கவிதைத் திருவிழா

கவிஞர் வை.சுதர்மன்

நூல் படிக்க

ஆவணப்படம்

https://youtu.be/8frbuXMx310  

குறிப்புகள்

   

இயற்பெயர் வை.சுதர்மன்
புனைப்பெயர்கள்
பிறந்த ஆண்டு 28-8-1928
   
தொழில் / அலுவல் ஆற்றிய விவரம் 1928: தமிழ் நாட்டிலுள்ள தேவகோட்டையில் பிறந்த திரு. வைரவன் சுதர்மன் அங்கேயே தொடக்கக் கல்வியைப் பயின்றார்.

பின்னர் மலேசியாவின் கோலப் பிலாவிலும் குளுவாங்கிலும் உயர்நிலைக் கல்வியைக் கற்றார்.

தமிழ், ஆங்கிலம், மலாய், சீனம், இந்தி ஆகிய ஐந்து மொழிகள் இவருக்குத் தெரியும்.

சிங்கப்பூர் விமான நிலையத்தில் 24 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

ஆற்றிய தமிழ்ப்பணிகள் 1946ஆம் ஆண்டு எழுதத்தொடங்கிய இவர் கவிதை, கட்டுரை, பயணக் கட்டுரை ஆகியவற்றை எழுதி வருகிறார்.
படைத்த நூல்கள் 1989: வரலாற்று நினைவுகள் :  ஆசிய விடுதலைப் போராட்டத்தில் ஒரு தமிழ்ப் புரட்சியாளன்

1990: நினைவலைகள் : மொரிசியசு ஏழாவது அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு

யார் குற்றவாளி? சமூகமா? சம்பிரதாயமா?

1992: சமயத்தால் ஓர் உலகம் : எனது அமெரிக்கப் பயண நூல்

1992: உலக வரலாற்றுத் தோற்றக் கூறுகளும் மனித நேயமும்

1994: சிங்கப்பூரும் தமிழரும்

இனிய நினைவுகள்

1996: எண்ண அலைகள்

2000: சுழலுகின்ற உலகில் சுற்றுகின்ற வாழ்க்கை

2001: நான் பெற்ற இன்பம்

2003: தணியாத தாகம்

2017: விடுதலைக் கவி வை. சுதர்மன் கவிதைகள்

பெற்ற விருதுகள் 1991: இவரது ‘வரலாற்று நினைவுகள்’ எனும் நூலுக்காக தமிழக அரசின் பாராட்டுச் சான்றிதழ் பெற்றார்.

2011: சிங்கப்பூர் கவிமாலையின் கணையாழி விருது பெற்றார்.

சமூகப் பணி இவர் சிங்கப்பூர் எழுத்தாளர் சங்கத்தின் செயலவை உறுப்பினராகவும், துணைத்தலைவராகவும்,

மாதவி இலக்கிய மன்றத் துணைத் தலைவராகவும் பதவி வகித்தார்.

நேதாஜி சுபாஸ் சந்திரபோல் அமைத்த இந்திய தேசிய ராணுவம்,

தொழிற்சங்கம்,

பொதுவுடைமை இயக்கம் மலாயன் இந்தியன் காங்கிரஸ் போன்றவற்றிலும் இவர் இடம் பெற்றிருந்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *