கவிதைத் திருவிழா

அமரர் கவிஞர் பெ. திருவேங்கடம்

நூல் படிக்க

கவிஞரின் நூல்களை இங்கே படிக்கலாம்

நூலின் தலைப்பு இணைப்பு
துளசிப் பூக்கள் படிக்க
சிறகுகள் படிக்க
தங்கவயல் : கவிதைகள் படிக்க

ஆவணப்படம்

https://youtu.be/iLt_FT6FDBQ 

குறிப்புகள்

   

இயற்பெயர் பெ. திருவேங்கடம்
புனைப்பெயர்கள்
பிறந்த ஆண்டு 28  செப்டம்பர் 1944
இறந்த தேதி 09 செப்டம்பர் 2017
தொழில் / அலுவல் ஆற்றிய விவரம் தமிழ் நாட்டில் திருக்கடையூரின் அருகிலுள்ள திருமயானம் எனும் சிற்றூரில் செப்டம்பர் 28, 1944-இல் பிறந்தார்.

தமது சிறுவயதிலேயே தனது தந்தையாருடன் சிங்கப்பூருக்குப் புலம்பெயர்ந்தார். சிங்கை ராபிள்ஸ் பள்ளியில் உயர்நிலை கல்வி பயின்றார்.

தமது பதின்ம வயதிலேயே கவிஞர் ஐ.உலகநாதன் அவர்களால் ஊக்கம்பெற்று, அவரிடமே தமிழ்க் கவிதை பயிற்சி பெற்று கவிதைகள் எழுதத் துவங்கினார்.

கவிஞரது தந்தை திரு.பெருமாள் பிள்ளையும் கவிஞரின் இலக்கிய முயற்சிகளுக்கு ஊக்கமளித்து பெரும் உறுதுணையாக இருந்துள்ளார்.

கவிஞர். பெ.திருவேங்கடம் அவரது துணைவியார் பெயர் திருமதி.ஜெயலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும், நான்கு பேரப்பிள்ளைகளும் உள்ளனர்.

ஆற்றிய தமிழ்ப்பணிகள் சிங்கை, மலேசிய கவியரங்கத்தில் பங்கு பெற்றவர்.

சிங்கை வானொலியில் இடம் பெற்ற கவிமாலை, கவியரங்கம், கவிச்சோலை நிகழ்ச்சியில் பாடல்கள் பாடியவர்.

சிங்கைத் தமிழ் முரசு, மலேசிய தமிழ் நேசன் நாளிதழ்களில் தொடர்ந்து கவிதைகள் படைத்து வந்தார். அவரது குடும்பத்தினருக்கே தெரியாத தேவி, உமா போன்ற பல புனைப்பெயர்களிலும் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளதாக அவரது மகள் திருமதி.புவனேஸ்வரி தெரிவித்தார்.

படைத்த நூல்கள் 1990: துளசிப் பூக்கள்

1997: கந்தன் புகழ் மாலை : முருகன் துதிப்பாடல்

1998: சிறகுகள்

2013: தங்கவயல்

Desires (ஆங்கில நூல்)

பெற்ற விருதுகள் 2009: கணையாழி இலக்கிய விருது (சிங்கப்பூர் கவிமாலை)

2011: தமிழவேள் விருது (சிங்கப்பூர் எழுத்தாளர் கழகம்)

சமூகப் பணி தொடக்ககால உறுப்பினர் – மாதவி இலக்கிய மன்றம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/kavimaalai/public_html/wp-includes/functions.php on line 4757