சற்று என்பது

0
350

சற்று என்பது சற்றாகவே இருந்தது

இரகசிய முத்தத்தின் நீளங்களில்

அதற்குப் பின்னான வெட்கங்களில்

பிறகுதான்

சற்று என்பது சற்று அல்ல

நம் பாலம் விரிசலுற்றபோது

சற்று என்பது சற்று அல்ல

நம் நிலம் மேனி சிலிர்த்தபோது

சற்று என்பது சற்றே அல்ல

நம் கலத்தில் துளை விழுந்தபோது

சற்றேறக் குறைய சற்று என்பது

அதற்கு முந்தைய பாரங்களை ஏற்று

அச்சு முறித்த கடைசிச் சொல்

அல்லது

அதில் காத்திருக்க வேண்டிய கண்ணியம்

அல்லது

உன் குழந்தையின் சாயலில் தெரியும் நீ