நினைவில் பறவையுள்ள கூடு

0
359

இதோ

நினைவில் பறவையுள்ள

கைவிடப்பட்ட கூடெனக் கரைகிறேன்.

நினைவுகள் பூத்துதிரும்

ஏதேனுமொரு கிளையில்

வந்தமர்.

அல்லினமைதி அச்சமூட்டுகிறது.

உன் சேகரங்களால் கட்டமைக்கப்பட்ட

என் சுள்ளியுடலுள்

நீயுதிர்த்துச் சென்ற

தூவல் சொல்லொன்றைக்

கவனமாகக் கைப்பிடித்துக் காத்திருக்கிறேன்.

கார்காலத்தின் முதல் துளிக்குமுன் திரும்பிவிடு