கவிதைத் திருவிழா

அமரர் கவிஞர் சிங்கை முகிலன்

நூல் படிக்க

கவிஞரின் நூல்களை இங்கே படிக்கலாம்

நூலின் தலைப்பு இணைப்பு
இதய ஓசை NLB Ref
மனிதச் சுவடு NLB Ref
நல்ல முடிவு NLB Ref
துடிக்கும் உள்ளம் NLB Ref
உருவகக் கதைகள் NLB Ref

ஆவணப்படம்

https://youtu.be/5pdQpC36rVQ 

 

குறிப்புகள்

 

   

இயற்பெயர் நூ அப்துல் ரஹ்மான்
புனைப்பெயர்கள் சிங்கை முகிலன்
பிறந்த ஆண்டு 1922
றந்த ஆண்டு 1992
தொழில் / அலுவல் ஆற்றிய விவரம் 1922: சிங்கை முகிலன் என்னும் புனைப்பெயரில் மலேசிய, சிங்கையின் இலக்கிய வட்டத்தில் புகழ்பெற்று விளங்கிய திரு.நூ. அப்துல் ரஹ்மான், தமிழ்நாட்டின் சோழபுரத்தில் பிறந்தவர்.

 

தமது 16வது வயதில் மலேசியா வந்த இவர், முதலில் மலாக்காவில் ஒரு கடைக்கு வேலைக்கு அமர்ந்தார். அக்காலத்திலேயே இலக்கியப் படைப்புக்கான ஆர்வம் இவரிடம் வலுவாகத் துளிர்க்க ஆரம்பித்தது.

 

இந்திய தேசிய ராணுவம் – செய்தி அனுப்புபவராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.

ஆற்றிய தமிழ்ப்பணிகள் ஜப்பானியர் ஆக்கிரமிப்புக் காலத்தில் சுதந்திரக் கருத்துகள் அடங்கிய பல கவிதைகளைச் சஞ்சிகைகளில் எழுதியுள்ளார். அவை ஆங்கிலேயர்கள் நாட்டைவிட்டு வெளியேறவேண்டும் என்ற கருத்துகள் அடங்கிய கவிதைகள் என்பதால் ஜப்பானியர்கள் அவற்றை வெளியிட அனுமதித்தனர்.

 

பின்னர் மலாயாவில் இந்திய தேசிய இராணுவத்தில் செய்தி அனுப்புபவராகவும் அவர் பணியாற்றியுள்ளார். அதுவே இவருக்கு 1946இல் இந்திய தேசிய இராணுவ நினைவுக் கீதம் எனும் தொகுப்பை வெள்லியிட முன்னோடியாக இருந்தது.

 

பதினேழு வயதில் எழுதத் தொடங்கி பல கவிதைத் தொகுப்புகள் வெளியிட்ட சிங்கை முகிலன், சிறுகதை வடிவத்தையும் நன்கு கையாண்டவர். சிங்கை முகிலனின் கவிதைகளில் பெரும்பாலும் நாட்டுப்பற்று, மொழிப்பற்று, தமிழினப்பற்றுக் கருத்துகளே மேலோங்கி நிற்கின்றன. குறிப்பாகத் தமிழர்களின் சாதி வேற்றுமை, தாழ்வு மனப்பான்மை, மூட நம்பிக்கைகள் போன்ற பழக்கங்களை களைந்தெறிய இவர் கவிதைகள் எழுதப்பட்டன. கலாச்சாரம், பண்பு, ஆன்மிகம் ஆகியவற்றை விட்டு விலகும் தமிழர்களின் நிலையை எள்ளற்சுவையில் விவரிப்பதே இவரின் கவிதைகளில் பலவாகும். வாரம் ஒரு கவிதை எனத் தமிழ் முரசு நாளிதழில் தொடர்ச்சியாக இவர் கவிதைகள் வெளியிடப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

 

காதலும் கதையும் (1952), அனாதை (1953) போன்ற சிறுகதைகளையும் எழுதிய இவர் உருவகக் கதைகளை எழுதுவதிலும் வல்லவராகத் திகழ்ந்தார்.

 

1955: தாம் நடத்திய சிந்தனை இதழில் தனது முதல் உருவகக் கதையை எழுதினார். அதனைத் தொடர்ந்து அறுபதுக்கும் மேற்பட்ட உருவகங்களைப் படைத்தார்.

படைத்த நூல்கள்  

1938: 17வது வயதில் இவரின் முதல் கவிதை தந்தை பெரியார் திரு ஈ வெ ரா. அவர்களின் குடியரசு என்ற பத்திரிகையில் வெளிவந்தது.

1939: தமிழ் ஒலி கீதம் – கவிதை தொகுப்பு : 17வது வயதில் இரண்டு பாகங்களாக மலாக்கா தமிழர் சீர்திருத்த கழகத்தால் வெளியிடப்பட்டத.

1939: தகுதி என்னும் உருவாக்க கதை. அறிஞர் அண்ணாவின் காஞ்சி இதழில் தம்பிக்கு கடிதம் பகுதியில் வெளியிடப்பட்டது.

1940: திராவிடமணி கீதம் – கவிதை தொகுப்பு.

1946: இந்திய தேசிய ராணுவ நினைவு கீதம் கவிதை தொகுப்பு.

1952: இதயமலர் கவிதை தொகுப்பு.

1954: துடிக்கும் உள்ளம்.

1960: இதய ஓசை – கவிதை தொகுப்பு.

1975: மனிதச் சுவடு.

1989: நல்ல முடிவு – கவிதை தொகுப்பு.

1989: மன வீதி.

 

உருவகத் தொகுப்பு

1976: உருவகக் கதைகள்.

பெற்ற விருதுகள் 1988: கலாச்சார பதக்கம் – சிங்கப்பூர் சமூக வளர்ச்சி துணை அமைச்சு.

 

1989: தமிழவேள் இலக்கிய விருது – சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம்.

1989: கவிதைக்கடல் – சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம்.

சமூகப் பணி சமூகச் சீர்திருத்தவாதியாகவும் அறியப்படும் இவர், மலேசிய திராவிடக் கழகம், மலாக்கா தமிழர் சீர்திருத்தக் கழகம் போன்றவற்றிலும் தீவிரப்பங்காற்றினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/kavimaalai/public_html/wp-includes/functions.php on line 4757