தங்கப் பதக்க விருது

0
1439

சிங்கப்பூரின் சிறந்த கவிதை நூலுக்கான தங்கப் பதக்க விருது புதுமைத்தேனீ மா. அன்பழகன் காப்பாளராகப் பொறுப்பேற்றது முதல் கடந்த 2009-ம் ஆண்டிலிருந்து  கவிமாலையால் வழங்கப்பட்டு வருகிறது.

இவ்விருது சிங்கப்பூரில் ஆண்டுதோறும்  வெளியிடப்படும் கவிதை நூல்களுள், சிறந்ததாகத் தேர்வு செய்யப்படும் நூலின் ஆசிரியருக்கு வழங்கப்படுகிறது;

கவிமாலை நிர்வாகிகளால் நியமிக்கப்படும் தேர்வுக்குழுவில் சிங்கப்பூரைச் சேர்ந்த நடுவர் ஒருவரும், இரண்டு வெவ்வேறு நாட்டின்  நடுவர்கள் இருவருமாக மூவரின் தேர்வுக்குட்பட்டு வெற்றியாளர் தேர்வு செய்யப்படுவார்.

வெற்றியாளருக்கு இரண்டு சவரன் தங்கச்சங்கிலியும் சான்றிதழும் வழங்கப்பட்டு விழா மேடையில் பொன்னாடை-மாலை மரியாதையுடன் சிறப்புச்செய்யபடுவார்.

புரவலர்களின் ஆதரவுடன் வழங்கப்படும் இவ்விருதுக்குரிய நிதியாதரவைக் கடந்த 2011-ம் ஆண்டு வரையில் தமிழ் வள்ளல் நாகை தங்கராசு அவர்களும் வெண்பாக்கவிஞர் இக்குவனம் அவர்களின் மறைவுக்குப்பின்னர் அவரது புதல்வர்களான இ.பாலசுப்பிரமணியன், டாக்டர் இ.சாமினாதன் ஆகியோரும் வழங்கி வருகிறார்கள்.

புகழுக்குரிய புரவலர்களுக்கு கவிமாலையின் நன்றிகள்.

சிறந்த கவிதை நூலுக்கான கவிமாலையின் தங்கப்பதக்க விருது வென்றோர் பட்டியல்

ஆண்டு விருது பெற்றவர்  படங்கள்
2009 கவிஞரேறு பிச்சினிக்காடு இளங்கோ  thangapathakkam_pichinikaduilango
2010 வழங்கப்படவில்லை
2011 கவிஞர் மு. தங்கராசன்  thangapathakkam_thangarasan
2012 கவிஞர் பா.திருமுருகன்  thangapathakkam_thirumurugan
2013 கவிஞர் அ.கி.வரதராசன்  thangapathakkam_akvaradharajan
2014 கவிஞர் மாதங்கி  thangapathakkam_maathangi
2015 கவிஞர் பார்வதி பூபாலன்  thangapathakkam_paarvathyboopalan
2016 கவிஞர் மலர்விழி இளங்கோவன்  thangapathakkam_malarvizhiilangovan
2017 கவிஞர் முத்துப்பேட்டை மாறன்  
2018 கவிஞர் சி.கருணாகரசு  
2019 கவிஞர் இன்பா