கவிமாலையின் கணையாழி இலக்கிய விருது
கவிமாலையின் நிறுவனர் கவிஞரேறு பிச்சினிக்காடு இளங்கோ அவர்களின் பெருமுயற்சியால் தொடங்கப்பட்ட கணையாழி இலக்கிய விருது கடந்த 2003-ம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியத்திற்கும் மொழி வளர்ச்சிக்கும் தொடர்ந்து தொண்டாற்றிய சிறந்த இலக்கியப் படைப்பாளிக்கு இவ்விருது வழங்கிச் சிறப்பிக்கப்படுகிறது.
ஆண்டுதோறும் கவிமாலை அமைப்பின் தேர்வுக்குழு விருதுக்குரியவரைத் தேர்வு செய்கிறது. விருதாளரின் மொழிசார்ந்த பட்டறிவு, படைப்பிலக்கியப் பங்களிப்பு, தமிழ் சார்ந்த பிற செயற்பாடுகளின் அடிப்படையில் விருதுக்குரியவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
இவ்விருது ஒரு சவரன் தங்கக் கணையாழியுடன்(மோதிரம்) சான்றிதழும் வழங்கப்பட்டு, விழா மேடையில் பொன்னாடை-மாலை மரியாதையுடன் விருதாளர் சிறப்புச் செய்யப்படுவார்.
இவ்விருது கவிமாலையின் புரவலர்களின் ஆதரவுடன் வழங்கப்படுகிறது. தொடக்கக் காலத்தில் திரு. பட்டுக்கோட்டை இராமகிருஷ்ணன் அவர்களாலும், தற்போது சிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளையின் நிறுவனர் திரு. எம்.ஏ.முஹம்மது முஸ்தபா அவர்களின் ஆதரவினாலும் வழங்கப்படுகிறது.
புகழுக்குரிய புரவலர்களுக்குக் கவிமாலையின் நன்றிகள்.
கவிமாலையின் கணையாழி இலக்கிய விருது வென்றோர் பட்டியல்
ஆண்டு | விருது பெற்றவர் | புகைப்படம் |
2003 | திரு. பி.கிருஷ்ணன் | |
2004 | வெண்பாச் சிற்பி கவிஞர் இக்குவனம் | |
2005 | திரு. ஜே.எம்.சாலி | |
2006 | திரு. பா.கேசவன் (சிங்கப்பூர் சித்தார்த்தன்) | |
2007 | திரு. பி.பி.காந்தம் | |
2008 | திரு.மு.தங்கராசன் | |
2009 | கவிஞர் பெ.திருவேங்கடம் | |
2010 | திரு. ஏ.பி.ராமன் | |
2011 | திரு. வை. சுதர்மன் | |
2012 | கவிஞரேறு திரு. அமலதாசன் | |
2013 | எழுத்தாளர் இராம.கண்ணபிரான் | |
2014 | முனைவர். பேராசிரியர் சுப. திண்ணப்பன் | |
2015 | திரு. எஸ்.எஸ். சர்மா | |
2016 | திரு. பால பாஸ்கரன் | |
2017 | கவிஞர் பாத்தேறல் இளமாறன் | |
2018 | கவிஞர் பாத்தூறல் முத்துமாணிக்கம் | |
2019 | கவிஞர் பாத்தென்றல் முருகடியான் | |
2020 | விருதாளர் இராம்.நாராயணசாமி | |
2021 | எழுத்தாளர் பொன் சுந்தரராசு | |
2022 | தமிழாசிரியர் சாமிக்கண்ணு | |
2023 | செ.ப.பன்னீர்செல்வம் |