கவிதைத் திருவிழா

கவிஞர் கவிதைநதி ந.வீ.விசயபாரதி

நூல் படிக்க

ஆவணப்படம்

குறிப்புகள்

 
இயற்பெயர் ந.வீ.விசயபாரதி
புனைப்பெயர்கள்
பிறந்த ஆண்டு 2-1-1958

 

தொழில் / அலுவல் ஆற்றிய விவரம் 1958: தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை நகரின் அருகில் உள்ள ஜாம்புவானோடையில் பிறந்தவர் கவிஞர் ந.வீ.விசயபாரதி. பெற்றோர் திரு.ந.வீரையாத்தேவர் –  திருமதி.தங்கபாப்பு. மனைவி வி.கமலா. இரு புதல்விகள்.

சென்னைப்பல்கலைக்கழகத்தில் இளங்கலைத் தமிழிலக்கியப் பட்டக்கல்வியை இரண்டாம் ஆண்டு வரை பயின்றவர்.

திருவாரூரில் தமிழறிஞர் சரவணத்தமிழனாரின் இயற்றமிழ்ப் பயிற்றகத்தில் ‘பாவலர்‘ பட்டயம் பெற்றவர்.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் தற்போதைய தமிழ்த்துறைத் தலைவரான முனைவர் ய. மணிகண்டனைத்தன் இலக்கண குருவாக ஏற்றுக்கொண்டவர்.

21-ஆண்டுகளுக்கு முன் சிங்கப்பூர் வந்தபின் தன் கவிதை சார்ந்த திறன் மெருகேறியதாகவும் இந்நாட்டிலுள்ள கவிமாலை, எழுத்தாளர் கழகம் போன்ற அமைப்புகளும் தமிழறிஞர் சுப.திண்ணப்பன் போன்ற அறிஞர்களும் தன் மொழியாற்றலும் கவித்துவமும் முன்னேறத் துணை செய்ததாகக் கூறுகிறார்.

ஆற்றிய தமிழ்ப்பணிகள் பள்ளிப்படிப்பு முடித்த ஊரான த்துப்பேட்டையில் விதைக்கான இயக்கமாக கவிதை முற்றம் என்ற அமைப்பை நிறுவியதோடு கட்டணமற்ற யாப்பிலக்கண வகுப்புகள் மூலம் மரபுக் கவிஞர்கள் பலரை உருவாக்கியவர்.

பள்ளிப்பருவம் முதலே கவிதைகள் எழுதும் இவர் முத்துப்பேட்டை அரசினர் ஆண்கள் பள்ளியில் கவிதைக்கென கையெழுத்துப் பிரதி நடத்தியிருக்கிறார்

சிங்கப்பூரின் நூல் வெளியீட்டு விழாக்களிலும்  இலக்கிய மேடைகளிலும் இவர்  நெறியாளராக இருந்து நேரக்கட்டோழுங்கையும் காத்து சுவைபடவும் தொகுத்து வழங்கி வருகிறார்.

பட்டுக்கோட்டை கம்பன் கழகத்திலும் உவமைக் கவிஞர் சுரதா உட்படப் புகழ்பெற்ற கவிஞர்கள் தலைமையில் கவியரங்குகளில் பாடிய சிறப்புடையவர் கவிஞர் ந.வீ.விசயபாரதி.

படைத்த நூல்கள் இதுவரை எட்டு படைப்புகள்:

2005: நிழல்மடி

2006: திரவிய தேசம்

2010: பூட்டுகள் (‘தமிழ் முரசு’ நாளிதழில் வெளியான கவிதைகளின் தொகுப்பு)

2010: பூக்கள் உடையும் ஓசை

2010: புலமைக்கு மரியாதை: (கட்டுரை நூல்) ஒலி 96.8 வானொலியில் தொடர்ச்சியாக ஒலிபரப்பான இலக்கிய உரைகளின் தொகுப்பு.

2014: தனிவழி

2014: வால் முளைத்த காதுகள்

நிலவின் தோல்வி

பெற்ற விருதுகள் கவிஞர் கனிமொழி பொறுப்பேற்று சிங்கப்பூர் தொலைக்காட்சியில் நடத்திய பேனா முனை கவிதைப்போட்டியில் முதல்பரிசும்,

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக வெள்ளி விழாப்போட்டியில் மரபுக் கவிதைக்கென முதல் பரிசும்,

200-வது கவிமாலையின் மரபுக்கு கவிதைப்போட்டியில் முதல் பரிசும்,

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் முத்தமிழ் விழாப்போட்டிகளில் கவிதைக்காக முதல், இரண்டாம் பரிசுகளும்,

கவிமாலை,கவிச்சோலை கவிதைப்போட்டிகளில் பலமுறை பரிசுகளும் பெற்றிருக்கிறார்.

2008-ம் ஆண்டில் கவிமாலை நிறுவனர் பிச்சினிக்காடு இளங்கோ வழங்கிய  ‘கவிதை நதி

2010-ம் ஆண்டில் மாதவி இலக்கிய மன்றம் வழங்கிய

முத்தமிழ் வித்தகர்

2011-ம் ஆண்டில் சென்னையில் புலவர் பொன்னடியான் பொன்விழாவில் தமிழறிஞர் வா.செ.குழந்தைசாமி தலைமையில் வழங்கிய ‘கவிச்சுடர்

போன்ற பல பரிசுகளும் பட்டங்களும் பெற்ற சிறப்புக்குரிய கவிஞர் ந.வீ.விசயபாரதி.

சமூகப்பணி கவிமாலை சிங்கப்பூர் அமைப்பின் நீண்டகால உறுப்பினர்.

கவிமாலை அமைப்பில் மரபுக்கவிதைப் பயிற்சியும் நடத்துகிறார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/kavimaalai/public_html/wp-includes/functions.php on line 4757