கவிஞர் பாத்தூறல் முத்து மாணிக்கம்
நூல் படிக்க
கவிஞரின் நூல்களை இங்கே படிக்கலாம்
ஆவணப்படம்
குறிப்புகள்
![]() |
|
||||||||
தொழில் / அலுவல் ஆற்றிய விவரம் | 1928: புதுக்கோட்டையை அடுத்த நெய்வேலி எனும் கிராமத்தில் பிறந்து அங்கேயே 25 வயது வரையில் படித்தவர்.
1953: சிங்கப்பூருக்குப் புலம்பெயர்ந்து வந்து உறவினரின் உதவியுடன் தேநீர் கடை நடத்தி வந்தார். கம்போங் ஒழிப்பின் போது அந்தக் கடையையும் இழந்தார். ஊரில் படித்தத் தமிழோடு இங்கும் பல கவிஞர்களுடன் பழகியும் தமிழர் இயக்கத்திலும் தமிழ் கற்றார். 1959: ஜானகி என்பவரைத் தன் வாழ்க்கைத் துணையாக ஏற்று உமாராணி, இரவீந்திரன், இராதா, கோகிலவாணி, ஜெயந்தி ஆகிய 5 பிள்ளைகளைப் பெற்றெடுத்து பெரு வாழ்வு வாழ்ந்து வருகிறார் பண்டிட் இராமலிங்கம் அவர்களிடம் இசை படித்தார். அதனால்தான் சந்தத்துடன் கூடிய மரபுப் பாடல்களை எளிதில் இலாகவமாக எழுதத் தன்னால் முடிந்தது என்கிறார். |
||||||||
ஆற்றிய தமிழ்ப்பணிகள் | 1970: முத்துமாணிக்கம் எனும் புனைப்பெயரில் எழுதத் தொடங்கிய இவர் மரபுக் கவித்துறையிலேயே கூடிய ஆர்வம் காட்டினார்.
இவரது முதல் கவிதை ஒரு கோயில் குடமுழுக்கு விழா மலருக்காக எழுதப்பட்ட பக்திக் கவிதையாகும். 1000 க்கும் அதிகமான கவிதைகளை இவர் எழுதியுள்ளார். இசையில் ஆர்வம் உடைய கவிஞர் முத்துமாணிக்கம் பல இசைப்பாடல்களை கொடுத்துள்ளார். தெய்வபக்தி உடைய இவர் இந்து, இஸ்லாம், கிருஸ்துவம் சார்ந்த இறை உணர்வுப்பாடல்களைப் படைத்துள்ளார். தற்போது இவர் வயதாலும் இயலாமையாலும் நடமாட முடியாமல் வாழ்ந்து வருகிறார். |
||||||||
படைத்த நூல்கள் | 1983: பொன் வண்டு
1986: சிங்கப்பூர் தெய்வங்களின் தமிழ்ப் பக்தி இசைப் பாடல்கள் 1987: தேன் சிட்டு : சிறுவர் கவிதைகள் 1987: தெய்வத் தமிழ் இசை விருந்து துர்க்கை அம்மன் போற்றிப் பாடல்கள் காவடிப் பாடல்கள் தமிழ்வாழ்த்துச் சதகம் 1995: இந்து சமயக் கவிமலர்கள் 1995: இயேசு கிறிஸ்து பாமாலை 1995: இஸ்லாமிய கீதங்கள் 1995: முத்துமாணிக்கம் கவிதைகள் 2006: வணக்கம் சிங்கப்பூர் 2009: வண்ணத் தமிழுக்கு வாழ்த்துப்பா நூறு 2009: ஞானப்பறவை : கவிதைகள் 2012: பொன்மொழிப் பூக்கள் |
||||||||
பெற்ற விருதுகள் | 90 வயதை எட்டிப்பிடிக்கும் அருமையான மரபுக் கவிஞர் முத்து மாணிக்கம் அவர்கள் பல விருதுகளும் பரிசுகளையும் பெற்றவர்.
பாத்தூறல் பட்டம் மாணவர் கவிதை நூல் பொன்வண்டு எனும் நூலைத் தமிழர் இயக்கத்தின் சார்பில் வெளியிட்ட போதுதான் “பாத்தூறல்“ எனும் பட்டமளித்துச் சிறப்பிக்கப்பட்டார் இவரது “வணக்கம் சிங்கப்பூர்“ நூலைப் படித்த ஒளவை நடராசன், அந்த நூலின் சிறப்பறிந்து சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்திடம் பரிந்துரை செய்து முத்திரைப் பாவரசு எனும் பட்டத்தை எழுத்தாளர் கழகம் வழங்கி சிறப்பித்தது |
||||||||
சமூகப் பணி | தமிழர் இயக்கம், தமிழர் சங்கம் போன்றவற்றின் செயலாளராகவும், சிங்கப்பூர் கழகத்தின் செயற்குழு உறுப்பினராகவும், இந்து சபை, தமிழர் சீர்த்திருத்தச் சங்கம் ஆகியவற்றின் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.
அத்துடன் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் சிங்கப்பூர் சிராங்கூன்சாலையிலுள்ள ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோயிலில் ஸ்ரீஇராம பஜனை அமைப்போடு சேர்ந்து பக்திப் பாடல்களைப் பாடிவந்தார். |