மரபுக்கவிதைப் போட்டி 2021

0
2149

சிங்கப்பூரில் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக கவிதை வளர்ச்சிக்குப் பாடுபட்டு வரும் கவிமாலை அமைப்பு பொதுமக்களுக்கான மரபுக்கவிதைப் போட்டியை நடத்தவிருக்கிறது.
கவிதைகள் 16 முதல் 32 வரிகளுக்குள் இருக்க வேண்டும். ஒருவர் 3 கவிதைகளை அனுப்ப வேண்டும். சிங்கப்பூரர், நிரந்தரவாசி, முறையான வேலை அனுமதியில் இருப்போர் பங்கேற்கலாம்.  வேறெங்கும் வெளியாகாத சொந்தப் படைப்பாக இருக்க வேண்டும். வெவ்வேறு மரபுப் பாவினங்களாக இருந்தால் நல்லது. 
நாடு காக்கும் நாயகர்கள், கொன்னோய் கொரொனா, நீளும் இரங்கல்கள், சமூக வலித்தளங்கள், வான்புகழும் வள்ளுவர் எனும் கருப்பொருளில் கவிதைகள் இருக்க வேண்டும்.  முதல் பரிசாக $1000, இரண்டாம் பரிசாக $500, மூன்றாம் பரிசாக $250 வழங்கப்படும்.
கவிதைகளை kavimaalaisingapore@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். இறுதிநாள் 25 ஜுலை 2021. 
இப்போட்டிக்காக கவிமாலை  மரபுக்கவிதைப் பயிலரங்கை 03 ஜுலை 2021 மாலை 6.30 மணிக்கு நடத்துகிறது. Zoom வழியே நடைபெறும் இப்பயிலரங்கிற்கு 83633117/93264096 எனும் எண்ணில் முன்பதிவு செய்ய வேண்டும்.
சிங்கையில் தமிழ் செழித்திருக்க பொதுமக்கள் பெருமளவில் இப்போட்டியில் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறது கவிமாலை.