கவிதைத் திருவிழா

கவிஞர் பாத்தென்றல் முருகடியான்

நூல் படிக்க

ஆவணப்படம்

குறிப்புகள்

 
இயற்பெயர் வே. பழநி 
புனைப்பெயர்கள் முருகடியான் / முருகதாசன்
பிறந்த ஆண்டு 15/07/1944
தொழில் / அலுவல் ஆற்றிய விவரம் 1944: தமிழகத்தின் தஞ்சை மாவட்டம் பூம்புகாருக்குப் பக்கத்திலுள்ள ‘வாணகரி’ என்னும் ஊரில் பிறந்தார். கீழக்கரை எனும் சிற்றூரில் வளர்ந்தார்.

பெற்றோர்: வேல்முருகன் மற்றும் அமுதச்செல்வம்.

கல்வி உயர்நிலை எட்டு வரை.

1957 : பதின்மூன்றாம் அகவையில் சிங்கை வந்து முதலில் கப்பலில் பணிபுரிந்தார்.

தொடக்காலத்தில் நாத்திகம் பேசிய இவர் பின்பு முருகன்பால் பக்தி கொண்டு “முருகதாசன்” என்றானவர்.

ஓய்வு பெற்ற மின்னாளுநர். (எலக்ட்ரீசன்).

ஆற்றிய தமிழ்ப்பணிகள் பதின்மூன்று வயது முதலே இசைப்பாடல்கள் இயற்றிப் பாடியவர்.

45 ஆண்டுகளுக்கும் மேலாக கதை, கட்டுரை, கவிதையென இலக்கிய உலகில் பங்களித்துக் கொண்டிருக்கிறார்.

பாடல், நடிப்பு, சொற்பொழிவும் வில்லுப்பாட்டு போன்ற துறைகளில் அவரது கலைப்பணி தொடர்ந்தது, தொடர்கிறது. பல மேடைகள், வானொலி, தொலைக்காட்சிகளில் கவிஞரது படைப்புகள் இடம்பெற்றுள்ளன.

புராண, இதிகாச, இலக்கிய, வரலாறு என பல தளங்களில் பற்றி இதுவரை 25 வில்லுப்பாட்டுகள் அரங்கேறியுள்ளன.

படைத்த நூல்கள் 1976/1989/1991/2008 : திருமுருகன் காவடிச்சிந்து (பக்தி)

1989: தேன்மலர்கள் (இளையர் பாடல்கள்)

1990,1993: முருகதாசன் கவிதைகள் (கவிதைத் தொகுப்பு-1)

1963/1990: அழகோவியம் (குறுங்காவியம்)

1990: மழலைமருந்து (சிறுவர் பாடல்கள்)

1990: வாழ்வருள்வாள் வடகாளி (பக்தி)

1997: சூரியதாகம்  (கவிதைத் தொகுப்பு-2)

1997: நெற்றிக்கண் (கவிதைத் தொகுப்பு-3)

1997: வானவில் (கவிதைத் தொகுப்பு-4)

2003: தேம்பாவை (சிங்கப்பூர் பாவை நூல்)

2004: வாடாமலர்கள்

2008: பாத்தென்றல் முருகடியானின் (முருகதாசன்) சங்கமம் : கூடுகை (காப்பியம்- 12-வது நூல்)

2008: அயலகத் தமிழ் இலக்கியம் : நீரும் நெருப்பும்

2012: பேராசிரியர் முனைவர் திண்ணப்பர் பிள்ளைத் தமிழ்

2013: விழி! எழு! விரைந்து வா!

பெற்ற விருதுகள் 1963: கோலாலம்பூர் தமிழ்இளையர் மணிமன்றம் நடத்திய குறுங்காவியப் போட்டியில் “அழகோவியம்” எனும் குறுங்காவியத்திற்கு முதல்பரிசாக தங்கப்பதக்கம் பெற்றவர்.

1976: “பாத்தென்றல்”: சிங்கப்பூர் தமிழர் இயக்கம்  – சுத்திதானந்தா அடிகள்.

1993: வில்லிசைவேந்தர் : தமிழவேள் நாடகமன்றம்.

1998: “மோண்ட்பிளாங்க்” இலக்கிய விருது, சிங்கை இலக்கியத்திற்கான பங்களிப்பிற்காக.

2003: தமிழவேள் விருது (சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம்)

2004 : தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத்தின் திருக்குறள் விழா விருது

2008: கரிகாலன் விருது (சிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நிறுவியுள்ள தமிழவேள் கோ. சாரங்கபாணி ஆய்விருக்கை மூலம் வழங்கப்படும் கரிகாலன் விருது)

2010: சங்கமம் காப்பிய நூலுக்கு சிங்கப்பூர் இலக்கியப் பரிசு (10,000 வெள்ளி ரொக்கப்பரிசும்)

*பல முதல் பரிசுகள்

சமூகப் பணி செயலாளர் – சிங்கப்பூர் மாதவி இலக்கிய மன்றம்.

செயலாளர், துணை செயலாளர்  – சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/kavimaalai/public_html/wp-includes/functions.php on line 4757