நூல்வெளியீடுகள்

0
2103

நமது கவிமாலை கடந்த காலங்களில் பல்வேறு நூல்வெளியீடுகள், இசைவட்டு வெளியீடுகள் ஆகியவற்றை நடத்தி,  அற்றை வெளியிடும் கவிஞர்களையும் படைப்பாளிகளையும் ஊக்கப்படுத்தி வருகிறது.. இதுவரை 90 க்கும் மேற்பட்ட இலக்கிய படைப்புகளை வெளியிட்டும், வெளியீடுகளுக்கு கவிமாலை தொடர்ந்து ஆதரவளித்து வந்துள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் கவிமாலையில் மாதம்தோறும் படைக்கப்படும் கவிதைகளில் சிறந்த கவிதைகள் தேர்வு செய்யப்பட்டு, பங்குபெறும் அனைத்து கவிஞர்களின் கவிதைகளும் இடம்பெறும் வண்ணம் நூலாகத் தொகுக்கப்பட்டு ஆண்டுதோறும் கவிமாலை கவிதை தொகுப்பு வெளியிடப்படுகிறது.

அந்நூல் அச்சிடவும் வெளியிடவும் ஆகும் செலவுகளை புரவலர்கள் ஏற்றுக் கொள்வதால் கவிமாலை விழாவில் அத்தொகுப்புநூல் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது.  2016-ஆண்டு வெளியிட்ட ‘சொல்மழை’ என்ற கவிதைத் தொகுப்பிற்கான செலவுத் தொகையை கவிஞர் இறை.மதியழகன் நன்கொடையாக வழங்கினார்.

புத்தகங்களைக் காண இங்கே சொடுக்கவும்