோம்!” எனும் வரிகளே கவிஞர் மு.தங்கராசன் அவர்களின் தளராத எழுத்து முனைப்புக்குக் காரணமென கவிஞரே தமது நூலில் குறிப்பிடுகிறார். |
||||||||
படைத்த நூல்கள் | சிங்கப்பூர் தேசிய நூலகத்தின் நூல்கள் பட்டியலின்படி 39 தமிழ் நூல்களுக்குச் சொந்தக்காரர்.
கற்பனை மலர்கள், பூச்செண்டு, பொய்கை பூக்கள், மலர்க்கூடை, மலர்க்கொத்து, மகரந்தம், மணங்கமழும் பூக்கள், சூரியகாந்தி என பூ சார்ந்த தலைப்புகளாக இருக்கின்றனவே என்று ஒருவர் கேட்டதற்கு, எழுத்துலகம் என்ற இலக்கிய மலர்தோட்டத்தில் தம் “நூல்களும் மணக்கட்டுமே என்று வைத்தேன்,” என்றாராம். 1982: கவிக்குலம் போற்றும் தமிழவேள் 1985: பூச்செண்டு : சிறுகதைத் தொகுப்பு 1985: அணிகலன் : கவிதைத் தொகுப்பு 1988: உதயம் : கவிதைத் தொகுப்பு 1988: மலர்க்கொத்து : சிறுகதைத் தொகுப்பு 1988: சிந்தனைப் பூக்கள் : சிறுகதைத் தொகுப்பு 1988: மகரந்தம் : கவிதைத் தொகுப்பு 1989: மாதுளங்கனி: கவிதைத் தொகுப்பு 1992: பனித்துளிகள்: கவிதைகள் 1992: பொய்கைப் பூக்கள் 1993: மலர்க் கூடை 1995: கற்பனை மலர்கள்: சிறுகதைத் தொகுப்பு 1997: மணங்கமழும் பூக்கள் 2001: நித்திலப் பூக்கள்: கவிதைத் தொகுப்பு 2001: மணக்கும் மல்லிகை : சிறுகதைத் தொகுப்பு 2003: வாகைப் பூக்கள்: கவிதைத் தொகுப்பு 2004: இன்பத் தமிழ் : மாணவர்களுக்கான கட்டுரைகள் 2004: தமிழ் எங்கள் உயிர் 2007: மணமகன் யார் நகைச்சுவை நாடகம் 2007: எதிரொலி நகைச்சுவை நாடகம் 2007: தியாகச்சுடர் : நகைச்சுவை நாடகம் 2007: வானவில் : நாடகம் 2007: அமுதத் தமிழ் : மாணவர்களுக்கான கட்டுரைகள் 2007: அத்தைமகன் : நகைச்சுவை நாடகம் 2007: ஏ[ண/னி]ப்படி நகைச்சுவை நாடகம் 2007: விண்வெளிப் பூக்கள். நாடகத் தொகுப்பு 2008: தாழம்பூ : நாடகத்தொகுப்பு 2010: இன்பத் திருநாடு 2013: சூரியகாந்தி 2015: தேசிய மலர்கள் 2015: சாமந்திப் பூக்கள் : நாடகத் தொகுப்பு |
||||||||
பெற்ற விருதுகள் | 2012-ல் ‘வாழ்நாள் நல்லாசிரியர் சாதனை விருதை’ தமிழ்முரசும், சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கமும் கொடுத்துச் சிறப்பித்தது.
செம்பவாங் தமிழர் சங்கத் தமிழ் பள்ளியில் பணியாற்றியபோது, “தியாகி” எனும் வரலாற்றுக் கற்பனை நாடகத்தைப் படைத்து பள்ளிகளுக்கிடையேயான போட்டிகளில் செம்பவாங் பள்ளி முதல் பரிசு வென்றது. 2002: சிங்கப்பூர் வானொலி நடத்திய நாடகப் போட்டியில் “நெருஞ்சி முள்” எனும் இவரது நாடகம் இரண்டாம் பரிசு பெற்றது. |
||||||||
சமூகப் பணி | செம்பவாங் தமிழர் சங்கம், செம்பவாங் தமிழர் நலனபிவிருத்திச் சபை, தமிழவேள் நாடக மன்றம் போன்றவற்றில் நிர்வாகப் பொறுப்பேற்று பொதுப்பணியாற்றியவர்.
செம்பவாங் தமிழர் சங்கத்தில் செயலாளராக 12 ஆண்டுகள் பொறுப்பு வகித்தார். செம்பவாங் தமிழர் சங்க தமிழ்ப்பள்ளியின் உயர்நிலை பள்ளிக்கூடம் கட்டுவதற்கு நிதி சேர்ப்பதில் அவரின் பங்கு அதிகம். 1961-1975: செம்பவாங் தமிழர் சங்கத்தின் கௌரவப் பொதுச் செயலாளராகத் தொடர்ந்து பதினைந்து ஆண்டுகள் தொண்டு செய்ததோடு, அதே காலகட்டத்தில் அவரால் நிறுவப்பெற்ற தமிழவேள் நாடக மன்றத்தின் சார்பில் பதினைந்துக்கும் மேற்பட்ட மேடை நாடகங்களாய் அரங்கேற்றியுள்ளார். செம்பவாங் தமிழ்ப்பள்ளியில் தலைமையாசிரியர், சங்கத்தின் செயலாளர் பொறுப்பு என இரண்டு கடமைகள் அவரது எழுத்துப்படைப்புகளுக்கு 15 ஆண்டுகள் வனவாசம் வைத்துவிட்டதாம்! இருப்பினும், மாணவர்களுக்கும் ஆர்வம்கொண்ட குழுக்களுக்கும், நாடகங்கள் எழுதிக்கொண்டு இருந்திருக்கிறார். தமிழாசியர் மு தங்கராசன் அவர்களின் ஆசிரியர் பணி முற்றுபெற்று, எழுத்துப்படைப்புகளும் சமூகத் தொண்டும் தொடர்கின்றன. |