வளர்ந்துவரும் இளங்கவிஞருக்கான தங்கமுத்திரை விருது கடந்த 2010-ம் ஆண்டுமுதல் கவிமாலையில் வழங்கப்பட்டு வருகிறது.
இவ்விருதுக்குரிய கவிஞர் அரை சவரன் தங்கக் காசுடன் சான்றிதழும் வழங்கப்பட்டு கவிமாலையின் விழாவில் மரியாதை செய்யப்படுவார்.
கவிமாலையின் சிறந்த இளங்கவிஞருக்கான இவ்விருது கவிமாலையின் ஆண்டுத்தொகுப்பு நூலிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த கவிதையை எழுதிய கவிஞருக்கானது.
இத்தேர்வுக்குழுவின் நடுவராக சிங்கப்பூரின் மூத்த தமிழறிஞரான முனைவர் சுப.திண்ணப்பன் அவர்கள் பணியாற்றித் தேர்வு செய்கிறார்கள்.
கவிமாலைக் கவிஞர்களிடம் அதிக ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்திவரும் தங்க முத்திரை விருதுக்கான நிதியாதரவினைத் தொடர்ந்து அளித்து வருபவர் வைர வணிகர் திரு. மு.இராமமூர்த்தி அவர்கள்.
புகழுக்குரிய புரவலருக்கு கவிமாலையின் நன்றிகள்.
கவிமாலையின் தங்க முத்திரை விருது வென்றோர் பட்டியல்.
ஆண்டு | விருது பெற்றவர்கள் | படங்கள் |
2010 | கவிஞர் லலிதா சுந்தர் | |
2011 | கவிஞர் பனசை நடராசன் | |
2012 | கவிஞர் பீஷான் கலா | |
2013 | கவிஞர் சபாமுத்து நடராசன் | |
2014 | கவிஞர் தாயுமானவன் மதிக்குமார் | |
2015 | கவிஞர் ராஜு ரமேஷ் | |
2016 | கவிஞர் தாம் சண்முகம் | |
2017 | கவிஞர் காசிநாதன் சுதா | |
2018 | கவிஞர் பாலமுருகன் | |
2019 | கவிஞர் ஜோசப் சேவியர் | |
2020 | கவிஞர் அ.பிரபாதேவி | |
2021 | கவிஞர் அஷ்ரப் அலி | |
2022 | கவிஞர் இரா அருள்ராஜ் | |
2023 | க.சங்கீதா |