2021 க்கான தங்கமுத்திரை விருது விருது பெறுகிறார் கவிஞர் அஷ்ரப் அலி
2021 க்கான தங்கமுத்திரை விருது விருது பெறுகிறார் கவிஞர் அஷ்ரப் அலி

வளர்ந்துவரும் இளங்கவிஞருக்கான தங்கமுத்திரை விருது  கடந்த 2010-ம் ஆண்டுமுதல் கவிமாலையில் வழங்கப்பட்டு வருகிறது.

இவ்விருதுக்குரிய கவிஞர் அரை சவரன் தங்கக் காசுடன் சான்றிதழும் வழங்கப்பட்டு கவிமாலையின் விழாவில் மரியாதை செய்யப்படுவார்.

கவிமாலையின் சிறந்த இளங்கவிஞருக்கான இவ்விருது கவிமாலையின் ஆண்டுத்தொகுப்பு நூலிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த கவிதையை எழுதிய கவிஞருக்கானது.

இத்தேர்வுக்குழுவின் நடுவராக சிங்கப்பூரின் மூத்த தமிழறிஞரான முனைவர் சுப.திண்ணப்பன் அவர்கள் பணியாற்றித் தேர்வு செய்கிறார்கள்.

கவிமாலைக் கவிஞர்களிடம் அதிக ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்திவரும் தங்க முத்திரை விருதுக்கான நிதியாதரவினைத் தொடர்ந்து அளித்து வருபவர் வைர வணிகர்  திரு. மு.இராமமூர்த்தி அவர்கள்.

புகழுக்குரிய புரவலருக்கு கவிமாலையின் நன்றிகள்.

கவிமாலையின் தங்க முத்திரை விருது வென்றோர் பட்டியல்.

ஆண்டு விருது பெற்றவர்கள்  படங்கள்
2010 கவிஞர் லலிதா சுந்தர்
2011 கவிஞர் பனசை நடராசன் thangamuthirai_panasai
2012 கவிஞர் பீஷான் கலா  thangamuthirai_beeshan-kala
2013           கவிஞர் சபாமுத்து நடராசன்  thangamuthirai_sabamuthu
2014 கவிஞர் தாயுமானவன் மதிக்குமார்  
2015 கவிஞர் ராஜு ரமேஷ்  
2016 கவிஞர் தாம் சண்முகம்  thangamuthirai_tamshanmugam
2017 கவிஞர் காசிநாதன் சுதா  
2018 கவிஞர் பாலமுருகன்  
2019 கவிஞர் ஜோசப் சேவியர்  
2020 கவிஞர் அ.பிரபாதேவி
2021 கவிஞர் அஷ்ரப் அலி
2022 கவிஞர் இரா அருள்ராஜ்