கவிஞர் ஈரோடு தமிழன்பன் கலந்து கொள்ளும் கவிமாலை சந்திப்பு

0
1908

சிங்கப்பூர்க் கவிஞர்கள் மற்றும் கவிதை ஆர்வலர்களுடன் கவிமாலை ஒவ்வொரு மாதமும் கடைசி சனிக்கிழமை மாதாந்திரச் சந்திப்பினை நடத்தி வருகிறது. அந்தவகையில் கவிமாலையின் 254-வது சந்திப்பு நிகழ்ச்சி எதிர்வரும் 31. 07. 2021 சனிக் கிழமை மாலை 6:00 மணிக்கு Zoom செயலி வழியாக நடைபெறவிருக்கிறது.

‘தமிழ்க் கவிதை விடியலின் புதுவெளிச்சம்’ எனும் தலைப்பில் ஈரோடு தமிழன்பன் கவிதைகள் குறித்து திரு.தி.அமிர்தகணேசன் சிறப்புரையாற்றுகிறார். மேலும் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களின் சமீபத்தில் வெளியிடப்பட்ட மீயடுப்பு மீதிலே என்ற நூலில் அறிமுகப்படுத்தப்பட்ட யாப்பிலக்கண புதுமைகளைப் பற்றி பேசுகிறார் எழுத்தாளர் பவளசங்கரி.
ஈரோடு தமிழன்பன் கவிதைகளில் பிடித்த, படித்த கவிதை வாசித்தல், “கையருகில் வானம் “ எனும் தலைப்பிலான இம்மாதக் கவிதைப் போட்டி, பரிசளிப்பு போன்ற அங்கங்களும் உண்டு.
இந்த நிகழ்வில் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு நம்மிடையே கலந்துரையாடவிருக்கிறார்.
இணையம் வழி நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம். Zoom App ID: 238 635 9660. கவிஞர் அஷ்ரப் அலி தொகுத்துவழங்கவிருக்கும் இந்த நிகழ்வுக்கு அனைவரையும் அன்புடன் அழைக்கிறது கவிமாலை