ஆண்டுதோறும் பொதுவிடுமுறை நாளன்று கவிமாலை உறுப்பினர்கள் குடும்பத்துடன் பேருந்தில் முழுநாள் கவிமாலை நிகழ்வை நடத்தி வருகிறார்கள். அந்த மரபைப் பின்பற்றி 2015 டிசம்பர் மாதக் கவிமாலை நிகழ்வை கவிஞர்கள் சிங்கப்பூரில் புதிதாகத் துவங்கப்பட்ட டவுண்டன்-2 விரைவு இரயிலில் பயணம் செய்து இறுதியில் சிங்கப்பூர் புதிய மரபுடமைச் சின்னமாக யுனெஸ்கோவால் ஏற்றுக் கொள்ளப்பட்ட சிங்கப்பூர் தாவரவியல் பூங்காவில் சிறப்பாக நடைபெற்றது.
கவிமாலை நிகழ்வுகளில் கவிமாலைக் கவிஞர்களுக்கு பயிற்சிக் கவியரங்குகள் நடத்தியும், தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளில் கவிஞர்கள் பங்குபெற ஆலோசனைகள் வழிகாட்டுதல்கள் நல்கியும் வருகிறது.
அனைத்து வழிகளிலும் படைப்பாளிகளுக்கு ஊக்கமூட்ட ஆண்டுதோறும் உதவிவரும் புரவலர்கள், ஆதரவாளர்கள், கவிஞர்கள், ஊடகங்கள் உள்ளிட்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் கவிமாலையின் நெஞ்சார்ந்த நன்றி.