கவிதைத் திருவிழா

கவிஞர் நூர்ஜஹான் சுலைமான்

நூல் படிக்க

கவிஞரின் நூல்களை இங்கே படிக்கலாம்

 

நூலின் தலைப்பு இணைப்பு
வேரில் நிற்கும் விழுதுகள்  (கவிதை மற்றும் கதைத் தொகுப்பு) NLB Ref
பொழுது புலருமா (சிறுகதைத் தொகுப்பு) படிக்க
உயிர் நிலவு (கவிதைத் தொகுப்பு) படிக்க
தையல் மெஷின்  (சிறுகதைத் தொகுப்பு) NLB Ref
வேர்கள்  (சிறுகதைத் தொகுப்பு) NLB Ref
பொன்விழாப்  பூமகள் (கவிதைத் தொகுப்பு) NLB Ref
இமைகளாய்க் காப்போம் (கவிதைத் தொகுப்பு) NLB Ref

ஆவணப்படம்

 

குறிப்புகள்

   

இயற்பெயர் நூர்ஜஹான் சுலைமான்
புனைப்பெயர்கள்
பிறந்த ஆண்டு 6/2/1951
   
தொழில் / அலுவல் ஆற்றிய விவரம் 1951: சிங்கப்பூரில் 06.02.1951 அன்று பிறந்தார்.

தந்தை அகமது ஷா, தாயார் ஷேக் மீராள் (மர்ஜூம்).

ஒரு தமக்கை, தமையன், தம்பி மற்றும் தங்கை மூவர் என அறுவருடன் பிறந்தவர்.

உயர்நிலை ஒன்று வரை படித்து பின் இளம்வயதிலேயே படைப்புத்திறன் மிக்கவராய் விளங்கினார்.

1969 ஆம் ஆண்டு திரு சுலைமானை மணந்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள்.

சொந்தமாக உணவகம் வைத்து நடத்திவந்தவர்.

தற்சமயம் மினிமார்ட்டில் உதவி நிர்வாகி 

ஆற்றிய தமிழ்ப்பணிகள் 12 வயது முதல் எழுத துவங்கினார். பள்ளிப்பருவத்தில் கட்டுரைகள் எழுதத்துவங்கியவர். மாணவர் மணிமன்றம்  மற்றும் வானொலியில் 

கட்டுரை படைத்தது வந்தார். 

1967: முதல் சிறுகதை உடைந்த வளையல் தமிழ்மலரில்  வெளிவந்தது  தொடர்ந்து தமிழ் முரசில் கட்டுரைகள், சிறுகதைகள் மற்றும் தொடர்கதைகள் எழுதி பரிசுகள் பெற்றார்.

கவிமாலை  துவங்கியபின் அதில் தன்னை இணைத்துக்கொண்டு கவிதை எழுத ஆர்வம் கொண்டு பங்கேற்கத்   துவங்கினார்.

தொலைக்காட்சியில் நவரசங்கள் எனும் தொடர் நிகழ்வில் “கருணை” எனும் தலைப்பில் கவிதை வாசித்தார்.

வானொலியில் 30 நிமிடங்கள் நேயர் நெஞ்சம் எனும் நிகழ்ச்சி படைத்தார்.  வானொலியில் தொடர் நாடகங்கள், கவியரங்கம், நேயர் நேரம் நிகழ்ச்சிகளில் கவிதை படைத்தார். 

தொடர்ந்து தமிழ் முரசு நாளிதழில் அதிகம் கவிதைகள் எழுத துவங்கினார். கட்டுரை மற்றும் கதைகள் எழுதுவதை குறைத்துக் கொண்டு கவிதை எழுதுவதில் தன்னை செம்மைப் படுத்திக் கொண்டார்.

கவிமாலையிலும் கவிதைநதி திரு.ந.வீ.விசயபாரதியிடமும் யாப்பிலக்கணம் பயின்று மரபுக்கவிதைகளையும் படைக்கும் திறன்பெற்றதாகக் கூறுகிறார் கவிஞர் நூர்ஜஹான் சுலைமான்.

தன வாழ்நாளின்  இறுதிவரை படித்துக் கொண்டும் எழுதிக்கொண்டும்  இருக்க வேண்டும் என்பதைத் தன் வாழ்நாள் விருப்பமாகத் தெரிவிக்கிறார் கவிஞர் நூர்ஜஹான் சுலைமான்.

படைத்த நூல்கள் 2005: வேரில் நிற்கும் விழுதுகள்  (கவிதை மற்றும் கதைத் தொகுப்பு)

2007: பொழுது புலருமா   (சிறுகதைத் தொகுப்பு) (தமிழ் முரசில் தொடர்கதையாக வெளிவந்தது)

2010:  உயிர் நிலவு  (கவிதைத் தொகுப்பு)

2012: வேர்கள்  (சிறுகதைத் தொகுப்பு)

2014: தையல் மெஷின்  (சிறுகதைத் தொகுப்பு)

2017: பொன்விழாப்  பூமகள் (கவிதைத் தொகுப்பு)

2017: இமைகளாய்க் காப்போம் (கவிதைத் தொகுப்பு)

பெற்ற விருதுகள் தொடர்ந்து கவிமாலையில் பங்கேற்று கவிதைப்போட்டிகளில் பரிசுகளை வென்றுள்ளார்.

வெஸ்ட்  கோஸ்ட் சமூக மன்ற பாராட்டுச் சான்றிதழ் நினைவுப்பரிசு 

வானொலி  நிகழ்வுகளில் எழுதிய நாடகங்களுக்கு கிடைத்த பரிசுகள்  

1996: சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் நடத்திய முதியோருக்கான  சிறுகதைப்போட்டியில் பரிசு 

1999: சிங்கப்பூர் ஜாமியா வழங்கிய  சிறந்த அன்னையருக்கான பரிசு 

2000: ஐக்கிய முஸ்லீம் சங்கம் வழங்கிய  சமூக கலை  இலக்கிய நற்பணி விருது 

2011: கலைப்பித்தர்கழகம் வழங்கிய சிறந்த அன்னையர் விருது 

2011: தென்காசி முஸ்லீம் சங்கம் வழங்கிய இலக்கிய விருது 

2012: இந்தியாவின் நர்கீஸ் இதழ் நடத்திய உலகளாவிய நாவல் போட்டியில்  ஆறுதல் பரிசு 

சமூகப் பணி மாதவி இலக்கிய மன்ற உறுப்பினர் 

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்க் கழகத்தின் உறுப்பினர், மற்றும் ஈராண்டு  செயலவை உறுப்பினர் 

வெஸ்ட் கோஸ்ட் சமூக மன்ற இந்தியர் நற்பணி செயற்குழுவில் நீண்ட நாள் உறுப்பினர். 

கவிமாலையின் மூத்த உறுப்பினர்  மற்றும் செயலவை உறுப்பினர் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *