Loading Events

« All Events

  • This event has passed.

கவிமாலை 232 ஆவது சந்திப்பு – கவிதைப்போட்டி அறிவிப்பு

September 28, 2019 @ 6:30 pm - 9:00 pm

கவிமாலை 232 ஆவது சந்திப்பு – கவிதைப்போட்டி அறிவிப்பு

பரிசுத்தொகை 250 சிங்கப்பூர் வெள்ளி – நினைவூட்டல்*

சிங்கப்பூர் கவிமாலையின் 232 ஆவது மாதாந்திரச் சந்திப்பான வரும் செப்டம்பர் மாதச் சந்திப்பின் கவிதைப்போட்டிக்கு “கண்ணோரம் கண்ணீர்க் கடல்”  என்னும் கருவில் கவிதைகள் வரவேற்கப்படுகின்றன.  மரபு எழுதுபவர்கள் ஈற்றடியாகக் கொள்ளவும்

  1. கவிதை 16 வரிகளுக்குள் இருக்க வேண்டும் மரபுக் கவிதைகள் என்றால் அடிகள் கணக்கில் கொள்ளப்படாது. வரிகள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். உதாரணத்திற்கு விருத்தம் என்றால் இரண்டு கண்ணிகளும், வெண்பா என்றால் நான்கு கண்ணிகளும் மட்டுமே போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
  2. போட்டியில் பங்கேற்போர் சிங்கப்பூரில் வசிக்க வேண்டும். கவிமாலை சந்திப்பில் கலந்துகொள்பவர்களுக்கே பரிசு வழங்கப்படும்.
  3. போட்டிக்கவிதைகளில் சந்திப்பிழை, எழுத்துப்பிழை உள்ளிட்ட பிழைகளை முற்றிலுமாக தவிர்க்கவும். போட்டிக்கு அனுப்பும் முன்னர் தங்கள் கவிதையை பிழை பார்த்துத் திருத்தி பிழையின்றி அனுப்பவும்.
  4. போட்டிக்கவிதைகள் கருப்பொருள் மொழிவளம், படைப்பாக்கத் திறன் மற்றும் புதிய சிந்தனை ஆகியவற்றின் கீழ் மதிப்பிடப்படும். நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது
  5. ஒருவர் ஒரு கவிதை மட்டுமே அனுப்பலாம்
  6. கவிதைகளை WORD மற்றும் PDF ஆகிய இரண்டு வடிவிலும் அனுப்பவும். புகைப்படம் எடுத்து அனுப்புதல் அல்லது JPEG வடிவங்கள் தவிர்க்கவும்.
  7. போட்டிக்கு வரும் கவிதைகளைக் கவிமாலையின் அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களில் பயன்படுத்திக் கொள்ள கவிமாலைக்கு முழு உரிமை உண்டு

தாங்கள் எழுதும் கவிதைகள் வந்துசேர வேண்டிய கடைசி தேதி 22-09-2019

கவிதைகள் அனுப்ப வேண்டிய முகவரி : poems@kavimaalai.com

முதல் பரிசு – தலா 50 வெள்ளி * இருவருக்கு. வழங்குபவர்கள் திரு இரத்தின வேங்கடேசன், தலைவர் இலக்கிய களம் அவர்கள் மற்றும் திரு அருமைச் சந்திரன் அவர்கள், தயாரிப்பாளர்.

இரண்டாம் பரிசு – தலா 30 வெள்ளி * மூவருக்கு வழங்குபவர் திரு ஜோதி மாணிக்கம் அவர்கள், ஶ்ரீ விநாயகா எக்ஸ்போர்ட்ஸ்

மூன்றாம் பரிசு – தலா 20 வெள்ளி * மூவருக்குவழங்குபவர் திரு ஜெகதீஸ் அவர்கள் – நிறுவனர், மித்ரா தங்கும் விடுதி.

தங்களது கவிதைகளை எதிர்நோக்கி..

நன்றி

கவிமாலை

Details

Date:
September 28, 2019
Time:
6:30 pm - 9:00 pm

Organizer

Kavimmalai

Venue

NLB
100 Victoria St, 188064 Singapore + Google Map

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/kavimaalai/public_html/wp-includes/functions.php on line 4552