நான் துய்த்துக் களித்த உடலொன்றை
உங்கள் முன் கிடத்தி வைத்திருக்கிறேன்
அவரவர் மூச்சுக் காற்றை ஊதி
உயிர்ப்பித்துக் கொள்ளுங்கள்
உயிர்த்ததும் அது
உங்களுக்கான உடல்தான்
என்னிடம் என்ன துய்த்தது
எனக் கேட்டுத் தொந்தரவு செய்யாதீர்
அவரவர் வீரியம்
அவரவர் துய்ப்பு