கவிதைத் திருவிழா

கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ

நூல் படிக்க

ஆவணப்படம்

குறிப்புகள்

   

இயற்பெயர் மா. ஆ. இளங்கோ
புனைப்பெயர்கள் சோழநாடன், கோழியூர் கண்ணதாசன் , சுதா இளங்கோ , கலை இளங்கோ, மாமி, பகல்தாசன்      தேனீ , ராதா முதலிய புனைபெயர்கள்
பிறந்த ஆண்டு 15/07/1952
   
தொழில் / அலுவல் ஆற்றிய விவரம் 1977 – 1990: வேளாண்மை பட்டதாரி. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் கோவை வேளாண்மை அதிகாரியாக தமிழ் நாட்டில் பணிபுரிந்தார்.
1990-லிருந்து 1993-ஆம் ஆண்டு வரை சிங்கப்பூர் ஒலிபரப்புக்கழகத்தில் படைப்பாளர், தயாரிப்பாளர். வேளாண்மைக் கல்லூரியில் படிக்கும்போது வானம்பாடி கவிஞர்கள் அமரர் கங்கைகொண்டான் மற்றும் மு.மேத்தா ஆகியோருடன் தொடர்பு ஏற்பட்டது. கல்லூரியில் கவிதைப்போட்டியில் முதல் பரிசு பெற்று பல்கலைக்கழகத்தின் பாரதிதாசன் என்றும் போற்றப்பட்டார். மரபில் நாட்டங்கொண்டு பின் புதுக்கவிதையின்பால் ஈர்க்கப்பட்டார்.
ஆற்றிய தமிழ்ப்பணிகள் 1979: இரணிப் பேட்டையில் உழவர் பயிற்சி நிலையத்தில் “உழவர் செல்வம்” எனும் இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார்.

 

1996 – 2001: சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் செயலவை உறுப்பினராக இருந்தார்.

 

“சிங்கை சுடர்” இதழின் ஆசிரியர்.  

படைத்த நூல்கள் 1998: வியர்வைத் தாவரங்கள் : புதுக் கவிதை தொகுப்பு வலம்புரி ஜான்  முன்னிலையில் வெளியிட்டார். இரண்டாம் படி சிங்கப்பூரில் கவிஞர் வைரமுத்து அவர்களால் வெளியிடப்பட்டது.

 

“உள்ளங்கை” எனும் மரபு கவிதை தொகுப்பை வெளியிட்டுள்ளார்.

 

2004: இரவின் நரை : கவிதைகள்

2005: பூமகன்

2005: உயிர்க் குடை

2005: வீரமும் ஈரமும் : கவிதை நாடகம்

2006: முதல் ஒசை : கவிதைத் தொகுப்பு

2008: நானும் நானும்

2009: மழை விழுந்த நேரம்

2010: அதன் பேர் அழகு

2011: அந்த நான் இல்லை நான்

 

2017: பின் வரும் 5 நூல்களும் ஒன்றாக வெளியீடு கண்டன. தினமலர் செய்தி

 

ஆதலினால் கவிதை செய்தேன்

வியர்வையூர்

அங்குசம் காணா யானை

தூரிகைச் சிற்பங்கள்

அதிகாலைப் பல்லவன்

பெற்ற விருதுகள் “சூரியகாந்தி” பயிரை பற்றிய கவிதைக்கு வேளாண்மை பல்கலை கழக பேராசிரியர் முனைவர் இல. செ. கந்தசாமி “நனிதமிழ்” எனப் பாராட்டைப்பெற்றவர்.

 

2009: சிங்கப்பூர் கவிமாலையின் சிறந்த கவிதை நூலுக்கான தங்கப்பதக்கத்தை வென்றவர்.

 

தமிழவேள் விருது

கலைஞர் பொற்கிழி விருது

கவிச்சுடர் விருது

இலக்குவனார் விருது

கவிப்பேரருவி.

த.வீ.சி.அறக்கட்டளை விருது

ஜெயந்தன் அறக்கட்டளை விருது

தமிழக அரசின் கவிமாமணி விருது

தாரைப்புள்ளி அறக்கட்டளை விருது

தாராபாரதி அறக்கட்டளை விருது

தமிழ்மொழிப் பண்பாட்டுக் கழக பாரதி விருது. 

தங்கமுனை போட்டியில் ஆறுதல் பரிசு

தேசிய சுற்றுப்புற வாரிய இசைப்பாடல் போட்டியில் சிறப்புப் பரிசு

வல்லமை.காமின் வல்லமையாளர் விருது

சமூகப் பணி சிங்கப்பூரில் கவிமாலை அமைப்பை நிறுவியவர். அதன் தலைமைப் பொறுப்பை ஏற்று திறம்பட நடத்தியவர். தற்போது அதன் செயலவை உறுப்பினராகத் தொடர்கிறார்.

சிங்கப்பூர் எழுத்தாளர் கழகத்திலும் உறுப்பினர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/kavimaalai/public_html/wp-includes/functions.php on line 4757