கவிதைத் திருவிழா

கவிஞர் பாத்தேறல் இளமாறன்

நூல் படிக்க

ஆவணப்படம்

 

குறிப்புகள்

   

இயற்பெயர் ஆண்டியப்பன்
புனைப்பெயர்கள் இளமாறன்
பிறந்த ஆண்டு 02/01/1945
   
தொழில் / அலுவல் ஆற்றிய விவரம் 1945: பாத்தேறல் இளமாறன் – தமிழகத்தின் தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டைக்கு அருகிலுள்ள நாட்டுச்சாலையில் பிறந்த இவர் தனது 12வது வயதில் சிங்கப்பூருக்கு புலம்பெயர்ந்து வந்தார். இவருக்கு கண்ணகி. தமிழ்க்கோதை. கலைச் செல்வி, மணிமாற செல்வன் எனும் அன்புச் செல்வங்களுளர் .

சந்தர் சாலையில் உணவு அங்காடி நடத்தி வருகிறார்.

ஆற்றிய தமிழ்ப்பணிகள் 37 ஆண்டுகளாக தொடர்ந்து எழுதி வரும் இவர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகளையும் பாடல்களையும் எழுதி இருக்கிறார்.

வானொலி, தொலைக்காட்சி க்கு  அதிகமான பாடல்களை எழுதியுள்ளார்

படைத்த நூல்கள் 1981: பாத்தேறல்

1982: முருகன் காவடிப் பாடல்கள்

1988: திங்கள்

1997: நினைக்க சுவைக்க

1988: பனிக்கூழ் (மழலையர் பாத்தொகுப்பு)

மழலையர் பாடல்கள் (சிறுவர் பாடல்கள்)

2002: பாத்தேறல் : மொழி, நாடு, குமுகாயம் பற்றிய எழுச்சிப் பாக்களின் குவிப்பு

2002: குமுறல்

2008: சிதறல்

2014: மண்மணச் சிறுகதைகள்

ஒலிநாடாக்கள்

·       முருகன் பாடல்கள்

·       மழலையர் பாடல்கள்

·       பட்டுக்கோட்டை பாடல்கள்

·       மாமாரி மாகாளி

பெற்ற விருதுகள் 1989: “பாத்தேறல்” எனும் பட்டத்தை மலேசியாவின் அமைச்சரும், மலேசியா இந்தியர் காங்கிரஸின் தலைவருமான டத்தோஸ்ரீ ச.சாமிவேலு அவர்கள் வழங்கி சிறப்பித்தார்.

2017: சிங்கப்பூர்க் கவிமாலை வழங்கும் இலக்கியக் கணையாழி விருதினை தனித்தமிழ் ஆர்வலர் மூத்த கவிஞர் பாத்தேறல் இளமாறன் பெற்றார்.

சமூகப் பணி இவர் சிங்கப்பூர் எழுத்தாளர் கழகத்தின் உறுப்பினராகவும், பின்பு செயலாளராகவும், துணைத் தலைவராகவும்,

கொள்கை முழக்கம் எனும் திங்கள் இதழில் ஆசிரியராகவும்,

மற்றும் பல தனித் தமிழ்ப் பண்பாட்டு இயக்கங்களிலும் தன்னை இணைத்துக் கொண்டு பணியாற்றியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/kavimaalai/public_html/wp-includes/functions.php on line 4757