சிறுகோட்டுப் பெரும்பழம்

0
293

சிறுமலரைப் பறிப்பதென எண்ணியே துவங்கியது

கிழக்கின் ஆரஞ்சுப் பழத்தைப் பறித்துவிடும் பேராசை

வானேகும் மலையின் சாய்மானத்தில்

முட்டி வலிக்க வலிக்க ஏறத்தான் வேண்டியிருக்கிறது

மெத்தென்ற புற்பாதமோ

நிழல் ஆசியோ

சுனைக் கருணையோ

எதையும் நுகரவிடாமல்

இழுத்தோடும் மழைப்பெருக்கென

புரவியை முடுக்குகிறது காலம்

கணிக்கவியலா காற்றின் திசையில்

உருமாறிய மலர் உருப்பெருங்கனியாய் கனக்க

உயிர்க்காம்பை இறுக்கி முகட்டில் நிமிர்ந்தால்

அந்திமக் கடலில் பழுத்து வீழ்கிறது

வாழ்வின் ஆரஞ்சு