அமரர் கவிஞர் பார்வதி பூபாலன்
நூல் படிக்க
கவிஞரின் நூல்களை இங்கே படிக்கலாம்
நூலின் தலைப்பு | இணைப்பு |
இளவேனிற் பூக்கள் : பாத்தொகுப்பு | NLB Ref |
அருள் மலர்கள் : பக்திப் பாக்கள் | NLB Ref |
தமிழ் உலா : பாத்தொகுப்பு | NLB Ref |
துளிகள் : சிறுகதைத் தொகுப்பு | NLB Ref |
ஆவணப்படம்
குறிப்புகள்
![]() |
|
||||||||
தொழில் / அலுவல் ஆற்றிய விவரம் | பிப்ரவரி 4, 1944: பார்வதி பூபாலன் மலேசியாவில் பிறந்தவர். தொடக்கக் கல்வியை மலேசியாவிலும் உயர்நிலைக் கல்வியை சிங்கப்பூரிலும் கற்றவர். முதுகலைப் பட்டம் பெற்றவர்.
இவர் ஒரு எழுத்தாளராகவும், சிறந்த கல்விமானாகவும் திகழ்ந்தார். ஆரம்ப காலகட்டங்களில் ஓர் ஆசிரியராக பணியாற்றினார். பின்பு கல்வி அமைச்சின் பாடத்திட்ட வரைவுப் பிரிவில் உயர்நிலைப் பள்ளிகளுக்கான பாடநூல் உருவாக்கப் பணியில் ஈடுபட்டு வந்தார். முப்பத்தாறு ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓர்வு பெற்றுள்ளார். பல விருதுகளைப் பெற்றவர். |
||||||||
ஆற்றிய தமிழ்ப்பணிகள் | 1961ல் எழுதத் தொடங்கிய இவர் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியக் கட்டுரைகள், மாணவர்களுக்கான இலக்கிய மேடை நாடகங்கள் போன்றவற்றை எழுதியிருக்கிறார். இவரது படைப்புகள் பல நாடுகளிலிருந்தும் வெளிவரும் ஏடுகளிலும், சஞ்சிகைகளிலும் அவ்வப்போது பிரசுரமாகியுள்ளன.
கல்வி, மொழி, இலக்கியம் தொடர்பான மாநாடுகள், ஆய்வரங்குகள் ஆகியவற்றில் கலந்து கொண்டு கட்டுரைகள் படைத்துள்ளார். கவியரங்குகளிலும் பட்டிமன்றங்களிலும் பங்கேற்றுள்ளார். |
||||||||
படைத்த நூல்கள் | 1997: இளவேனிற் பூக்கள் : பாத்தொகுப்பு
2014: அருள் மலர்கள் : பாத்தொகுப்பு (பக்திச் சுவை மிக்க மரபு பாடல்கள்) 2014: தமிழ் உலா : பாத்தொகுப்பு (சிங்கையின் நாடு, மொழி,சமுதாயத் தலைவர்கள் பற்றி விருத்த, வெண்பா, உலா வரிசைகளாகத் தந்திருக்கிறார்.) 2016: துளிகள் : சிறுகதைத் தொகுப்பு திருமதி.பார்வதியின் படைப்புகள் கவிஞர் மு.தங்கராசன் தொகுத்த “கவிக்குலம் போற்றும் தமிழவேள்“, தமிழ் நாட்டில் வெளியிடப்பட்ட “தமிழ் நானூறு“, சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக் கழகம் வெளியிட்ட Memories and Desires (A poetic history of Singapore), ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் குடமுழுக்கு மலர், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் “சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம் – ஒரு நூற்றாண்டு வளர்ச்சி” எனும் ஆய்வரங்க நூல், சென்னையில் நடைபெற்ற உலகத் தமிழ் ஒப்புரவாளார் மாநாட்டு மலர், தமிழ் மலர், தமிழ் முரசு, தமிழ் நேசன் ஆகியவற்றில் இடம்பெற்றுள்ளன. |
||||||||
பெற்ற விருதுகள் | தமிழ்மணி புலவர் பட்டம்
24.10.2010 – சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் தமிழவேள் விருது 2015: சிறந்த கவிதை நூலுக்கான (தமிழ் உலா) கவிமாலையின் தங்கப்பதக்க விருது. படிக்கும் காலத்தில் சமூக அமைப்புகள், அமைச்சுகள் நடத்திய பல கட்டுரைப் போட்டிகள், பேச்சுப் போட்டிகள் ஆகியவற்றில் பலமுறை முதல் பரிசு பெற்றுள்ளார். மாதவி இலக்கிய மன்றம் நடத்திய முத்தமிழ் விழாவில் கட்டுரை, சிறுகதை ஆகியவற்றுக்கு பெரியவர் பிரிவில் முதல் பரிசு பெற்றார். சென்னை மாணவர் மன்றம் மலேசிய, சிங்கப்பூர்த் தமிழர்களுக்காக நடத்திய கவிதைப் போட்டியில் முதல் பரிசும், கட்டுரைப் போட்டியில் இரண்டாம் பரிசும் பெற்றுள்ளார். |
||||||||
சமூகப் பணி | சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் உறுப்பினராக இருந்தவர். |