கவிமாலை 209 | ஜூலை 2017

0
681
ஜூலை மாதக் கவிமாலையில் எழுத்தாளர் அருண் சரண்யா
ஜாலான் புசார் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவுடன் இணைந்து மாதந்தோறும் கவிமாலை சிங்கப்பூர், கவிஞர்கள் சந்திப்பை நடத்தி வருகிறது.
209-ஆவது மாதச் சந்திப்பான, ஜூலை மாதக் கவிமாலைச் சந்திப்பு வரும் 29 .ஜூலை. 2017 சனிக்கிழமை அன்று மாலை சரியாக 7 மணிக்கு ஜாலான் புசார் சமூக மன்றத்தின் பின்புறமுள்ள தற்காலிக விலாசமான கிங்க் ஜார்ஜ் அவன்யூ புளோக் 804-இன் மூன்றாவது தளத்தில் உள்ள (சிங்கப்பூர்-200804) அரங்கத்தில் நடைபெறும். 
வழமை போல் “மனதில் நின்ற கவிதைகள்”, அதைத் தொடர்ந்து வடித்ததில், படித்ததில் பிடித்தது அங்கம் நடைபெறும். ஜூலை மாதக் கவிதைப் போட்டியில் வெற்றிபெற்ற கவிதைகளுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
சிங்கை வாசகர் வட்டத்தின் தலைவர் திருமதி சித்ரா இரமேஷ் அவர்கள் முன்னிலையில் கவிமாலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
76 நூல்களை இயற்றியுள்ள தமிழக எழுத்தாளர் திரு அருண் சரண்யா அவர்கள் ‘கற்பனையாளாராக இருத்தல்” என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு ஆற்றுவார்.
கவிஞர்கள் ஆகஸ்ட் மாதத்திற்கான கவிதைப் போட்டிக்காக “ஒன்று சேர்வோம்” என்ற தலைப்பில் கவிதைகளை இயற்றி வருமாறு கேட்டுக்கொள்கிறோம். கவிதைகளை poems@kavimaalai.com என்ற மின்னஞ்சலில் அனுப்பலாம்.
தமிழ்க் கவிஞர்கள், ஆதரவாளர்கள், இதனையே அழைப்பாகக் கருதி அனைவரும் வருகை தந்து பயனடைய அன்புடன் வேண்டுகிறோம்.
– தகவலுக்கு 9853 6465