இரவுமரம்

0
303

ஒரு தொற்றுக் காலத்தின் தேய்பிறை இருப்பு

ஒலியறு இரவில் கவியும் பால்நிறப் படிமம்

இருண்ட அலைபேசித் திரைச் சாலையில்

எப்போதேனும் ஒளிர்ந்தடங்கும் அகால ஊர்தி

ஓயாது கடையும் காற்றாடி உறுமலில்

திரண்டு புழுங்கும் தனியுடல் வெம்மை

அரவமற்ற தாழ்வாரக் குழல்விளக்கில்

எரியும் கைவிடப்பட்ட காலத்தின் மௌனம்

போர்த்தப்பட்ட பியானோவில் மூச்சடைத்து நிற்கும்

உரையாடலற்ற பொழுது

உன் வானத்திலிருந்து அருளும் சிறுதுளி போதும்

இலைகளெங்கும் துளிர்க்கும் என் இரவுமரம்