கவிதைத் திருவிழா

அமரர் கவிஞர் பெரி. நீல. பழனிவேலன்

நூல் படிக்க

கவிஞரின் நூல்களை இங்கே படிக்கலாம்

நூலின் தலைப்பு இணைப்பு
இருபத்தைந்து (மரபுக் கவிதை) NLB ref
நெருங்கினால் சுடும் நெருப்பு (மரபுக் கவிதை) NLB ref
தமிழனைத் தேடுகிறேன் (மரபுக் கவிதை) NLB ref
செவ்வானம் (சிறுவர் பாத்தொகுப்பு) NLB ref
மின்னல் கீற்று (நாவல்) NLB ref
செம்பருத்தி (நாவல்) NLB ref
அந்தரத்தில் தொங்கும் உறவு (நாவல்) NLB ref
ஒரு கிளையில் இரு கிளிகள் (சிறுகதைத்தொகுப்பு)  
உணர்வின் நறுக்குகள் (உரைவீச்சுக்கள்) NLB ref 

ஆவணப்படம்

 

 

குறிப்புகள்

 

இயற்பெயர் பெரி. நீல. பழநிவேலன்
புனைப்பெயர்கள் பசுங்குடையார், பசுமலை, நீ.பெ. கலைச்செல்வன், நீலன், பாமலன், பசுமலையான், தமிழீட்டி
 பிறந்த தேதி ஏப்ரல் 24 1939
தொழில் / அலுவல் ஆற்றிய விவரம் 1939: கவிமாமணி பெரி. நீல. பழிவேலன் மலேசியாவின் சிலாங்கூர் செரம் எனும் பசுமலையில் பிறந்த இவர் தனது ஆரம்பக் கல்வியை அங்கேயே கற்றார். பின்னர் சிங்கப்பூரில் முதியோர் கல்வி நிலையத்தில் உயர்நிலை வரை கற்றுத் தேர்ந்தார். ஆரம்பத்தில் வணிகத்துறையில் ஈடுபட்ட இவர் பின்பு பாதுகாப்புத்துறையில் தனது பணியைத் தொடர்ந்தார்.

இவர் கொள்கை முழக்கம் இதழின் ஆசிரியராகவும், தமிழ் மலரின் துணையாசிரியராகவும், மலேசியாவின் ‘உரிமை‘ மாத இதழின் துணையாசிரியராகவும் கடமையாற்றியுள்ளார்.

மேலும் சிங்கை, மலேசிய வானொலிகளில் பகுதி நேரக் கலைஞராகவும் சேவையாற்றினார்.

ஆற்றிய தமிழ்ப்பணிகள் 1957ல் எழுத்துலகில் பிரவேசித்த இவருக்கு மாணவர் மணிமன்ற இதழ் ஆரம்பத்தில் களமமமைத்துக் கொடுத்தது. இவரது முதல் சிறுகதை ‘காணாமல் போன பாலு டாக்டர் மனோகரனான விந்தை‘ எனும் தலைப்பில் வெளிவந்தது.

இதைத் தொடர்ந்து பசுங்குடையார், பசுமலை, நீ.பெ. கலைச்செல்வன், நீலன், பாமலன், பசுமலையான், தமிழீட்டி போன்ற புனைப்பெயர்களிலும் எழுதலானார்.

இவர் சிறுகதை, மரபுக் கவிதை, புதுக்கவிதை, நாடகம், புதினம், கட்டுரை ஆகிய அனைத்துத் துறைகளிலும் அகலக் கால் பதித்து 1500க்கும் மேற்பட்ட ஆக்கங்களைத் தந்துள்ளார். இவரது படைப்புகள் மலேசியா, சிங்கப்பூர், தமிழக இலக்கிய, அரசியல், கலை ஏடுகளிலும், பல்வேறு மாநாட்டு மலர்களிலும் வெளிவந்துள்ளன

ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ள இவர் மேடை நாடகங்களிலும், தொலைக்காட்சி நாடகங்களிலும் நடித்துள்ளார்.

படைத்த நூல்கள் மரபுக் கவிதை நூல்கள்

1990 : இருபத்தைந்து

1995: நெருங்கினால் சுடும் நெருப்பு

2000 : தமிழனைத் தேடுகிறேன்

சிறுவர் பாத்தொகுப்பு

1990 : செவ்வானம்

நாவல்கள்

1978: மின்னல் கீற்று

1989: செம்பருத்தி

1987: அந்தரத்தில் தொங்கும் உறவு

ிறுகதைத்தொகுப்பு

2002: ஒரு கிளையில் இரு கிளிகள்

2004 : உணர்வின் நறுக்குகள் (உரைவீச்சுக்கள்)

பெற்ற விருதுகள் 1984: மலேசியாவின் தமிழ் நேசன் நாளிதழ் இவரது ‘அந்தரத்தில் தொங்கும் உறவு’ நாவலுக்கு தங்கப்பதக்கம் வழங்கிச் சிறப்பித்தது.

அதே ஆண்டில் சிங்கப்பூரின் சிறந்த சிறுகதைப் படைப்பாளர் என்று பாராட்டப்பட்டார்.

1991: இவருக்கு தமிழ் நாட்டில் “கவிமாமணி” எனும் பட்டம் வழங்கப்பட்டது.

சமூகப் பணி இவர் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் உறுப்பினரான திரு.பழனிவேலன் அதன் செயற்குழு உறுப்பினராகவும் துணைச் செயலாளராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *