கவிதைத் திருவிழா

கவிஞர் காசாங்காடு அமிர்தலிங்கம்

நூல் படிக்க

கவிஞரின் நூல்களை இங்கே படிக்கலாம்

நூலின் தலைப்பு இணைப்பு
உரக்கச் சொல்வேன் :  கவிதைத் தொகுப்பு NLB Ref

ஆவணப்படம்

குறிப்புகள்

 

     

இயற்பெயர் சா.அமிர்தலிங்கம்
புனைப்பெயர்கள் காசாங்காடு அமிர்தலிங்கம்
பிறந்த ஆண்டு 18.05.1956
   
தொழில் / அலுவல் ஆற்றிய விவரம் 1956: தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை வட்டத்தில் உள்ள ரெகுநாதபுரம் காசாங்காட்டில் 1956 ஆம் ஆண்டு  மே மாதம் 18 ஆம் நாள் அன்று  பிறந்தவர். காசாங்காடு அமிர்தலிங்கம் என்றே எல்லாராலும் அறியப்படுபவர்.  

தந்தை: சுவாமிநாதன், தாயார்: இராசாமணி.

அறிவியல் இளநிலைப் பட்டம் (சென்னைப் பல்கலைக் கழகம்).

1980 டிசம்பர்-1985: அத்திவாரதூண் இறக்கும் பணிக் கண்காணி. கஜிமா கார்ப்பரேஷன் (KAJIMA CORPORATION) ஜப்பானிய நிறுவனம் சிங்கப்பூர்.

1986-1987: பட்டுக்கோட்டையில் ராஜா மெஸ் என்ற பெயரில் உணவகம்.

1988-1989: அத்திவாரத் துறப்பணப் பணி மேம்பார்வையாளர் KAJIMA CORPORATION மும்பை.

1994-2002: முடிய பணி அத்திவாரத் துறப்பணப்பணி பணியிட ஒருங்கிணைப்பாளராக. ஈக்கான் ஃபைலிங் [ECON PILING CORPORATION PTE LTD] சிங்கப்பூர்.

2002-2006: செய்தித்தாள் விற்பனையாளர், SPH சிங்கப்பூர்.

2007-2014: அத்திவாரத் துறப்பணப்பணி பணியிட ஒருங்கிணைப்பாளராக. CSC HOLDINGS LTD சிங்கப்பூர்.

2015-2016: வேலையிட நிர்வகாகி, CP CONSTRUCTION PTE LTD சிங்கப்பூர்.

ஆற்றிய தமிழ்ப்பணிகள் இவர் தந்தையும் இவரது பெரியப்பாவும்  திருப்புகழில் வித்தகர்கள். இவர் தந்தையார் திரு.வீ. சுவாமிநாதன் அவர்கள் திருப்புகழ்ப் பாடல்களைப் பொருளறிந்து சந்தம் மாறாமல் பாடுவதில் வல்லவர். இவர் தந்தையார் இயற்றிய மெய்ஞ்ஞான சோதிமயம் என்னும் சிறிய புத்தகம் 1956-ஆம் ஆண்டு சிங்கைக்குக் கொண்டுவரப்பட்டுப் பலருக்கும் வழங்கப்பட்டது.  

அவரது தாயார் மற்றும் சிற்றன்னை இருவரும் நாட்டுப்புறப் பாடல்களை அவர்களாகவே இட்டுக்கட்டிப் பாடுவதில் வல்லவர்களாய் இருந்துள்ளனர்.

கவிஞர் காசாங்காடு அமிர்தலிங்கமும் திருப்புகழ் போன்ற இறை உணர்வு மிக்கப் பாடல்களை அதிகம் நேசித்து வாசித்தவர். அத்தகு வாசிப்பில் இவரது ஈடுபாடு அதிகம்.

மரபுக்கவிதையில் ஆழ்ந்த புலமையும் தேர்ச்சியும் கொண்டவர். இருந்தாலும் காலத்தின் தேவைக்கேற்ப புதுக்கவிதை எழுதுவதிலும் வல்லவராய் விளங்குகிறார். இவரது கவிதைகளும் சந்த நயத்தோடும் எதுகையும் மோனையும் இயைபைப் பெற்றுப் பொருள் நயமும் சொல்லாட்சியும் மிளிர்ந்து இருக்கும்.

சிங்கப்பூர் மக்கள் கவிஞர் மன்றம் மற்றும் கவிமாலை அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றிக் கொண்டிருப்பவர். மக்கள் கவிஞர் மன்றம், கவிமாலை போன்ற அமைப்புகள் நடத்திய கவியரங்கங்களில் பங்கு பெற்று சிறந்த கவிதைகளை எழுதியுள்ளார்.

மக்கள் கவிஞர் மன்றத்தின் 5 ஆம் ஆண்டு விழா மலர் தொகுப்பில் இவரின் உதவி குறிப்பிடத்தக்கது.

மக்கள் கவிஞர் மன்றம் வெளியிட்ட 10 ஆம் ஆண்டு விழாவின் கழனிக்கவிமலர் என்னும் மலரின் துணை ஆசிரியராகப் பொறுப்பேற்றுச் செயலாற்றினார்.

கவிமாலையின் ஆண்டு கவிதைத் தொகுப்புகளில் இவரது கவிதைகள் பல இடம்பெற்றிருக்கின்றன.

சிங்கப்பூர் தமிழ்முரசு நாளிதழுக்குக் கவிதை தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறார்.

படைத்த நூல்கள் 2013: உரக்கச் சொல்வேன் (கவிதைத் தொகுப்பு)  

2018: தானாக மையூறி (கவிதைத்தொகுப்பு) – வெளியீடு காண இருக்கிறது

பெற்ற விருதுகள் கவிமாலை அமைப்பில் பல முறை கவிதைப் போட்டிகளில் பரிசு வென்றிருக்கிறார்.
சமூகப் பணி மக்கள் கவிஞர் மன்றத்தில் நீண்ட காலம் உறுப்பினராய் இருப்பவர்.   

2015 -2016: மக்கள் கவிஞர் மன்றத்தின் துணைத்தலைவர்.

தங்கிளின் சமூக மன்றத்தில் நடந்த மக்கள் கவிஞர் மன்றத்தின் பாட்டுப்போட்டி நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்தியவர்.

2016: கவிமாலை சிங்கப்பூர் அமைப்பில் உட்கணக்காய்வாளராக இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/kavimaalai/public_html/wp-includes/functions.php on line 4757