மாணவர் கவிதைப் பரிசுகள்

    0
    1122

    மாணவர்களைக் கவிதையின்பால் ஆர்வம் கொள்ள வைக்கும் கவிமாலையின் முயற்சியாக 2012-ம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டது மாணவர்களுக்கான கவிதைப் பயிலரங்கு.

    இப்பயிலரங்கு இந்தியாவிலிருந்து வரவழைக்கப்படும் சிறந்த பட்டறிவுமிக்க  கவிஞர்களாலும் ஊள்ளூரின் புகழ் பெற்ற கவிஞர்களாலும் ஒரு நாள்முழுவதும் நடத்தப்பட்டு கவிதை எழுதப் பயிற்சியளிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் இப்பயிற்சியில் கலந்துகொள்கின்றனர்.

    பயிற்சி நாளன்று முடிவில் பயிற்சியரங்கிலேயே கொடுக்கப்படும் தலைப்புக்கேற்ற கவிதை எழுதும் போட்டி நடத்தப்படுகிறது: அப்போட்டியில் பங்கேற்கும் மாணவர்களின் கவிதையிலிருந்து சிறந்த கவிதைகள் சிங்கப்பூரின் புகழ்பெற்ற கவிஞர்களை நடுவர்களாகக் கொண்டு தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

    ஆண்டுதோறும் சிறந்த கவிதையை எழுதும் மாணவக் கவிஞர்களுக்கு மதிப்புமிக்க பரிசுகள் வழங்கப்படுகின்றன.தொடக்ககாலத்தில் கவிமாலையின் பொது நிதியிலிருந்தும் 2016-ஆம் ஆண்டு முதல் வள்ளல்  அப்துல் ஜலீல் அவர்களின் நிதியாதரவிலும் தங்கக்காசுகளாகவும் வெள்ளிப்பணமாகவும் வழங்கப்பட்டு வருகிறது.

    தொடர்ந்து புரவலர்களின் நிதியாதரவோடு இத்திட்டம் தொடர்கிறது. புகழுக்குரிய புரவலர்களுக்குக் கவிமாலையின் நன்றிகள்.

    கடந்த ஆண்டுகளில் பரிசு வென்ற மாணவர்கள்

    ஆண்டு பரிசு வென்றோர் பள்ளி
    2012 செல்வன் வசந்தன் இன்னோவா தொடக்கக்கல்லூரி
    செல்வி ஹரிணி தெமாசெக் தொடக்கக்கல்லூரி
    2013 செல்வன் அதியன் ஆறுமுகம் சங்காட் சாங்கி உயர்நிலைப்பள்ளி
    செல்வி அயினுள் நிசா மெக்பர்சன் உயர்நிலைப்பள்ளி
    2014 செல்வன் நிஹமத்துல்லா பெண்டிமீர் உயர்நிலைப்பள்ளி
    செல்வி மானசா விஸ்வேஸ்வரன் ராஃபில்ஸ் தொடக்கக்கல்லூரி
    2015 செல்வி தாரணி சிவக்குமார் ராஃபில்ஸ் பெண்கள் பள்ளி
    செல்வி பிரார்த்தனா மதுவந்தி பாசரிஸ் கிரஸ்ட் உயர்நிலைப்பள்ளி
    2016 செல்வி சுந்தரமோகன் சக்தி ராஃபில்ஸ் பெண்கள் பள்ளி
    செல்வி சத்தியசீலன் வர்ஷினி என்யூஎஸ் உயர்நிலைப்பள்ளி
    செல்வி சஞ்சனா யூசுன் தொடக்கக் கல்லூரி
    செல்வி ஆனந்தன் விஷ்ணுவர்தினி