கவிஞர் யூசுப் ராவுத்தர் ரஜித்
நூல் படிக்க
கவிஞரின் நூல்களை இங்கே படிக்கலாம்
நூலின் தலைப்பு | இணைப்பு |
25 மாதங்கள் 25 விவாதங்கள் முதல் 25 பட்டிமன்றங்கள் பற்றிய தொகுப்பு | NLB Ref |
பன்னீர்த் துளிகள் : கவிதைத் தொகுப்பு | படிக்க |
50 மாதங்கள் 50 விவாதங்கள் : முதல் 50 பட்டிமன்றங்களின் தொகுப்பு | படிக்க |
விழிக்குள்ளேதான் வெள்ளையும் கருப்பும் : கவிதைத் தொகுப்பு | படிக்க |
கட்டைவிரலாகட்டும் கல்வி : சிறுகதைத் தொகுப்பு | படிக்க |
உயர்ந்த உள்ளம் சிறுகதைத் தொகுப்பு | NLB Ref |
வளைந்தால்தான் ஒன்று இரண்டாகும் கவிதைத் தொகுப்பு | NLB Ref |
பொன்மனமிருந்தால் புவி வசமாகும் | NLB Ref |
ஆவணப்படம்
குறிப்புகள்
![]() |
|
||||||||
தொழில் / அலுவல் ஆற்றிய விவரம் | 1948: ரஜித் என்று சுருக்கமாக அழைக்கப்படும் இவர் தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கியில் 29 நவம்பர், 1948 ஆம் ஆண்டு பிறந்தார்.
இயற்பியல் பேராசிரியரான இவர், தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசினர் கல்லூரி, விழுப்புரம் அரசினர் கல்லூரி, திருச்சி பெரியார் ஈ.வெ.,ரா கல்லூரி போன்ற கல்லூரிகளில் 15 ஆண்டுகளாக பேராசிரியராகப் பணியாற்றியவர். 1993: சிங்கப்பூருக்கு வந்த இவர், கவிதைகள் எழுதுவதற்கான ஆவல் தனக்கு ஏற்பட்டதே கவிஞர் கண்ணதாசனுடைய திரைப்படப் பாடல்கள்தான் என்கிறார். தன்னுடையை கவிதைகளை தமிழ்முரசு வெளியிட்டது, கவிதைகளைப் பற்றி நண்பர்கள் விமர்சித்தது எல்லாமுமே கவிதை வடிக்கும் திறனை வளர்த்துக் கொள்ள உதவியது. தன்னை மிகவும் கவர்ந்த கவிஞர்களாக இவர் குறிப்பிடுவது, கவிஞர் கண்ணதாசனுக்குப்பிறகு கவிஞர் வாலி, கவிப்பேரரசு வைரமுத்து மற்றும் கவிக்கோ அப்துர் ரஹ்மான். |
||||||||
ஆற்றிய தமிழ்ப்பணிகள் | பட்டிமன்றக் கலைக் கழகம் என்ற அமைப்பை 2009ல் நிறுவி இதுவரை 97 பட்டிமன்றங்களை நடத்தியிருக்கிறார். சில பிரபலங்களில், திரு கோபிநாத், திரு பாக்யராஜ், திரு ஞானசம்பந்தன் முனைவர் பொன்ராஜ், முனைவர் மோகன் போன்றோரும் ஆவர் | ||||||||
படைத்த நூல்கள் | 2008: 25 மாதங்கள் 25 விவாதங்கள் முதல் 25 பட்டிமன்றங்கள் பற்றிய தொகுப்பு.
2008: பன்னீர்த் துளிகள் கவிதைத் தொகுப்பு 2010: 50 மாதங்கள் 50 விவாதங்கள் முதல் 50 பட்டிமன்றங்களின் தொகுப்பு 2010: நம் சாதனையாளர்கள் (6 தலைவர்களின் வாழ்க்கையைச் சுருக்கம் சொல்லும் இந்த நூலில் மூன்று தலைவர்களின் வாழ்க்கைச் சுருக்கம் இவரால் எழுதப்பட்டது) 2011: விழிக்குள்ளேதான் வெள்ளையும் கருப்பும் 2012: கட்டைவிரலாகட்டும் கல்வி சிறுகதைத் தொகுப்பு 2015: உயர்ந்த உள்ளம் சிறுகதைத் தொகுப்பு 2015: வளைந்தால்தான் ஒன்று இரண்டாகும் கவிதைத் தொகுப்பு 2018: பொன்மனமிருந்தால் புவி வசமாகும் |
||||||||
பெற்ற விருதுகள் | 2007: தங்கமுனை விருதில் கவிதைக்கான முதல் பரிசைப் பெற்றிருக்கிறார்.
2008: தேசிய அளவில் நடந்த மூத்தோருக்கான கதை சொல்லும் போட்டியில் கலந்துகொண்டு முதல் பரிசினை வென்றிருக்கிறார். |
||||||||
சமூகப் பணி | 2004: பெக்கியோ சமூக மன்றத்தின் இந்திய நற்பணிச் செயற்குழுவில் இணைந்து பணியாற்றி, சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் தங்களின் கவிச்சோலை நிகழ்ச்சியில் பங்கேற்று எழுத்தாளர் கழகத்தில் செயலவை உறுப்பினராக இருந்து தொடர்ந்து கவிச்சோலை நிகழ்ச்சிக்கு இரண்டாண்டுகள் பொறுப்பு வகித்திருக்கிறார்.
2009: தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் நிறுவனர் மற்றும் இன்றுவரை தலைவர். சிண்டாவில் ஆண்டுக்கொரு மாணவரைத் தத்தெடுத்துக் கொண்டு அவர்கள் கல்வியில் உயர சேவை செய்திருக்கிறார். 2015ல் இவர் வெளியிட்ட இரண்டு நூல்களின் மூலம் கிடைத்த நிதியை சிண்டாவுக்கு வழங்கி யிருக்கிறார். தொடர்ந்து சிண்டாவின் முயற்சியில் வெளியீடு கண்ட முன்னாள் அதிபர் எஸ் ஆர் நாதன் பற்றிய நூலின் தமிழாக்கத்திற்கு முடிந்த நன்கொடையை வழங்கியதுடன் அந்த நூலின் விறபனைக்கும் உதவியிருக்கிறார். 2018ல் ‘பொன்மனமிருந்தால் புவி வசமாகும்’ நூலை வெளியீட்டில் கிடைத்த தொகையை ஸ்ரீ நாராயண மிஷனுக்கு வழங்கியிருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக சாங்கி சிறைக் கைதிகளுக்காக நன்னடத்தை வகுப்புகள் நடத்திக் கொண்டிருக்கிறார். |