கவிதைத் திருவிழா

கவிஞர் ந. வீ. சத்தியமூர்த்தி

நூல் படிக்க

கவிஞரின் நூல்களை இங்கே படிக்கலாம்

நூலின் தலைப்பு இணைப்பு
தூரத்து மின்னல் படிக்க
சிந்தை கவர்ந்த சிவனடியார்கள் படிக்க
பார்வை “கள்” NLB Ref
ஏணிப்படிகள் NLB Ref

ஆவணப்படம்

குறிப்புகள்

   

இயற்பெயர் ந. வீ. சத்தியமூர்த்தி
புனைப்பெயர்கள் தமிழ்த்தம்பி
பிறந்த ஆண்டு 20-06-1956
   
தொழில் / அலுவல் ஆற்றிய விவரம் 1956: தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை நகரின் அருகில் உள்ள ஜாம்புவானோடை – கல்லடிக்கொல்லை கிராமத்தில் திரு.ந.வீரையாத்தேவர் – திருமதி.தங்கபாப்பு ஆகியோரின் தலைமகனாகப் பிறந்து, பெரியப்பா – பெரியம்மா கா.வைரப்பதேவர் – நாகம்மாள் ஆகியோரின் வளர்ப்பு மகனாக வளர்ந்தவர். உடன் பிறந்தோர் ஐவர்.

உள்ளூர்களில் பள்ளிக் கல்வியையும், அதிராம்பட்டினம் காதர் மொஹைதீன் கல்லூரியில் இளநிலை (வரலாறு) பட்டப்படிப்பையும் முடித்தவர்.

1977: உறவுப்பெண் தேன்மொழியுடன் சீர்திருத்த திருமணம். மகன் குமாரவேல், மகள் சரண்யாதேவி.

1994 டிசம்பர்: வேலை அனுமதியில் சிங்கப்பூர் வந்த நாள் முதல் கட்டுமான நிறுவனத்தில் நிர்வாகம் – கொள்முதல் அலுவலராக 19 ஆண்டுகள் பணிபுரிந்து தொடர்ந்து சிங்கையில் பணியாற்றி வருகிறார்.

2007: சிங்கப்பூர் குடியுரிமை பெற்றார்.

ஆற்றிய தமிழ்ப்பணிகள் சிங்கப்பூர் கவிமாலையில் தொடக்க காலத்தில் இருந்து பங்கேற்று கவிதைப் பணியாற்றி வருகிறார். கவியரங்களில் பங்கேற்றுள்ளார்.

முதல்  கவிதை கல்லூரி ஆண்டு மலரில் வெளிவந்தது. கல்லூரி கவியரங்கம், உரையரங்குகளில் கவிதை எழுதி வாசித்து பாராட்டும் பரிசுகளும் பெற்றவர்.

உள்ளூர் பள்ளியில் பகுதிநேர குறளமுதம் ஆசிரியர் பணி ஆற்றிய  காலத்தில் பள்ளியின் 9 ஆண்டு விழாக்களில் கவிதை மற்றும் நகைச்சுவை நாடகம் எழுதி மாணவர்களை இயக்கி கவிதையுடன் படைப்பாளியாகவும் திகழ்ந்தார்.

அப்போது நடைபெற்ற அரசாங்கத்தின் அறிவொளி இயக்க திட்டத்தில் வட்டார ஒருங்கிணைப்பாளராகப் பொறுப்பேற்று அறிவொளி இயக்க பாடல்களை எழுதியும் பாடியும் பாராட்டும் சான்றிதழும் பெற்றார்.

சிங்கப்பூர் கவிமாலை , சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்க் கழகம் , மாதவி இலக்கிய மன்றம் ஜாலான் பூசார்  சமூக மன்றம்  புகித் திமா சமூக மன்றம்  காலாங் சமூக மன்றம்  தண்டாயுதபாணி  திருக்கோவில் கவியரங்கம் என் பல கவியரங்கங்களில் பங்கேற்றவர்.  

சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் இவரின் பாடல்களும்  இடம்பெற்று மெல்லிசை மன்னர்  எம் எஸ் விஸ்வநாதன் அவர்கள் இசையமைத்துப் பாடிய இசைவட்டு வெளியிடப்பட்டுள்ளது 

படைத்த நூல்கள் நான்கு கவிதை நூல்கள் வெளியிட்டிருக்கிறார்.

2008: தூரத்து மின்னல் : தமிழ்முரசு நாளிதழில் எழுதிய இவரின் கவிதைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் முதல் தொகுப்பு.

2011: சிந்தை கவர்ந்த சிவனடியார்கள்

2014: பார்வை “கள்”‘ (குறும்பாத் தொகுப்பு)

2014: ஏணிப்படிகள் (தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் போதித்த 40 ஆசிரியர்களின் சிறப்பினை பாடியுள்ளார்)

பெற்ற விருதுகள் 1. சிங்கப்பூர் தமிழ் ஆசிரியர் கழகம் நடத்திய வெள்ளி விழா கவிதைப் போட்டியில் 10 கிராம் தங்க காசு

2007: சிங்கப்பூர் தேசிய கலைகள் மன்றம் நடத்தும் பேனா முனை விருதுப் போட்டியில் இரண்டாம் பரிசு (3000 வெள்ளிகள்).

2007: தமிழ் முரசில் நடந்த போட்டோ போட்டி எனும் போட்டியில் பங்கேற்று பரிசு பெற்றார் 

இவரின் இரண்டாவது படைப்பான சிந்தை கவர்ந்த சிவனடியார்கள் எனும் நூல் வெளியீட்டில் இவருக்கு  தமிழ்த்தம்பி எனும் சிறப்புப் பெயர் வழங்கப்பட்டது.

கல்லூரியில் படிக்கும் காலத்தில் நித்தம் சந்தமுடன் கவிதை புனைந்ததால் “சந்தக்கவி  ஜாம்பை சத்யன்” என்று நண்பர்கள் பெயர் சூட்டினர்.

சமூகப் பணி 1. மாதவி இலக்கிய மன்றம்  வாழ்நாள் உறுப்பினர்  மற்றும் உட்கணக்கு ஆய்வாளர்

2. சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக உறுப்பினர் மற்றும் முன்னாள் செயலவை உறுப்பினர்

3. 2007 முதல் கவிமாலை பதிவு பெற்ற 2015 வரை  ஒருங்கிணைப்பாளர் மற்றும் கவிமாலையின் முதல் செயலாளர்.

4. மாதவி இலக்கிய மன்றத்தில் “இலக்கியச் சோலை” என்னும் மாதாந்திர இலக்கியச் சந்திப்பை துவக்கியவர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/kavimaalai/public_html/wp-includes/functions.php on line 4755