தமிழ்மொழி விழா

வளர்தமிழ் இயக்கத்தின் ஆதரவில் நடைபெறும் தமிழ் மாதவிழாவில் கவிமாலை தன்னை இணைத்துக்கொண்டு 2009 ஆண்டு தொடங்கி, தமிழ் மொழி விழாவின் முத்தாய்ப்பான நிறைவுநாள் விழாவை நடத்தி வருகிறது.

கடந்த ஏழு ஆண்டுகளாக அந்த விழாவை மறைந்த தமிழ் அறிஞர்களின் புகழ்போற்றும் விழாவாக கவிமாலை நடத்தி வருகிறது.  2016-ஆம் ஆண்டு சிங்கப்பூர் தமிழ்ச்சான்றோர் புகழ் போற்றும் விதமாக கீழ்க்கண்ட சான்றோர்களைப் பற்றி உள்ளூர் தமிழ் அறிஞர்கள் நினைவுச் சொற்பொழிவுகள் நிகழ்த்தினர்.

  • கவிஞர் சிங்கை முகிலன்
  • சொற்கொண்டல் முருகு சீனிவாசன்
  • தமிழ் நெறிக் காவலர் அ. விக்டர்

மலேசிய இளையர் விளையாட்டுத் துறைத் துணை அமைச்சர் மாண்புமிகு டத்தோ சரவணன் அவர்கள்  ‘தலைமுறை தாண்டும் தமிழ்’ என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

2016-ஆம் ஆண்டு தமிழ் மொழி விழாவுக்கான செலவுக்கு, அப்பல்லோ செல்லப்பா உரிமையாளர் திருசே.சங்கரநாதன்,  அபிராமி நகைக்கடை உரிமையாளர் திருஎஸ்.பழனியப்பன், முன்னாள் நாடாளுமன்ற நியமன உறுப்பினர் திரு இரா.தினகரன் ஆகியோர் நன்கொடை வழங்கினார்கள்.

தமிழ்மொழிவிழா-2019

varalarum-varigalum

Picture 1 of 43

தமிழ்மொழிவிழா-2015

தமிழ்மொழிவிழா-2014

தமிழ்மொழிவிழா-2013

தமிழ்மொழிவிழா-2012

தமிழ்மொழிவிழா-2011

தமிழ்மொழிவிழா-2010

தமிழ்மொழிவிழா-2009


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/kavimaalai/public_html/wp-includes/functions.php on line 4757