கவிதைத் திருவிழா

கவிஞர் நா. ஆண்டியப்பன்

நூல் படிக்க

ஆவணப்படம்

குறிப்புகள்

   

இயற்பெயர் நா. ஆண்டியப்பன்
புனைப்பெயர்கள்
பிறந்த ஆண்டு 19 செப்டம்பர் 1947
தொழில் / அலுவல் ஆற்றிய விவரம் 1947: செப்டம்பர் 19ஆம் தேதி தமிழ் நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் இராங்கியம் எனும் ஊரில் திரு.அ. நாராயண பிள்ளை மற்றும் திருமதி. பாப்பாத்தி எனும் பெற்றோருக்குப் பிறந்தார். உடன் பிறந்தோர் ஓர் அக்காள், ஒரு தம்பி.

1968: திருமணம். மனைவி திருமதி மீரா. பிள்ளைகள் – ஒரு மகன், இரு மகள்கள்.

1956ஆம் ஆண்டில் அதாவது தம் 9 ஆம் வயதில் மலேயா வந்தார் 1965 வரை மலேசியா ‘பேரா‘வில் தமது தொடக்கக் கல்வியைப் பயின்றார்.

1966 – 1967: தியாகராசர் கல்லூரி, மதுரை (புகுமுகு வகுப்பு)

1968 – 1971:  தாவரவியல் இளங்கலை அறிவியல் பட்டப் படிப்பு, தூய வளனார் கல்லூரி, திருச்சி (செயிண்ட் ஜோசப் கல்லூரி), சென்னைப் பல்கலைக்கழகம்.

1972 – 1976: நிர்வாகி, தனியார் நிறுவனம், சிரம்பான், மலேசியா

1976 – 1983: மலேசியாவில் வெளிவந்த தமிழ் மலர், தினமணி ஆகிய நாளிதழ்களில் துணையாசிரியர், செய்தி ஆசிரியர், உதவி நிர்வாக ஆசிரியர்.

1983 – 2011: சிங்கப்பூர் ஒலிபரப்புக் கழகம், சிங்கப்பூர்த் தொலைக்காட்சி நிறுவனம், மீடியாகார்ப்  ஆகியவற்றில் தமிழ்ச் செய்திப் பிரிவின் ஒலிபரப்புச் செய்தியாளர், மூத்த ஒலிபரப்புச் செய்தியாளர், செய்தி ஆசிரியர், துணைத் தலைவர் ஆகிய பதவிகளை வகித்த பின் 2009ல் ஓய்வு. அதே ஆண்டு மறுநியமனம் – 2011ல் ஓய்வு.

செய்தித் துறை, நடப்பு விவகாரங்களில் 40 ஆண்டு அனுபவம்.

ஆற்றிய தமிழ்ப்பணிகள் 1996: சிங்கப்பூர் எழுத்தாளர்ளுக்கு தமிழவேள் விருது

வழங்குவதற்காக முத்தமிழ் விழா இவரால் தொடங்கப்பட்டது..

2011: அக்டோபர் மாத இறுதியில் முதல் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நடத்தி பெருமை சேர்த்தவர்.

கவியரசு கண்ணதாசனவிழா, கவிச்சக்கரவர்த்தி கம்பன் விழா (2014 முதல்), சிங்கப்பூர் ஆனந்த பவன் உணவகத்தின் உரிமையாளர் அமரர் திரு. மு.கு. இராமச்சந்திரா அவர்களின் நினைவாக அவ்வுணவகத்தின் ஆதரவுடன் புத்தகப் பரிசு ஆகியவை திரு.நா.ஆண்டியப்பன் முயற்சியால் தொடங்கப்பட்டன.

2015: சிங்கப்பூர் அரசாங்கம் ஆண்டுதோறும் நடத்தும் எழுத்தாளர் விழாவில் முதல் முறையாக நான்கு அதிகாரத்துவ மொழிகளிலும் இலக்கியக் கருத்தரங்கு நடத்தி அனைவரின் வரவேற்பையும் பெற்றார்.

2015: சிங்கப்பூர் சுதந்திரம் பெற்ற 50 ஆண்டுப் பொன் விழாவை ஒட்டி 50 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பும் 50 கட்டுரைகள் அடங்கிய தொகுப்பும் என இரண்டு நூல்கள் இவரது முயற்சியால் வெளியிடப்பட்டன.

2016: சென்னைப் புத்தகக் காட்சியில் முதல் முறையாகச் சிங்கப்பூர் அரசாங்கத்தின் முழு ஆதரவுடன் பங்கேற்றுச் சிங்கப்பூர்ப் படைப்புகளைக் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்க ஏற்பாடு செய்தார்.

கதைக் களம்: மாதாந்திர நிகழ்ச்சியாக கதைக் களம் எனும் நிகழ்ச்சியை எழுத்தாளர் கழகத்தின் மூலம் நடத்தி, வளரும் எழுத்தாளர்களுக்குச் சிறுகதை எழுத வாய்ப்பும் பயிற்சியும் கிடைக்கமாறு செய்தார் திரு.நா.ஆண்டியப்பன்.

படைத்த நூல்கள் 1985: “பாரதியின் பாஞ்சாலி சபதம்

மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரின் பாஞ்சாலி சபதம் சிறு காப்பியத்தை நாடக வடிவில் எழுதியது

1993: “வெற்றித் திருமகன்

கவிச்சக்கரவர்த்தி கம்பர் இயற்றிய இராமாயணத்தை நாடக வடிவில் எழுதியது. இது நூலாக வருவதற்கு முன் மலேசியாவின் தினமணி ஞாயிறு இதழில் 85 வாரங்களுக்குத் தொடராக வெளிவந்தது

2007: “திரைகடலோடி” (திரு.நா.ஆண்டியப்பன் அவர்களின் வாழ்க்கை வரலாறு)

2014: “மீசை முளைக்காத காதல்”  கவிதைத் தொகுப்பு

2018: “முள்ளும் மலரும்” எனும் சிறுகதைத் தொகுப்பை 2018 ஜூலை மாதம் வெளியிட இருக்கிறார்.

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர்கள்” எனும் நூலைத் தொகுத்து வெளியிட்டார்

13 எழுத்தாளர்கள் எழுதிய “சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம் – ஒரு பார்வை” எனும் சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய வரலாற்று நூலின் தொகுப்பாசிரியர்களில் ஒருவர்

சிங்கப்பூரின் 35வது தேசிய நாளை ஒட்டி 2000ஆம் ஆண்டில் அரசாங்க ஏற்பாட்டில் மரினா பேயில் எழுத்தாளர் கழகம் நடத்திய கவியரங்கக் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து நூலாக வெளியிட்டார்

தமிழ் வளர்த்த சான்றோர்” எனும் தலைப்பில் 40 தமிழ்ச் சான்றோர்களின் வாழ்க்கை வரலாற்றைச் சுருக்கமாக மாணவர்களுக்காக எழுதி வெளியிட்டார்.

சே.வெ. சண்முகம் சிறுகதைகள்” நூலைத் தயாரித்து வெளியிட்டார். கதைகளைத் தெரிவு செய்து கொடுத்தவர் எழுத்தாளர் திரு. பொன். சுந்தரராசு.

எழுத்தாளர் கழகத்திற்காகப் பல மலர்கள் தயாரித்து வெளியிட்டுள்ளார்.

பெற்ற விருதுகள் 1993: “வெற்றித் திருமகன்” நூல் வெளியீட்டின்போது “இலக்கிய வேந்தன்” எனும் பட்டத்தை சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் வழங்கியது.

2012:

தமிழ்ப் பணிச் செம்மல்” பட்டத்தை தி.மு.க. இலக்கிய அணி வழங்கியது.

சிங்கப்பூரில் இயங்கும் தமிழ் மொழி பண்பாட்டுக் கழகம் “பாரதி இலக்கிய விருதை” வழங்கியது.

2013:

செந்தமிழ் செம்மல் திலகம்” விருதை பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் தலைமையில் இயங்கும் பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் சென்னையில் வழங்கியது.

சென்னைத் தமிழ் எழுத்தாளர் கழகம் பாராட்டுப் பத்திரம் வழங்கிச் சிறப்பித்தது

2014: ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை பாராட்டுப் பத்திரம் வழங்கிச் சிறப்பித்தது.

2015:

ஏப்ரல் மாதம் ஜமால் முகமது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் இவரது தமிழ்ப் பணியைப் பாராட்டி “ஜமாலியன் விருது” வழங்கிச் சிறப்பித்தது.

செப்டம்பரில் இவரது தமிழ்ப் பணிக்கு மேலும் சிறப்பளிக்கும் வகையில் அமரர் வாசீக கலாநிதி கி.வா.ஜ. இலக்கிய விருதினை அவரது பெயரில் சென்னையில் இயங்கும் அறக்கட்டளை சிங்கப்பூரில் இவருக்கு வழங்கியது.

டிசம்பர் மாதம் புதுச்சேரி விடுதலைப் போராட்ட வீரர் இரத்தினவேலு-வேங்கசேடன் அறக்கட்டளை அயலகத் தமிழ் அறிஞர்களுக்கு வழங்கப்பெறும் பேராசிரியர் க.ப. அறவாணர் தமிழ் விருதினை வழங்கிச் சிறப்பித்தது.

டிசம்பரில் பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் இவரது தமிழ்த் தொண்டினைப் பாராட்டி “நற்றமிழ்ச் செல்வர் – நயன்மிகு நற்றமிழோன்” எனும் பட்டம் வழங்கியது.

2016:

பிப்ரவரியில் திருச்சி பன்னாட்டு அரிமா சங்கங்கள் 324A2 மாவட்டத்தின் எழுத்தறிவித்து இறைவனாவோம் அறக்கட்டளை, ஸ்ரீரங்கம் அரிமா சங்கம், தமிழ் இதழியல் இயக்கம் ஆகியவை இணைந்து “செந்தமிழ் வேந்தர்” எனும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தன.

ஏப்ரலில் சிங்கப்பூர்க் கடையநல்லூர் முஸ்லிம் சங்கம் இவரது தமிழ்ப் பணியைப் பாராட்டி அ.ந. மெய்தீன் விருது வழங்கிச் சிறப்பித்தது.

2018:

ஏப்ரலில் தமிழக அரசு மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் மூலம் 2016ஆம் ஆண்டிற்கான “அயலகத் தமிழ் இலக்கிய விருது” வழங்கிச் சிறப்பித்தது. சென்னைத் தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி திரு. பழனிச்சாமி பொன்னாடை போர்த்தி, விருது வழங்கி, ஒரு லட்ச ரூபாய் காசோலையும் வழங்கினார்.

மறைந்த முன்னாள் முதல்வர் திருவாட்டி ஜெயல்லிதா 2015ல் அறிவித்த அயலகத் தமிழ் அறிஞர்களுக்கான விருதை முதல் முறையாக தமிழக அரசு வழங்கியுள்ளது.

சமூகப் பணி 1993: சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தில் உறுப்பினர்.

1995 – 2005: மதிப்பியல் செயலாளர், சி.த.எ.க.

2005 – இன்றுவரை: தலைவர், சி..த.எ.க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/kavimaalai/public_html/wp-includes/functions.php on line 4757